|
|||||
இனிப்பு அவல் |
|||||
தேவையானவை : அவல் - 1/2 கிலோ அச்சு வெல்லம் – 1/4 கிராம் நெய் - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் - ஒரு மூடி துருவியது. ஏலக்காய் - 5 செய்முறை: 1.முதலில் ஏலக்காய் மற்றும் வெல்லத்தை போடி செய்ய வேண்டும். 2.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைய விட வேண்டும்.கரைந்து வெல்லத்தை வடிகட்டவும். 3.வடிகட்டிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் போதே ஏலக்காயைப் பொடி செய்து போட வேண்டும். 4.2 நிமிடம் கொதித்ததும் அதில் அவலை போட்டு தீயைக் குறைத்து அவல் வேகும் வரை நன்றாக கிளறி விட வேண்டும். ஒரு கரண்டி நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். 5.அவல் நன்கு வெந்ததும் அதில் துருவிய தேங்காயைச் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாற வேண்டும். |
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|