LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை :


அரிசி மாவு - 2 கப்

வெல்லம் பொடி செய்தது - 1 கப்

தேங்காய்த்துருவல் - அரை கப்

நெய் - 2 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்


செய்முறை:


1.வெறும் வாணலியில் அரிசி மாவை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.


2.வெல்லத்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.


3.வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்ததும், கீழே இறக்கி, அதை வடிகட்டவும். வடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் கொதிக்க விடவும்.


4.வடிகட்டிய வெல்ல நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பைத் தணித்துக் கொண்டு, வறுத்த அரிசி மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்துக் கிளறவும். 


5.பின் அதில் தேங்காய்த்துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, மாவு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் அதை கீழே இறக்கி வைத்து ஆறவிடவும். 


6.மாவு சற்று ஆறியவுடன், கைகளில் சிறிது நெய்யைத்தடவிக் கொண்டு, எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து மூடி சற்று விரல்களால் அழுத்தி, கொழுக்கட்டைப் பிடிக்கவும்.


7.எல்லா மாவையும் இப்படியே செய்து, நெய் தடவிய இட்லித் தட்டில் அடுக்கி, இட்லிப்பானையில் வைத்து, ஆவியில் 10 - 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

by Arul Jothi   on 18 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.