LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 629 - அரசியல்

Next Kural >

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இன்பத்துள் இன்பம் விழையாதான் - வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான். (துன்பம் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.)
மணக்குடவர் உரை:
இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், அதனால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன். இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வருந்துன்பத்திறகு அழியாதாரைக் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
இன்பத்துள் இன்பம் விழையாதான் - இயற்கை யாகவோ தன் முயற்சியாலோ தனக்கு இன்பம் வந்த விடத்து அதை நுகர்ந்தும் உள்ளத்தால் இன்புறாதவன்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - அவ்விரு வழியிலும் தனக்குத் துன்பம் வந்த விடத்து அதை நுகர்ந்தும் மனத்தால் துன்பமுறுவதில்லை. இன்பமுந் துன்பமும் ஒன்றாகக் கொள்பவன் இன்பத்தால் இன்புறுதலும் துன்பத்தால் துன்புறுதலும் இல்லை என்பதாம்
கலைஞர் உரை:
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.
சாலமன் பாப்பையா உரை:
தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.
Translation
Mid joys he yields not heart to joys' control. Mid sorrows, sorrow cannot touch his soul.
Explanation
He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.
Transliteration
Inpaththul Inpam Vizhaiyaadhaan Thunpaththul Thunpam Urudhal Ilan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >