|
||||||||
இன்ஸ்டன்ட் முட்டை தக்காளி சாதம்(Instant Egg Tomato Rice) |
||||||||
தேவையானவை : பிரியாணி அரிசி - 3 கப் பச்சை மிளகாய் - 3 இஞ்சி&பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் மல்லி இலை மற்றும் புதினா இலை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது) எண்ணை - 2 ஸ்பூன் நெய் - 2 ஸ்பூன் பட்டை,கிராம்பு,ஏலக்காய் - 3 :2 :3 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் வெங்காயம் - 2 உப்பு - 2 ஸ்பூன் தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 வெங்காயம் - 1 முட்டை - 3 உப்பு - 1/4 ஸ்பூன் செய்முறை : 1.அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.ஒரு குக்கரில் எண்ணை மற்றும் நெய் காயவைத்து பட்டை கிராம்பு ஏலம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் பச்சமிள்காய் சேர்த்து வதக்கவும்.பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.பின்பு தக்காளி,மல்லி இலை,புதினா சேர்த்து குழைய வதக்கவும்.பின்பு மஞ்சள் தூள் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து ஆறு கப் தண்ணீர் ஊற்றி ஊறவைத்த அரிசியை வடித்து கொட்டி குக்கரை மூடி விடவும் 2.இரண்டு விசில் வரும் வரை குக்கரை அடுப்பில் வைக்கவும்.இப்போது முட்டைக்கு முட்டை ,வெங்காயம் மற்றும் பச்சை மிள்காயை சேர்த்து கலக்கி பனியார சட்டியில் வைத்து குழுயில் முட்டை கலவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும் 3.ப்ரஷர் அடங்கிய குக்கரை திறந்து பொரித்த முட்டைகளை சேர்த்து 1/2 ஸ்பூன் நெய் சேர்த்து ஒரு கிளறு கிளறி விடவும்.சுவையான முட்டை தக்காளி சாதம் எளிதில் தயார் |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|