LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்!!

விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 24. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் இன்று நடந்தது. இந்த விழாவில் சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, நித்யாமேனன், இயக்குநர் ஹரி, விக்ரம் கே குமார், சிவகுமார், கார்த்தி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 24 படத்தின் டிரெய்லர்லாரும் மற்றும் பாடல்கள்களும் இந்த விழாவில் வெளியிடப்பட்டன.  

இந்த விழாவில் நடந்த சில சுவாரசிய தகவல்கள் பின்வருமாறு,

சிவகுமார் பேசுகையில்,

சைலண்ட் கில்லர் சூர்யா, சைலண்ட் சகலகலா வல்லவன், முதல் முதல்ல 1975ல கல்யாண் ஹஸ்பிடல்ல ஒரு சின்ன தொட்டியில சுண்டு விரல அசைச்சிகிட்டே ஒரு குழந்தை படுத்திருந்தான். இப்போ உண்மையாவே சைலண்ட் கில்லர் தான் அவரு என்றார்..

மதன் கார்க்கி பேசுகையில்

சகலகலா வல்லவன் கமல் சாருக்கு அப்பறம் வித்யாசமான முயற்சி எடுக்கறது சூர்யா சார் தான், இவங்க கூட்டணி பிரம்மாண்டமான கூட்டணி.. ஒரு மிகப்பெரிய முயற்சி, அதுக்கு மிகப்பெரிய அளவுல ஏ.ஆர்.ரஹ்மான் குடுத்துருக்காரு, கண்டிப்பாக இந்தப் படம் பிரம்மாண்ட ஹிட் அடிக்கும் என்றார்.

சரண்யா பேசுகையில்,

ஒரு பெரிய படத்துல அம்மா ரோல் இருக்கறதே பெரிய விஷயம் , அதுலயும் நல்ல கேரக்டரா அமையுறது ரொம்ப பெரிய விஷயம் எனக்குக் கிடைச்சிருக்கு. என்னை முதல் முதல்ல நடிகையாக்கினது மணி சார், என்னை அம்மாவா நடிக்க வெச்சது விக்ரம் தான். சூர்யா சைலண்ட் கில்லர்னு அவங்கப்பா சொன்னாரு, அவரு சைலண்ட்லாம் இல்லை,ஆனா யாரு கிட்ட சைலண்ட்டா இருக்கணுமோ அவங்க கிட்ட இருப்பாரு. ரொம்ப ஒழுக்கமானவரு , இது ரெண்டாவது படம் சூர்யாவோட முதல்ல படம் ஹரி சாரோட வேல் படம், இப்போ 24.. அப்போ அதிகமா பேசினதே இல்லை, இப்போ நாங்க ரெண்டு பேரும் உண்மையாவே அம்மா ,மகனா நல்ல கம்பெனியாவே இருந்தாரு”.

வைரமுத்து பேசுகையில்,

அண்ணன் சிவக்குமார் அருகிலிருந்தேன்... ஒரு தந்தையாக அவரது நெகிழ்ச்சியை பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவருக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு அவரது பிள்ளைகள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்,. அவரது வளர்ச்சியை அவர் தந்தை பார்க்கவில்லை, ஆனால் அவரது பிள்ளைகளின் வளர்ச்சியைக் காண அவர் கொடுத்து வைத்துள்ளார். சினிமா துறை இது தொழில், கலைத் தொழில் , சினிமா ஒழுங்குக்கும், ஒழுக்கத்துக்கும் வினோதமாக இருக்கும் என நினைப்பவர்கள் இதைக் குறித்துக்கொள்ளவும், சினிமாவில் ஒழுக்கமானவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு சூர்யா தான் உதாரணம்...

சூர்யா நல்ல குழுவை தேர்வு செய்கிறார்... ”நாகேஷ் மரணப் படுக்கையில் இருக்கிறார்.. கமல் ஹாசன், நான் , என் மகன் கபிலன் ஆகியோர் ஏழு நாட்களுக்கு முன்பு சென்று பார்த்தோம்.நோயாளிகளுக்கு சில சின்னச் சின்னப் பொய்கள் பிடிக்கும், அப்படித்தான் கமல் ஹாசன் கவலைப்படாதிங்க சார் நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பீங்க, என ஒரு நல்ல பொய்யை சொல்கிறார், அதற்கு நாகேஷ் சொல்கிறார், டேய்! பொய்யெல்லாம் சொல்லாத நான் நிறைய முட்டாள்களோட வேலை செய்திருக்கேன், அதனால எனக்கு ஆயுள் கம்மி என்றார், ஆனால் சூர்யா நிறைய அறிவாளிகளோடு வேலை பார்க்கிறார் அவருக்கு ஆயுள் அதிகம் என்றவர் சினிமா ஒரு எக்ஸ்க்யூஷன், படப்பிடிப்புத் தளத்திலிருந்து பார்த்தால் தான் தெரியும், அப்படி விக்ரம் கே குமார் நல்ல காட்சியமைப்பை கொடுத்துள்ளார். ரஹ்மான் வேறு வேறு விதமாக இசையை கொஞ்சம் கூட நகலெடுக்காமல் எல்லா இசையும் கேட்ட பாட்டா இருக்கக் கூடாது, போட்ட பாட்டாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். இந்தப் படம் வெள்ளிவிழா பெறுமென நான் பொய்யெல்லாம் சொல்ல   மாட்டேன், 20 நாட்கள் ,மூன்று வாரம் ஓடினாலே ஹிட் தான். கள்ளத்தனமாக படம் பாராதீர்,இந்தப் படம் வெற்றி பெறும் என்றார்.

கார்த்தி பேசுகையில்,

இந்தப் படம் கொஞ்சம் கொஞ்சம் நான் பார்த்தேன்...இந்தப் படத்துல மணின்னு ஒரு பையன் நடிச்சிருக்கான் ஹீரோவா, கஜினி படம் சுட்டும் விழிச் சுடரே பாட்ட நான் ஏ.வி.எம் ஸ்டூடியோவுல பார்த்தேன்,. பாட்ட பார்த்தோன சொன்னேன் பொண்ணுங்களாம் செத்தாளுகன்னு, இப்போ மறுபடியும் நடந்துருக்கு, படத்துல என்னோட நானே பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு... அவ்ளோ அழகா இருந்தாரு. அப்பறம் ஒரு வில்லன் நடிச்சிருக்காரு. ஒரு பத்து வயசு வரைக்கும் எனக்கு வில்லனா இருந்தது என்னோட அண்ணன் தான். ஆனால் இப்போ ஸ்க்ரீன்ல வேற லெவல்... ரஹ்மான் ராக்கிங் சார், அப்படியே சவுண்ட் ட்ராக் ரிலீஸ் பண்ணுங்க. எங்க மொபைலுக்கு தேவைப்படும் என்றவரிடம்

உங்களுக்கு ஒரு டைம் ட்ராவல் கிடைச்சா உங்க அண்ணன் 5 வயசுலருக்காரு, எப்படி பழி வாங்குவீங்க? என்ற கேள்வி கேட்டபோது,

”என் அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் பிராணிகள் மேல என்ன அபப்டி ஒரு பாசம்னு தெரியாது, ரெண்டு பேரும் வீட்லருந்து நாய வாக்கிங் கூட்டிட்டுப் போவாங்க, அப்போ நானும் வரேன்னு சொன்னா அதெல்லாம் வேணாம் நீ சின்னப் பையன்னு சொல்லிடுவாங்க.. இப்போ எனக்கு அந்தச் சான்ஸ் கிடைச்சா எங்க அப்பாவ அந்தத் தெருவுல நிக்க வெச்சு இவங்க ரெண்டு பேரும் என்ன செய்யறாங்கன்னு பாக்கணும்”.என கலகலவென பேசினார் கார்த்தி.

சரியான படத்த நல்ல படத்த ஜெயிக்க வைங்க, தப்பான படம் நானே குடுத்தா கூட ஜெயிக்க வைக்காதிங்க

இந்த விழாவில் சூர்யா பேசுகையில், அனைவருக்கும் நன்றி கூறி ஆரம்பித்தவர் , நான் இங்க நிற்கறதுக்கு காரணமா இருக்கற அத்தனை தம்பிகளுக்கும் நன்றி.. என் இந்த டிரெய்லரைப் பார்த்துட்டு நீங்க கைதட்டினீங்களே... அப்படி இருந்துச்சு. இதுக்காகத் தான் ஒரு வருஷம் உழைப்பக் கொட்டினோம்... நான் உங்களையெல்லாம் சந்திச்சே ஒரு வருஷம் ஆச்சு.. மத்த ஹீரோக்கள் எப்படின்னு தெரியல, ஆனா நான் உங்களை சந்திக்கலைங்கறங்கற குற்ற உணர்ச்சி இருக்கு. இருந்தாலும் மற்ற ஊர்கள்ல இருந்து கூட இந்த நிகழ்ச்சிய பார்க்க வந்ததுக்கே நன்றி சொல்லிக்கிறேன்...

இந்தக் கதையக் கேக்கும் போதே நான் தயாரிக்கணும்னு தோணுச்சு. இந்த மொத்த டீமுக்கும் நான் நன்றி சொல்லணும். எனக்கு ஒரு நாலரை மணி நேரம் கதை சொன்னாரு விக்ரம் கே குமார்.  கதைய கேட்டு முடிச்சோன நான் எழுந்திருச்சு நின்னு கைதட்டின்னேன். அப்படி ஒரு படம் இது..

அப்பா இப்படியெல்லாம் பேசினதே கிடையாது அவ்ளோ ஆத்மார்த்தமா பேசினாரு. நான் இந்த அளவுக்கு இங்க வந்து நிற்கறேன்னானா அதுக்கு நீங்க தான் காரணம்

“சரியான படத்த நல்ல படத்த ஜெயிக்க வைங்க, தப்பான படம் நானே குடுத்தா கூட ஜெயிக்க வைக்காதிங்க... அப்போ தான் நல்ல படங்கள் குடுக்க முடியும்”..

இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு அழகான ஆடியோ லான்ச்சா மாத்திட்டீங்க.. இந்தப் படம் பத்தி ஞானவேல் நான் எல்லாரும் பேசிகிட்டு இருந்தப்போ எல்லாரும் சொன்னது ஏ.ஆர்.ரஹ்மான் தான் கரெக்டா இருப்பாருன்னு சொன்னாங்க. இந்தப் படத்துக்காக எந்த லெவலும் போகணும்னு தோணுச்சு, ரஹ்மான் சார் கிட்ட அப்படியே போய் மியூசிக் போடச் சொல்லிக் கேட்க முடியுமா?.... ரஹ்மான் சாருக்கு ஒரு மெஸேஜ் ஒண்ணு போட்டேன்.

”நான் உங்களுக்கு ஒரு கதை சொல்ல ஆசைப்படறேன்னு சொன்னேன்... ஒரு 2 நாள் கழிச்சு ஓகேனு பதில் அனுப்பினார். ரஹ்மான் சார் ஒரு அரைமணி நேரம் ஓகேவான்னு கேட்டாரு. விக்ரம் ஓகேன்னு சொல்லிட்டாரு”.

எனக்கு நாலரை மணி நேரம் சொன்னவரு அவருக்கு எப்படி அரை மணிநேரத்துலன்னு யோசிச்சேன். ரம்ஜான் நோன்பு டைம் , ஒரு 5.30 மணி கதை சொல்லிகிட்டு இருக்கும் போதே ”நான் போயிட்டு வர்றேன்னு இருங்கன்னு சொல்லிட்டு நோன்பு முடிச்சுட்டு திரும்ப வந்தவர்,  ஆறரை மணி நேரம்  பொறுமையாகக் கதை கேட்டு ஓகே சொன்னாரு.

அவரு ஓகே சொல்லி திரும்ப ஒரு மெஸேஜ் அனுப்பினதுதான் இன்னும் நம்பிக்கையா இருந்தது. பார்த்தா முதல் பாட்டே ’காலம் என் காதலி” , அவரு ஆரம்பமே அப்படி ஒரு பாட்டு குடுத்தாரு... பாட்டு வந்துடுச்சு இதுக்கு எப்படி விஷுவல் பண்ணப் போறோம்.. என்ன செய்யப் போறோம்னு யோசிச்சோம்.

இதுக்கு ஒரு குட்டிக் கதை சொல்லணும்னு ஆசைப் படறேன்

” ஒரு சின்னக் குழந்தை ஒரு சாக்லேட் கடைக்கு அம்மாவோட போகுது...அங்க குழந்தையோட அம்மா சாக்கலேட் எடுத்துக்கன்னு சொன்னா எடுக்கலை, கடைக்காரரும் எடுத்துக்கோன்னு பாட்டில் மூடியெல்லாம் ஓபன் பண்ணித் தர்றாரு. அந்தக் குழந்தை அப்பவும் எடுத்துக்கலை. அப்பறம் கடைக்காரர் அவரே கையால நிறைய சாக்லேட் எடுத்துக் குடுத்தோன சட்டைல அப்படியே வாங்கிகிட்டா அந்தப் பொண்ணு, அந்தப் பொண்ணோட அம்மா வெளிய வந்து கேட்டாங்க என்ன இன்னிக்கு சாக்லேட் எடுன்னு சொல்லியும் எடுக்காம இருந்தியேன்னு அதுக்கு அந்தக் குழந்தை சொன்னா அந்த அங்கிள் கை பெரிசா இருந்தது, என் கை சின்னது, அவரு கையால எடுத்தா நிறையா சாக்கலேட் கிடைக்கும்னு சொன்னா”.. அப்படித் தான் கடவுளும் நாம கேட்டா கொஞ்சமா கேட்போம் அதே அவரு குடுத்தா நிறையாக் குடுப்பாரு. அப்படித்தான் ரஹ்மான் சாரும் அவரு கிட்ட மியூசிக்லாம் கேக்க முடியாது நாம நினைக்கிறத விட அதிகமா குடுப்பாரு..

நான்லாம் ரொம்ப தற்குறிங்க, அதனால தான் என்னை சுத்தி அறிவாளிகளா சேர்த்து வேலை செய்யறேன். ரஹ்மான் சார் அவ்ளோ பணிவானவர். எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் உங்க கூட வேலை செய்யறது.

பேசிக்கொண்டிருக்கும் போதே சமந்தா பத்தி சொல்லுங்கண்ணா என்றவுடன் “சமந்தா அந்த ஷூட்டிங் ஸ்பாட் வந்தாலே “ டேய் நீ இவ்ளோ ஒழுங்காடா” மாதிரி எல்லாரும் ஸ்மார்ட்டா மாறிடுவாங்க,

நித்யா மேனன் மரியாதையானவங்க... 20 வருஷம் ஒண்ணா சேர்ந்து வாழ்ந்த தம்பதின்னு அவங்களுக்கு சொன்னா போதும் அப்படியே மாறிடுவாங்க அது எப்படின்னு தான் தெரியல. என சொல்லிக்கொண்டிருக்கும் போதே அண்ணா கேரக்டர் பத்தி சொல்லுங்கண்ணா என ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, அதெல்லாம் படத்துல பார்க்கலாமே என சிரித்தவர் படத்துல ஆர்ட் டைரக்‌ஷன், அவ்ளோ நல்லா பண்ணியிருக்காங்க. படம் ஆத்மார்த்தமா செஞ்சிருக்கோம்,.

எங்களுக்காக எட்டு மணியிருந்து இந்த ஆடியோ ரிலீசுக்காக காத்திருந்ததுக்கே “ ஐ லவ் யூ” கண்டிப்பா இந்தப் படம் நல்லா இருக்கும்னு நம்பறோம் என முடித்தார்.

நமக்குக் கிடைச்ச நேரம், இந்த வாழ்க்கை அவ்ளோ முக்கியம், +2 வினாத்தாள் பார்த்துட்டு 20 க்கும் மேலான மாணவர்கள் தற்கொலை செஞ்சுருக்காங்க. ப்ளீஸ் அப்படியெல்லாம் செய்யாதிங்க. பொறுமையா இருங்க நம்மல்லாம் இங்க சும்மா வரல, வாழ்க்கை பேப்பர் இல்ல கட் பண்ண..நான்லாம் டம்மி பீஸு காலெஜ் படிச்சுட்டு என்ன பண்றதுன்னே தெரியாம இருந்தேன். அதனால காத்திருங்க வாழ்க்கை கண்டிப்பா நல்லா இருக்கும் என்றார்.

by CinemaNews   on 11 Apr 2016  0 Comments
Tags: 24 இசை வெளியீட்டு விழா   கார்த்தி   சூர்யா   சிவக்குமார்   24 Movie   24 Movie Audio Launch     
 தொடர்புடையவை-Related Articles
கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு... கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...
செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!! செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!!
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
அமெரிக்கத்தமிழ் தொழிலதிபர்கள் சங்க வடகிழக்குப் பிரிவின் துவக்க விழா - சூர்யா தலைமை தாங்கினார்!! அமெரிக்கத்தமிழ் தொழிலதிபர்கள் சங்க வடகிழக்குப் பிரிவின் துவக்க விழா - சூர்யா தலைமை தாங்கினார்!!
24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்!! 24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்!!
குரு இயக்கத்தில் நடிக்கும் சிஷ்யன் !! குரு இயக்கத்தில் நடிக்கும் சிஷ்யன் !!
நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !! நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !!
இவர்கள் திரைக்கு வருவதற்கு முன்னால்? இவர்கள் திரைக்கு வருவதற்கு முன்னால்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.