LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

விமானத்தின் கருப்பு பெட்டியில் என்னதான் இருக்கிறது !! ஒரு ஸ்பெஷல் ரிப்போட் !!

ஒரு விமானத்தின் முக்கியமான பகுதிகளில் ஒன்று கருப்பு பெட்டி. இதன் பெயர் கருப்பு பெட்டி(Block Box) என்றிருந்தாலும் அது கரும் ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும். 


விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது விமானிக்கும், தரையில் உள்ள விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெறும். அதே போல், விமானத்துக்குள் விமானியும், துணை விமானியும் விமானத்தை இயக்குவது தொடர்பாக பேசிக் கொள்வார்கள். இவை அனைத்தும், கருப்பு பெட்டியில் பதிவாகும். பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்து சுக்குநூறாக நொறுங்கினாலும், தீப்பிடித்து முழுவதும் கருகினாலும் அல்லது கடலில் பல மைல் ஆழத்தில் மூழ்கினாலும் கூட இந்த கருப்பு பெட்டி மட்டும் பெரும்பாலும் சேதம் அடையாது. அவ்வளவு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது.


கண்டுபிடிப்பு :


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரனின் அப்பா, ஆஸ்திரேலிய விமான ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக பணிபுரிந்தவர். 1934ல் ஒரு விமான விபத்தில் பலியானார். கடந்த 1953ல் "காமெட்' என்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளான போது, அது பற்றிய விசாரணையில் டேவிட் வாரனும் ஈடுபட்டு உதவினார். அப்போதுதான் இதுபோன்ற விமான விபத்துகளைக் கண்டறியும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். அதன் பின், 1956ல் அவர் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிவித்தார். 


இருந்தாலும் டேவிட் வாரனின் கருப்பு பெட்டி  முழுப் பரிமாணம் மற்றும் பயனை உணர்ந்து அதை விமானங்களில் பொருத்த மேலும் ஐந்தாண்டுகள் தேவைப்பட்டன. அவரது கண்டுபிடிப்பு, உலக விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பான பயணத்துக்கு ஒப்பற்றதாக கருதப்படுகிறது.


விமானத்தில் கருப்புப் பெட்டி பொருத்துவதை முதன் முதலில் கட்டாயமாக்கியது ஆஸ்திரேலியாதான்(1960). 


கருப்பு பேட்டியின் நீளம், உயரம் : 


பொதுவாக கருப்பு பெட்டி 19.6 அங்குலம் நீளமும், 4.8 அங்குலம் உயரமும் கொண்டதாக இருக்கும் இந்த கருப்பு பெட்டி வி்மானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். 


அப்படி என்னதான் இருக்கு கருப்பு பெட்டியில் : 


கருப்பு பெட்டியின் மீது பல அடுக்குகளாக எக்கு தகடுகள் சுற்றப்பட்டு இருக்கும். அதனால், விமானம் மோதினாலோ, தீ பிடித்தாலோ, தட்ப வெட்ப நிலையில் அதிகபட்ச மாற்றம் ஏற்பட்டாலோ எந்த பாதிப்பும் கருப்புப் பெட்டிக்கு ஏற்படாது. 


மேலும் எத்தகைய விபத்து ஏற்பட்டாலும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் விமானத்தின் வால் பகுதியில் இந்த பெட்டி பொருத்தப்பட்டு இருக்கும். இவ்வளவு பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ள கருப்பு பெட்டியில் விமானம் பறந்த உயரம், பைலட்டுகள் அறையில் நடந்த உரையாடல், அங்கு ஏற்படும் ஒலிகள், பைலட்டுகளின் குரல்கள், விமானத்தின் வேகம், நேர்குத்து இயக்கம், விமானத்தின் இடம் என விமானத்தை பற்றிய உண்மையான நிலவரங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கும். எனவே விபத்து நடந்த போது நிலவிய சூழ்நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.


கருப்பு பெட்டி பூமியின் ஈர்ப்பு சக்தியை விட 3 ஆயிரத்து 500 மடங்கு அதிக ஈர்ப்பு சக்தியை தாங்க கூடியது. எனவே எவ்வளவு வேகத்தில் எந்த இடத்தில் விழுந்தாலும் உடையாது. லேசான சேதம் கூட ஏற்படாது. 


கருப்பு பெட்டியின் ஒரு பகுதியில் சிறிய குழாய் போன்ற பிஞ்சா என்ற கருவி பொருத்தப்பட்டு இருக்கும். கருப்பு பெட்டி தண்ணீருக்குள் விழுந்தால் இது சத்தம் எழுப்ப ஆரம்பித்து விடும். தொடர்ந்து 30 நாட்கள் சத்தம் எழுப்பி கொண்டே இருக்கும். இதில் இருந்து வெளியாகும் சிக்னல் 20 ஆயிரம் அடி தூரம் வரை செல்லும்.  


2012 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும்.


1000 டன் இரும்பு பாளத்தை போட்டாலும் நசுங்காது.


இதன் பேட்டரிகள் 6 ஆண்டுகள் செயல்படும்.


இரண்டு கருப்பு பெட்டிகள் : 


ஒரு விமானத்தில் இரு பெட்டிகள் இருக்கும்.


1. விமானிகளின் குரலும், கன்ரோட் டவரில் இருந்து வயர்லெஸ் மூலம் பேசுபவரின் குரலும், பதிவாகும் பெட்டி, காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் எனப்படும். (CVR- Cockpit Voice Recorder)இதை டேப் ரெக்கார்டரில் போட்டால் விபத்துக்கு முன் நடந்த பேச்சுவார்தைகள் இருக்கும் (கடைசி அரை மணி நேரம் மட்டும்)


2. இரண்டாவது பெட்டி ப்ளைட் டேடா ரெகார்டர் எனப்படும். அதில் முக்கியமான விமான இயக்க பதிவுகளும், விமானியின் செயல்களும் பதிவாகி இருக்கும். FDR - Flight Data Recorder. இதை கணணியில் போட்டால் கிராப் வரும், இன்னும் நல்ல கணணியில் போட்டால் விமானம் போவது படமாக (கிராபிஸ்) வரும்.


விபத்து நேர்ந்தால் அதிகம் பாதிக்காத வகையில், 2 பெட்டிகளும் வால் பகுதியில்தான் வைக்கப்பட்டு இருக்கும். இரண்டு கருப்பு பெட்டிகளும் 25 மணி நேரம் நடைபெறும் சம்பவங்கள், உரையாடலை பதிவு செய்யும். 


கருப்பு பெட்டியை மீட்பதில் உள்ள சிரமங்கள்...


கடலுக்கு அடியில் நீரின் வெப்பம் 104 டிகிரியாகவும், அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கும் 7 ஆயிரம் பவுண்டாக இருப்பதால் அத்தனை ஆழத்தில் உள்ள கருப்பு பெட்டியை நீச்சல் வீரர்கள் முலமாகவோ, சாதாரண நீர் மூழ்கி கப்பல் மூலமாகவோ மீட்டு வருவது முடியாத ஓன்றாகும். 


எனவே கடல் மட்டத்திலிருந்து கேபில் இணைப்புடன் கூடிய ரி்மோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் சிறிய நீர்மூழ்கி வாகனத்தை இயக்கி கருப்பு பெட்டியில் இருந்து வரும் சிக்னல் முலம் அதை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 


கருப்பு பெட்டி கையில் கிடைத்தால்தான் விபத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் நடக்காமல் தடுக்க முடியும்.


விரைவில் கருப்பு பெட்டிகளை விமானத்தில் மட்டும் அல்லாமல், பேருந்துகளிலும் பயன்படுத்த இந்திய அரசு முற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அப்படி எல்லா பேருந்துகளிலும் பொருத்தும் பட்சத்தில் பேருந்து விபத்துக்கான காரணங்கள் தெளிவாகவும், விரைவாகவும் தெரியும்.

by Swathi   on 27 Mar 2014  0 Comments
Tags: Flight Black Box   Black Box   Facts Black Box   கருப்பு பெட்டி   விமான கருப்பு பெட்டி   Cockpit Voice Recorder   Flight Data Recorder  
 தொடர்புடையவை-Related Articles
விமானத்தின் கருப்பு பெட்டியில் என்னதான் இருக்கிறது !! ஒரு ஸ்பெஷல் ரிப்போட் !! விமானத்தின் கருப்பு பெட்டியில் என்னதான் இருக்கிறது !! ஒரு ஸ்பெஷல் ரிப்போட் !!
பேருந்துகளிலும் இனி கருப்பு பெட்டி !! பேருந்துகளிலும் இனி கருப்பு பெட்டி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.