LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம்(உத்தமம்) நடத்தும் பதின்மூன்றாவது உலகத் தமிழ்க் கணினி மாநாடு

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம்
(உத்தமம்)

பதின்மூன்றாவது உலகத் தமிழ்க் கணினி மாநாடு¸ பாண்டிச்சேரி, இந்தியா

பத்திரிக்கைச் செய்தி

        உத்தமம் நிறுவனம் தனது பதின்மூன்றாவது உலகக் கணினித் தமிழ் மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21ம் நாட்களில் நடத்தத் திட்டமிட்டிருப்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.  உத்தமம் நிறுவனம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களை இணைப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிறுவனம் தொடங்கிய கடந்த பதினாறு வருடங்களில் பன்னிரண்டு மாநாடுகளை பல்வேறு நாடுகளில் நடத்தி உலகெங்கிலும் உள்ளத் தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளமை தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தியாகும். தமிழகம்¸ சிங்கப்பூர்¸ மலேசியா, செர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் மாநாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தி உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்நாடுகளில் ஒருங்கிணைய வைத்துத் தமிழ்க் கவிஞர் கனியன் பூங்குன்றனார் தன்னுடைய அழகான புறநானூறு பாடலில் இயம்பியிருப்பது போல "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" என்னும் வாக்கைச் சிறப்புற நடைமுறைப்படுத்தி வருவதில் உத்தமம் நிறுவனம் பெருமை கொள்கிறது.  இம்மாநாடுகள் "நீர் வழிப் படூம் புணைபோல முறைவழிப் படூம் ஆருயிர்" என்னும் நம் கவிஞர் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க கணினி வழி தமிழர்களின் ஆருயிரை முறைவழிப்படுத்தி வருவது பெருமைக்குரிய ஒன்றே!  இவ்வகையில் உத்தமம் நிறுவனத்தின் பதின்மூன்றாவது மாநாட்டைப் புதுவை மாநகரில் முதல் முறையாக நடத்துவதில் தமிழர்கள் நாம் அனைவரும் பெருமையடைய வேண்டும்!  நம் மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த இம்மண்ணில் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் மற்றும் கணினி குறித்துத் தங்களின் முயற்சிகளை எடுத்தியம்ப ஒருங்கிணைவது எண்ணித் தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமை கொள்ளவேண்டும்.  இம்மாநாட்டைச் சிறப்புற நடத்த பேராதரவு அளித்திட முன் வந்திருக்கும் புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு அரங்கசாமி அவர்களுக்கும்¸ புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. வி. முத்து அவர்களுக்கும் பல்லவன் கல்வி நிறுவனங்கள், அரசு சார், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் உத்தமம் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் அனந்தகிருட்டிணன் ஆகியோருக்கும், ஏனைய தமிழ் நல்லுள்ளங்களுக்கும் உத்தமம் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் மற்றும் கட்டுரைகளை அனுப்பவேண்டிய நாட்கள் ஆகியன குறித்தான செய்திகளை உத்தமம் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் வெளியிடுவோம்.  மேலதிக செய்திகளுக்கு உத்தமம் நிறுவனத்தின் தலைவர் வாசு அரங்கநாதனைத் தொடர்புகொள்ளலாம்.

 

வாசு அரங்கநாதன், தலைவர், உத்தமம் நிறுவனம், தமிழ்ப் பேராசிரியர்¸ பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம், அமெரிக்கா

கு. கல்யாணசுந்தரம்¸ செயற்குழு உறுப்பினர்¸ தேசிய தொழிற் நுட்பக் கல்வி நிறுவனம், லுசான், சுவிட்சர்லாந்து

தி. மணியம், பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் நிறுவனம், சிங்கப்பூர்
முனைவர் மு. இளங்கோவன், பேராசிரியர், தமிழ்த்துறை, பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி

 

For More Details visit: www.infitt.org

by Swathi   on 23 Mar 2014  0 Comments
Tags: World Tamil Computer Conference   உலகத் தமிழ்க் கணினி மாநாடு   உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம்   உத்தமம்   INFITT   International Forum for Information Technology     
 தொடர்புடையவை-Related Articles
சிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு !! சிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு !!
சிங்கப்பூரில் பதிநான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் பதிநான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு
13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம் 13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம்
உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம்(உத்தமம்) நடத்தும் பதின்மூன்றாவது உலகத் தமிழ்க் கணினி மாநாடு உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம்(உத்தமம்) நடத்தும் பதின்மூன்றாவது உலகத் தமிழ்க் கணினி மாநாடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.