LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

இந்த வார நட்சத்திர பலன்கள் (04 – 02 – 2018 முதல் 10 - 02 – 2018 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர் எம். ஏ. - 9994811158   

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி
இந்த வாரம்  பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும். திருமண வாய்ப்புகள் தேடிவரும். நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. உயர்அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவே, ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
பரணி
இந்த வாரம் நீங்கள் தெய்வீக சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.  விரும்பிய ஆடை, ஆபரணங்கள், பிடித்தமான நல்ல உணவு, ஆகியவை கிடைக்கும்.  அறிஞர்கள் நிறைந்த மேடைகளில், கௌரவப் பட்டங்கள் உங்களை அலங்கரிக்கும்.   தொழில் விஷயமாகத் தீட்டிய புதிய, முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றிகரமாய் முடியும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகள் தங்கள் புதிய திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். கடன் கொடுத்தவர்கள் கெடுபிடி செய்வர்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் . பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்ர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு  மகிழ்ச்சி அடைவீர்கள்.  எதிர்பார்த்த இனங்களில் இருந்து தாமதமின்றி தனவரவுகள் வந்து மகிழ்ச்சி தரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். முக்கிய பணிகளில் சுறுசுறுப்புக் குறைந்து, சொம்பல் அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம்  சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள்.  உறவினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்குக் காரியத்தடைகள், காலதாமதங்கள் காரணமாகப் பின்னடைவுகள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். உயர்திகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வும் பெறுவீர்கள்.  வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் விபத்தில் சிக்க நேரிடலாம். கவனம் தேவை.
ரோகிணி
இந்த வாரம் தொலை தூர சுபச்செய்திகளை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் முன்றேற்றத்துக்கான புதிய வழிகள் தென்படலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.வீட்டில் உறவுகளின் வருகையால் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம்  என ஆனந்தம் பொங்கும். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் பொருளாதார நிலை சீராக இருக்கும். சிலருக்கு வீட்டில் திருமணத்திற்கான வரன் தேடும் முயற்சிகளில் முனைப்பாக இறங்குவர். சந்ததி விருத்தி ஏற்படும்.  மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவி கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். அரசாங்க விருதுகள் கிடைத்துப் புகழும் ஓங்கும். வாக்கு வன்மை ஓங்கி, அதன் மூலமாக. ஆதாயம் அடைவீர்கள். பூரண சயன சுகம் ஏற்படும்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் சிறப்பான பொருளாதார உயர்வுகள் ஏற்படும். பூஜை வழிபாடுகளால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும்.  தொழிலில் எதிர்பார்த்தபடி ஆதாயங்கள் இருக்கும். அரசு அதிகாரிகளால் சிலருக்கு நன்மைகள் ஏற்படலாம். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம்.
திருவாதிரை
இந்த வாரம் வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். மனமகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபத்தை அதிகரிப்பீர்கள்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் விருந்தினர் வருகையால் வீட்டில் சந்தோஷம் பெருகும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர். அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள் செலுத்துவதற்குத் தேவையான பணவுதவிகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய சாதனைகள் புரிந்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு மனச் சஞ்சலங்களும், அலைச்சல்களும் ஏற்படலாம். நாட்களில் புதிய முயற்சிகளாலும், தனவரவு அதிகரிப்பதாலும், கேளிக்கைகளில் ஈடுபடுதல், இனிய பயணங்கள் என எல்லாமே நன்மையாகவே நடக்கும். வியாபரிகளுக்கு வியாபார விஷயமான நற்செய்திகள் வரும். விற்பனைத் திறமைகளைக் காட்டித் தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். அதிகாரிகளின் சந்திப்பு அனுகூலமாய் இருக்கும்.
பூசம்
இந்த வாரம் சாதுக்கள் தரிசனம் மற்றும் பண்ணிய கதைகள் கேட்டல் என பொழுது பக்திமயமாகக் கழியும். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்தபடி முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும், கௌரவத்தையும் அடைவீர்கள்.எதிர்பார்பார்ப்புக்கு மேல் தாராளமான பணவரவு அதிக்கரித்து மனமகிழ்ச்சி கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பெரிய மகான்களின் தரிசனமும் கிடைக்கும். சிலருக்கு வியாபாரப் போட்டிகளால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பணிபுரியும் நண்பர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால்   பதவி உயர்வுகள் கிடைக்கும்.
ஆயில்யம்
இந்த வாரம் உங்களுக்குப் பணம் சம்பாதிப்பதில் எப்பொதும் இல்லாத அளவுக்கு ஊக்கம் ஏற்படும். சுறுசுறுப்பாகப் பணிபுரிந்து இலக்கை எட்டுவீர்கள். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். காவல்துறை மற்றும் இராணுவப் பணியாளர்கள் பல சாகஸங்களை நிகழ்த்துவர். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளிடம் அனுசரித்துச் சென்றால் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்களால் ஆதாயம் அதிகரிக்கும்.  

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். அதன் காரணமாகச் சந்தோஷம் பொங்கும். மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம் ஏற்படும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
பூரம்
இந்த வாரம் உங்கள் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் உடன் பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும்.  சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம்.  சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். ஞானிகள் மற்றும் பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பக்கத்து வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.
ஹஸ்தம்
இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய கடின உழைப்பால் மட்டுமே நல்ல இலாபமோ, அதிக பலனோ கிடைக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும்.   வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக   ஞானத்தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.
சுவாதி
இந்த வாரம் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத தனவரவுகள் ஆகியவை ஏற்படும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். எண்ணிய எண்ணங்கள்யாவும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் சுபகாரியங்களுக்காக இல்லமே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். வியாபார சம்பந்தமான பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.  புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் நீங்கள் முக்கிய விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். எல்லாவகையிலும் சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர்.
அனுஷம்
இந்த வாரம் சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கைச் சுலபமாக அடைவீர்கள். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.
கேட்டை
இந்த வாரம் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். சிலர் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம்
இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள்.  கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.
பூராடம்
இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச்செலவுகள் ஏற்படும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும்.எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீடு, கடை வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். திடீர்ப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, தங்கள் பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்துக்கு நல்லது. தொழிலில் உற்பத்தி பாதிப்புக்கள் ஏற்படலாம். ஆயினும்,  எதிர்பார்த்த இனங்களில் எடுக்கும் முயற்சிகளில் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீர்கள். அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும்.  உல்லாசமாய்ப் பொழுது போக்கும் விதமாக, நமக்கு எல்லா நாட்களும் விடுமுறை நாட்களாக இருப்பதில்லை.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் இல்லத்தில்  மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களால் மகிழ்ச்சி பொங்கும்.. பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும் வழக்குகளில்  நிச்சியமாக வெற்றி கிடைக்கும். விஐபி களுடன் ஏற்படும் நட்பின் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். மற்றவர்களுக்கு நல்லது செய்வதின் காரணமாக உங்கள் கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
திருவோணம்
இந்த வாரம் நல்லவர்களுடனான தொடர்பால் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்பு மிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும்.  புதுப்புது நவீன பொருட்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். மனக் கவலைகள் அன்பு மனைவியின் அரவணைப்பால் குறையும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். வெளியூர் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.    அரசுப்பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம்.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் நெருங்கிய உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள்  கஜானாவும் பணத்தால் நிரம்பும். அன்பாகத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும்.
சதயம்
இந்த வாரம் அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபச் செய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் லாபம் அதிகரிக்கும். ஒளிமயமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். அன்பு உறவுகள் வருகையால் ஆனந்தம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும். பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் , விருப்பங்கள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும்.  மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் போதுமான தனவரவு இருக்கும். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். நல்லவர்களுடனான தொடர்பால் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். குழந்தைகளின் சேட்டை, செயல்பாடு கண்டு உங்கள்  முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் ஏற்படும்.  
ரேவதி
இந்த வாரம்  புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். வீண்செலவுகளைக் குறைத்துப் பணத்தைச் சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, அந்த இலாபத்தால் வீட்டில் வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.  பெண்கள், அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர்.

by Swathi   on 02 Feb 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (22 – 04 – 2018 முதல் 28 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (22 – 04 – 2018 முதல் 28 - 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (18 – 03 – 2018 முதல் 24 - 03 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (18 – 03 – 2018 முதல் 24 - 03 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.