LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர். எம். ஏ,  - 99948 11158

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும். தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். புதிய வீடு, பூமி வாங்கும் முயற்சிகள் வெற்றிபெறும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்துக்கு நல்லது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பத்தங்கள் கையெழுத்தாகும்.
பரணி
இந்த வாரம் மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். பொறாமை காரணமாக நண்பர்களே பகைவராவர். உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். வியாபாரிகள் இலாபத்தை அதிகரிக்கப் புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள்.  உடல் உபாதைகள் காரணமாகத் தொழிலில் உற்பத்தி பாதிப்புக்கள் ஏற்படலாம். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். புதிய தகவல்களால் புதிய உற்சாகமும் பிறக்கும். எதிர்பாராத தனவரவும் உண்டு. தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயல்படாமல், எதையும் ஆலோசித்துச் செயல்படுவது நல்லது. வியாபார நிமித்தமான தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம்.
ரோகிணி
இந்த வாரம் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். வியாபார நிமித்தமான தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு தொழில் திறன் அதிகரித்து, அதன் காரணமாக, வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். அரசுப்பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். அரசுப் பணியில் தங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றம் காண முயல்வீர்கள்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும். வேண்டுதல்களை நிறைவேற்றப் பல புண்ணியத்தல யாத்திரைகள் மேற்கோள்வர். சிலருக்குக் கையில் பணமும், மனதில் மகிழ்ச்சியும் நிலவும். மக்கள் தலைவர் ஆகும் வாய்ப்பு சிலருக்கு அமையலாம். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். நகரச் சந்தை நிலவரங்களை அறிந்து செய்யும் வியாபாரம் ஆதாயம் தரும். சிலருக்குக் கடல்  வாணிபம் பெருகி இலாபம் கிடைக்கும்.  

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.  ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும்.  வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். தொழிலிலும், சமூக வாழ்விலும் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுயதொழில் புரிவோர் தங்கள் பணிகளைத் திறம்படச் செய்வர். பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும், தொழிலில் அபிவிருத்தி  நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம்.
திருவாதிரை
இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.  உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். பிள்ளைகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டாலும், தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.
இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் அடைவீர்கள். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். இடைவிடாத வேலைபளு காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். சிலருக்குப் பணியில் இடமாற்றங்கள் ஏற்படும். எனவே  துன்பம் வரும் போது துவழாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும்.  தொலை தூரப்பயணங்களால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். அரசு அதிகாரிகளால் சிலருக்குத் இடையூறுகள் ஏற்படலாம்.   பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம்.  சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும்.
பூசம்
இந்த வாரம் நீங்கள் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு  ஞானத்தன்மை  அதிகரிக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  வழக்குகளில்  நிச்சியமாக வெற்றி கிடைக்கும். விஐபி களுடன் ஏற்படும் நட்பின் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். மற்றவர்களுக்கு நல்லது செய்வதின் காரணமாக உங்கள் கீர்த்தி பெருகும். சுயதொழில் புரிவோர் தங்கள் பணிகளைத் திறம்படச் செய்வர்.
ஆயில்யம்
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். சிலருக்குப் பயணங்களில் எதிர்பாராத சில பிரச்சனைகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடைகள், தாமதங்கள் ஏற்படலாம்.  அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். அரசுப் பணியாளர்கள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப்பயன்களை அடைவர்.

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். வியாபாரப் பயணங்கள் மூலமாக வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவீர்கள். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும்.
பூரம்
இந்த வாரம் தாய்வழி உறவுகள் உதவி செய்வார்கள். சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும் இனிய பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரியச் செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர்.  அரசாங்கத்தால் அனுகூல பலன்கள் உண்டு. உறவு மற்றும் நண்பர்களின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் எதிர்பாராத பணவரவு வரவு வரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். நல்ல பொருளாதார நிலையால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் நடக்கும். மணவாழ்க்கை மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்லும். நண்பர்களை சமாளிக்க, சரிக்கட்ட சாதுர்யமும், சாமர்த்தியமும் தேவைப்படும். அரசுப் பணியாளர்களுக்கு ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் இனிய பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். சந்ததி விருத்தி ஏற்படலாம்.  மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.  அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும்.
ஹஸ்தம்
இந்த வாரம் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்திற்காக உங்கள் சந்தோஷங்களை தியாகம் செய்வீர்கள். சிலருக்கு மனைவி, மக்களின் உடல் நிலையால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அரசு ஆதரவு, அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்கும். அதிகாரம் மிக்க பதவி  உயர்வு ஏற்படலாம். அன்புக்கு இனியவர்களால் உங்கள் கண்ணீர் துளிகள் துடைக்கப்படலாம். சோம்பல் அகற்றி  சுறுசுறுப்பாய் இருப்பது நல்லது.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் வீட்டில் திருமணம் சம்பந்தமான பேச்சுக்களால் மகிழ்ச்சி நிலவும். ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவதற்கு முன் நன்கு படித்தபின் கையொப்பம் இடவும். புதிய வீடு மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி பெரும். அதற்கான வங்கிக் கடனுதவிகள் சுலபமாகக் கிடைக்கும். பெண்களின்  அறிவுத்திறன் கூடும்.  போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். வியாபாரிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வியாபார விருத்தி ஏற்படும். அரசுப் பணிபுரிபவர்களுக்கு விருப்பப்படி புதிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் சுறுசுறுப்பாகப் பணிகளை ஆற்றி நல்ல பெயர் ஏடுப்பீர்கள். புனித யாத்திரைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புக்காக பல இடங்களுக்கு அலைந்து திரிய நேரிடும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். நல்லோர் சேர்க்கையால்  சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.
சுவாதி
இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் இருக்கும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு உழைத்தால்தான்  அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களால் கடன் வாங்கும் நிலையைத் தவிர்க்கலாம். உதவிகரமான எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலமாக இருக்கும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள்.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.
அனுஷம்
இந்த வாரம் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலருக்கு பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும்.
கேட்டை
இந்த வாரம் உங்களுக்கு மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி  தனவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். எதிலும் அவசரப்படாமல் வேலை  செய்தால் வெற்றி நிச்சியம். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் புதுத் தெம்பும், உற்சாகமும் கூடும். வீட்டில் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.  பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும்.
பூராடம்
இந்த வாரம் திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். சிலருக்குப்  பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம்.  மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.  சுபகாரியங்கள் நடைபெறும்.  வெற்றிகளைக் குவிக்க விழிப்புடன் செயல்பட்டால் இலக்குகளை எளிதில் எட்டலாம்.  புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். உடன் பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். பெரிய  மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்.  சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்தித்திறன் குறையும் வாய்ப்பு ஏற்படலாம்.
திருவோணம்
இந்த வாரம் வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச்செலவுகள் ஏற்படும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். எதையும் வெற்றியுடன் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். மேலிட செல்வாக்குக் கிடைக்கும். நவீன மாடல் வாகனம் வாங்கலாம். எக்ஸ்போர்ட், இம்போர்ட் தொழில்கள் சிறப்பாக இருக்கும்.  மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள்.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் தெய்வபலம் கூடும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.  பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும்.
சதயம்
இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு அழகிய நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். வாலிப வயதினருக்கு வலுவான அரசு உத்தியோகம் ஏற்பட வாய்ப்புண்டு. அரசு அதிகாரிகளுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படலாம், தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலைகள் மாறி  வருமானங்கள் உயரும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் பல வழிகளில் இருந்தும் பணவரவு கூடுதலாக இருக்கும்.  மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். பல வகையான உயர்ரக வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த,  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும் . பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர்.
உத்திரட்டாதி
இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும்.
ரேவதி
இந்த வாரம் சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும்.தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.

by Swathi   on 11 May 2018  0 Comments
Tags: இந்த வார ராசி பலன்கள்   ராசி பலன்கள்   நட்சத்திர பலன்கள்   வார நட்சத்திர பலன்கள்   இந்த வார பலன்கள்   Rasi Palangal   Daily Rasi Palangal  
 தொடர்புடையவை-Related Articles
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (18 – 03 – 2018 முதல் 24 - 03 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (18 – 03 – 2018 முதல் 24 - 03 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (04 – 03 – 2018 முதல் 10 - 03 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (04 – 03 – 2018 முதல் 10 - 03 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.