LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

இந்த வார நட்சத்திர பலன்கள் (18 – 03 – 2018 முதல் 24 - 03 – 2018 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர். எம்.ஏ., +91-99948 11158

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி
இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறன் அதிகரிக்கும். ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும் குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மதிப்பு உயரும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் தர்க்கம் செய்யாதிருப்பது நல்லது. உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும்.
பரணி
இந்த  வாரம் பெரியோர்களின் நல்வார்த்தைகள் கேட்டு, நலம் பெறுவீர்கள். தங்கள் சந்தோஷத் தருணங்களை குடும்பத்தாரோடு கழித்து மகிழ்வீர்கள். அதன் காரணமாக குடும்பத்தில் குதூகலம் நிலவும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிறைவேறும். கடைசியில் விருந்து, கேளிக்கைகள் என மகிழ்ச்சியின் உச்சிக்குச் செல்வீர்கள். அரசுப் பணியாளர்கள் அயராது உழைத்து உயர்அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வணிகர்களுக்கு, தர்ணா, கடையடைப்பு போன்ற பிரச்சனைகளால் தொழிலில் தடைகள் ஏற்பட்டு வருமானம் குறையும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்.
இந்த வாரம் எதிர்பார்த்த அளவு போதுமான வருமானங்கள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய்த் தகராறுகள் எழலாம். சமையலறையில் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். சொன்ன பேச்சுக் கேட்காத பிள்ளைகளின் செயல்களால் மன உளைச்சல் ஏற்படலாம். சிலருக்கு தேவதூதர்கள், மகான்களின் சந்திப்புக் கிடைத்து மனதில் அமைதி நிலவும். பொதுச்சேவை  போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிட்டும். விருந்தினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அரசு ஆதாயங்களால் தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு  கடன்கள் வாங்கும் நிலை ஏற்படலாம். சிலர் பழைய கவலைகளையெல்லாம் மறந்து மகிழ்ச்சிக் கடலில் மிதப்பீர்கள்.  உடல் ஆரோக்கியம் சீர்படும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படாது இருக்கப் பிறரிடம் கோபத்தைக் காட்டாது அமைதியைக் கடைப்பிடியுங்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் சகோதரர்கள் கை கொடுப்பர்.
ரோகிணி
இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். உங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். செலவுகள் அதிகமாகிப் பிறரிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படும். வேலை விஷயமாக அரசிடம் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் விரைவில் வந்துசேரும். வியாபாரத்தில் திட்டமிட்டபடி புதிய விரிவாக்கங்களைச் செய்து முடிப்பதால்  வருவாய் அதிகரிக்கும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் மேடைப் பேச்சாளர்களுக்குத் தங்கள் வாக்கு வன்மையால் வருமானம் அதிகரிக்கும். புதிய வியாபாரத் தொடர்புகளால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டும், பதவி உயர்வின் மூலமாகப் பணப்பயன்களை அடைவீர்கள். புதிய வியாபாரத் தொடர்புகளால் எதிர்பார்ப்புக்கு மேல் இலாபங்கள் குவியும். அரசுப் பணிபுரிபவர்களுக்கு உயர்அதிகாரிகளின் உதவியால் பதவி உயர்வுகள் கிடைக்கலாம். சிலருக்குக் கௌரவப் பதவிகள் கிடைத்துப் புகழும், பெருமையும் சேரலாம்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீடம்- 3,4 பாதங்கள்
இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும்,  கௌரவத்தையும் அடைவீர்கள். மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும்.   வரவை விடச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரும். தீயோர் தொடர்பால் வீண் பிரச்சனைகள் எழலாம். அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வியாபாரத்தில்  முன்னேற்ற வாய்ப்புக்கள் பிரகாசமாய் இருக்கும். புதிய தொழில் தொடர்புகள் ஏற்படலாம்.
திருவாதிரை
இந்த வாரம் வீடு, மனை ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். . பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் மனைவியிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பக்திக் கதைகள் கேட்டல், சாதுக்களின் தரிசனத்தால் மனம் அமைதி பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசால் ஆதாயங்கள் ஏற்படும். அதன் காரணமாகத் தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் பணம் எனும் மழைப் பொழிவு போதுமான அளவு விட்டு விட்டு இருக்கும். அதன் காரணமாக வீடு, மனை ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். உயர்வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும் பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். நல்லோர் சேர்க்கையாலும், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். அரசுப் பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறும்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் பக்திக் கதைகள் கேட்டல், சாதுக்களின் தரிசனத்தால் மனம் அமைதி பெறும். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், முழுமூச்சுடன் ஈடுபடும் வேலைகளில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், மாணவர்களுக்கு விளையாட்டு, தொலைக்காட்சி, கை பேசி ஆகியவற்றால் ஏற்படும், கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம்.  
பூசம்
இந்த வாரம் சினிமா, கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனப் பொழுது மகிழ்ச்சியாகக் கழியும். தூரதேசத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். சோம்பல் காரணமாகச் சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும். ஆயினும், எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை ஆன்மிக காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். மாணவர்கள் ஆழ்ந்து கவனமாகப் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். அதன் காரணமாகக் கல்வியில் தேர்ச்சி உண்டு.
ஆயில்யம்
இந்த வாரம்  வீட்டில் உறவுகளுக்கு இடையே, எப்போதும் இல்லாத அளவுக்கு ஒற்றுமை ஓங்கும். அளவுக்கு அதிகமாக அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின்  சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது. புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளைக் கடைப்பிடிப்பீர்கள்.  

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம்
இந்த வாரம் பணவரவு அதிகரித்தாலும், புதிய உறவுகளுடனான உல்லாசப் பொழுது போக்குகளாலும், விருந்தினர் வருகையாலும் செலவுகளும் அதிகரிக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பாசம் மிக்க பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் சுகம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்படும் முழுமையான ஈடுபாடு காரணமாக தாராளமான பணவரவு இருக்கும்.
பூரம்
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு கிடைக்கும். உறவுகள் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். அரசுவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிதாகத் தொழிலில் மேற்கொள்ளப்படும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். புதிய தொழிலாளர் சேர்க்கை காரணமாக தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் உற்பத்தி பெருகும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். மனதில் தெய்வ சிந்தனையும், தரும சிந்தனையும் நிலைத்திருக்கும். பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்.  வார மத்தியில்  உங்களுக்குச் சிறப்பான பலன்கள் ஏற்படும். சிலருக்குப் பண விஷயமான சிந்தனைகள் தலைதூக்கும். தந்தைவழி உறவுகளால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அத்தகையோரை விட்டு விலகுவது உத்தமம்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் நீங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும், ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தாரிடையே ஓரளவே ஒற்றுமை நிலவும். அரசுத் துறையினரால் அச்சம் ஏற்படலாம். திட்டமிடப்பட்ட செயல்களில் பிறரால் தடைகள் ஏற்படலாம். பிறரரின் உயர்வு கண்டு ஏற்படும் பொறாமை மற்றும் கோபங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி ஏற்படும்.
ஹஸ்தம்
இந்த வாரம் எந்தக் காரியத்தையும் முழுத் திறமையையும் காட்டித் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை எளிதாக அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். அரசு சம்பந்தமான வேலைகள் தாமதப்படலாம். தந்தை வகை உறவுகளால் தோல்லைகள் ஏற்படலாம். சிலருக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புக்கள் வரலாம்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் பொருளாதார நிலை உயர்வால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். சிலருக்குப் பிள்ளைப் பேறு ஏற்படலாம். மாணவர்கள் தங்கள் கடின உழைப்பால் கல்வியில் நல்ல தேர்ச்சி அடைவர். பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம். உங்களுக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். அதன் காரணமாகச் சிலருக்குக் கடன் வாங்க நேரலாம். ஞானிகளின் அருளால் நல்லதே நடக்கும்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். விருப்பத்துக்கு இணங்க அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடிவரும். தங்கள் சேவைகள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். அத்துடன் நல்ல  பாராட்டும் பெறுவீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் புதுப்புது மாற்றங்களால்  பண வருமானம் அதிகரிக்கும்.  வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும்.
சுவாதி
இந்த வாரம் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது, நல்ல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். தெய்வீக கைங்கர்யங்களில் ஆர்வம் ஏற்பட்டு தானதருமங்கள் செய்ய முற்படுவீர்கள். அனைத்துப் பணிகளிலும் மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும்.  சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். தாயாரின் அனுகூலமான வார்த்தைகள் உற்சாகம் அளிக்கும். அரசுப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் தெய்வ தரிசனத்தால்  மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.  தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். கல்வியில் குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு மனதில் எல்லையில்லா  மகிழ்ச்சி  ஏற்படும். அவர்கள் வழியே சென்று அவர்களைத் திருத்துவது நல்லது. புதிதாகத் திட்டமிடும் வியாபார முயற்சிகள் வெற்றி அடைந்து,  ஆதாயம் தரும்.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். விரும்பியதெல்லாம் கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிவர். பிள்ளைகளின் முன்னேற்றங்கண்டு பெருமை கொள்வீர்கள். இல்லத்துக்குத் தேவையான நவீன வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி அனுபவிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பின் சிறப்பு பாராட்டுப் பெறுவதோடு, பதவி உயர்வுக்கும் கைகொடுக்கும்.பொருளாதார நிலையை பொறுத்தவரை சீராக இருக்கும். சிலருக்கு ஏற்படும் திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அனுஷம்
இந்த வாரம் அனைத்து வசதிகளும் இன்பமும் ஏற்படும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பால் உயர்வு ஏற்படும். அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். தனவருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். அதற்கேற்ப செலவினங்களும் கூடும். தொழிலில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகளும் அதிகமாகும்.
கேட்டை
இந்த வாரம் நீண்டநாட்களாகத் தீட்டிய திட்டங்களின்படி வட இந்திய யாத்திரை செல்லும் நிலை ஏற்படலாம். துவக்கத்தில் புதிய தொடர்புகளால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் உறவுகளிடையே பாசம் அதிகரிக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் அபரிமிதமான அறிவுத் திறனால் கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் ஆகியவை கிடைக்கலாம். அரசு அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தொழில் அல்லது வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்கலாம்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.  அவசியம். மனைவியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் இல்லத்தில் இன்பம் பொங்குவதோடு, முன்னேற்றங்களும் தேடிவரும். உத்தியோக முயற்சியில் இருப்பவர்களுக்குப் போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.  அதைத் தக்க வைக்கக் கடின உழைப்புத் தேவை.
பூராடம்
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பலவழிகளிலும்  பணவரவுகள் அதிகம் கிடைக்கலாம். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாகத் தொழில் புரியும் வாய்ப்புக்கள் ஏற்படலாம்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய பரிசுத் திட்டங்களை அறிவிப்பீர்கள். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும்.  கற்பனை வளம் பெருகும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள்.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் மதிப்பு மிக்கப் பெரியோர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தங்கள் திறமைக்கு ஏற்றபடி புகழும், கௌரவமும் கூடும். அனைத்து வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் தர்க்கம் செய்யாதிருப்பது நல்லது. அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரும்.  உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும்.
திருவோணம்
இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து ஏற்படும் பணவரவால், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். குழந்தைகளின் நடவடிக்கைகள் சந்தோஷத்தைத் தரும். ஆக்கமும், ஊக்கமும் பெருக சுயமாக சம்பாதிக்கும் வழிமுறைகளைக் கண்டறிவீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் இல்லத்தரசியின் உதவிகள் கை கொடுக்கும். தங்கள் மதிப்பு, கௌரவம் ஆகியவை உயரும்.  தேவையான நேரத்தில் நண்பர்களின் உதவி கண்டிப்பாகக் கிடைக்கும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின்  சொல் கேட்டு நடந்தால் உன்னத நிலை அடைவர். சிலருக்கு அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். வரவுக்கு மீறிய செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துவது நல்லது. சிலருக்குப் பணி அல்லது வீடு ஆகிய இடமாற்றங்கள் ஏற்படலாம். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். புதிய கொள் முதல்களால் வியாபாரம் பெருகி இலாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும். பொழுது போக்குச் செலவுகள் அதிகமாகும். கடினமாக உழைத்தாலும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம்.
சதயம்
இந்த வாரம் திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். சுபகாரிய நிகழ்ச்சிகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். திட்டமிட்டுப் புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். கடமை உணர்வுமிக்க அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும்  வெற்றி அடையும். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் ஓரளவு இழப்பைத் தவிர்க்கலாம்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் பல வகையான உயரக வாகன வசதி அமையும். கணவன், மனைவி இடையே மிகுந்த ஒற்றுமை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். அலங்காரப் பொருட்கள் மற்றும் வாசனை திரவிய வியாபாரங்களில் அதிக இலாபம் காணலாம். அரசுப் பணியாளர்களுக்கு, அதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். வியாபாரிகளுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் உங்கள் கீர்த்தி பெருகும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  பணவரவு அதிகரிக்கும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். பணியில் முழுக் கவனம் செலுத்துங்கள். சக பணியாளர்களின் உதவியால் சங்கடங்கள் தீரும்.  
உத்திரட்டாதி
இந்த வாரம் விருந்துகளாலும், கேளிக்கை நிகழ்ச்சிகளாலும் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது.  பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். மனதில்  நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அரசு வேலையில் அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. சிலருக்கு விஐபி களின் நட்பு கிடைக்கும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.
ரேவதி
இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ வைப்பீர்கள். நல்லதொரு வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள்  உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். புதிய தொழில் தொடர்புகளாலும், அரசுவகை ஆதாயங்களாலும் தொழில் மேன்மை அடையும். இதுவரை எட்டாதிருந்த கனிகளெல்லாம் எட்டும்.

by Swathi   on 14 Mar 2018  0 Comments
Tags: Natchathira Palangal   Daily Rasi Palangal   Weekly Rasi Palangal   Intha Vaara Rasi Palangal   ராசி பலன்கள்   இந்த வார பலன்கள்   நட்சத்திர பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.