LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (18 – 06 – 2017 முதல் 24 - 06 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர் எம். ஏ. (99948 11158)

மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.
பரணி
இந்த வாரம் உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.   வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். அரசுப்பணி புரிபவர்களுக்கு  உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் உங்களுக்கு எதிர்பார்பார்ப்புக்கு மேல் தாராளமான பணவரவு அதிகரித்து மனமகிழ்ச்சி கூடும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் நண்பர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால்  எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சாதுக்கள் தரிசனம் மற்றும் புண்ணிய கதைகள் கேட்டல் என பொழுது பக்தி மயமாகக் கழியும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.

ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்குப் பணம் சம்பாதிப்பதில் எப்பொதும் இல்லாத அளவுக்கு ஊக்கம் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள்.கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  மற்றவர்களுக்கு நல்லது செய்வதின் காரணமாக உங்கள் கீர்த்தி பெருகும். வழக்குகளில்  நிச்சியமாக வெற்றி கிடைக்கும். விஐபி களுடன் ஏற்படும் நட்பின் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளிடம் அனுசரித்துச் சென்றால் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
ரோகிணி
இந்த வாரம் உங்கள் இல்லத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு  மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களால் மகிழ்ச்சி பொங்கும்.. மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை இணையதளங்களைப் பார்ப்பதில் வீணடிக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். வீண்செலவுகள் அதிகரிக்கும். பின்வரும் நாட்களில் புதிய முயற்சிகளாலும், வியாபரிகளுக்கு வியாபார விஷயமான நற்செய்திகள் வரும். அதிகாரிகளின் சந்திப்பு அனுகூலமாய் இருக்கும்
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் தனவரவு அதிகரிப்பதாலும், கேளிக்கைகளில் ஈடுபடுதல், இனிய பயணங்கள் என எல்லாமே நன்மையாகவே நடக்கும். புதிய பெண்களின் நட்பு மனக்களிப்புத் தரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பூஜை வழிபாடுகளால்  எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பயணத்தின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். அரசு அதிகாரிகளால் சிலருக்கு நன்மைகள் ஏற்படலாம். காரியத்தடைகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம்.

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும்.   தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.  புதிய சாதனைகள் புரிந்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
திருவாதிரை
இந்த வாரம் விருந்தினர் வருகையால் வீட்டில் சந்தோஷம் பெருகும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில விஷயங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். சிலருக்குப் பயணங்களில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம். தந்தைவழி உறவுகளால் எவ்வித  உதவியும் இருக்காது. மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள்.  உயர்திகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான  தகவல்கள் வந்து சேரும்.

கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம்,  என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தொலைதூர சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம்  இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும்.
பூசம்
இந்த வாரம் உங்களுக்கு ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  இறை சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.  உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று அனைத்து வழிகளிலும் அறிவுத் தெளிவு ஏற்படும். சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம்.  மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும்.
ஆயில்யம்
இந்த வாரம் பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும்.  தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள்யாவும் அனுகூலமாய் முடியும். பணவிஷயங்களில் யாரையும் நம்பி ஏமாறாமல், மிகுந்த எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் பயணத்தில் துன்பமும் ஏற்படும்.  கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி செய்வர். அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படும்.

சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் பக்தியில் அதிக நாட்டம் ஏற்படும். உயர்ரக ஆடை ஆபரணங்கள் மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். மக்கள் சேவையில் ஈடுபட்டதின் காரணமாக மக்களால் பாராட்டப்படுவீர்கள். குழந்தைகளின் சீரான முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும். இரவுப் பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங்களைப் புகுத்தி ஆதாயம் காண்பர். சிலருக்கு பணிநிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும்.
பூரம்
இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தீவிர முயற்சிக்குப் பின், இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.  
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத தனவரவுகள் ஆகியவை ஏற்படும். எண்ணிய எண்ணங்கள்யாவும் நிறைவேறும். புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக   ஞானத்தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்.

கன்னி

(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள்.  அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அன்பும், நட்பும் கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும்.  தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டும் கிடைக்கும்.
ஹஸ்தம்
இந்த வாரம் சுபகாரியங்களுக்காக இல்லமே விழாக்கோலம் பூணும். புத்திர பாக்கியம் ஏற்படும் திடீரென ஏற்படும். வியாபார சம்பந்தமான பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். நீங்கள் எதிர்பாராத விதத்தில் பணியில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.  அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும். எல்லாவகையிலும் சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம்
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பாரத தனவரவு உண்டு. நீங்கள் முக்கிய விருந்துகளில் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும்.

துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்குக் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக்கிடைக்கும். அதன் காரணமாக பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும்.
சுவாதி
இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். அதன் காரணமாகச் சந்தோஷம் பொங்கும். பெண்களால் இலாபம் ஏற்படும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாகக் கழியும்  விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள். போட்டியாளர்களைக் காட்டிலும்  அரிய சாதனைகளைப் புரிவீர்கள்.

விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது.
அனுஷம்
இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். பெண்களுக்குப் பணியிடத்தில் மற்றவர்களின் பூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும். வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.
கேட்டை
இந்த வாரம் சம்பாதிக்கும் திறன் மேம்படும். பணவரவு கூடும். அதன் காரணமாக தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும்.

தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் கடின உழைப்பால் மட்டுமே நல்ல இலாபமோ, அதிக பலனோ கிடைக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும்.
பூராடம்
இந்த வாரம் கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும்.  பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பக்கத்து வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பிள்ளைப்பேறு, தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். வேலையில் கடின உழைப்பே. தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள்  கஜானாவும் வேகமாகப் பணத்தால் நிரம்பும்.

மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.
திருவோணம்
இந்த வாரம்  புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஒளிமயமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். அன்பு உறவுகள் வருகையால் ஆனந்தம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். எதற்கும், உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். வீண்செலவுகளைக் குறைத்துப் பணத்தைச் சேமித்து நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும்.

கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், மனதில் தெய்வ பக்தி மேலிடும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும்.
சதயம்
இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் விருப்பங்கள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம்.

மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச்செலவுகள் ஏற்படும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும் வீடு, கடை வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர்..
உத்திரட்டாதி
இந்த வாரம் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். இதுநாள்வரை சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, தங்கள் பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்துக்கு நல்லது. அரசு வகையில் கிடைக்கும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம்.
ரேவதி
இந்த வாரம் தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். போதுமான தனவரவு இருக்கும். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். ஆழ்ந்த மனக் கவலைகள் அன்பு மனைவியின் அரவணைப்பால் குறையும்.குழந்தைகளின் சேட்டை, செயல்பாடு கண்டு உங்கள்  முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

by Swathi   on 14 Jun 2017  0 Comments
Tags: Vaara Palangal   Natchathira Palangal   27 Natchathira Palangal   Tamil Natchathira Palangal   Rasi Palangal   Natchathira Rasi Palangal   நட்சத்திர பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (25 – 06 – 2017 முதல் 01 - 07 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (25 – 06 – 2017 முதல் 01 - 07 – 2017 வரை)
நட்சத்திர வார பலன்கள் (18 – 06 – 2017 முதல் 24 - 06 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (18 – 06 – 2017 முதல் 24 - 06 – 2017 வரை)
நட்சத்திர வார பலன்கள் (04 – 06 – 2017 முதல் 10 - 06 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (04 – 06 – 2017 முதல் 10 - 06 – 2017 வரை)
நட்சத்தி வார பலன்கள் (28 – 05 – 2017 முதல் 03 - 06 – 2017 வரை) நட்சத்தி வார பலன்கள் (28 – 05 – 2017 முதல் 03 - 06 – 2017 வரை)
நட்சத்தி வார பலன்கள் (21 – 05 – 2017 முதல் 27 - 05 – 2017 வரை) நட்சத்தி வார பலன்கள் (21 – 05 – 2017 முதல் 27 - 05 – 2017 வரை)
நட்சத்தி வார பலன்கள் (14 – 05 – 2017 முதல் 20 - 05 – 2017 வரை) நட்சத்தி வார பலன்கள் (14 – 05 – 2017 முதல் 20 - 05 – 2017 வரை)
நட்சத்திர வார பலன்கள் (07 - 05 - 2017 முதல் 13 - 05 - 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (07 - 05 - 2017 முதல் 13 - 05 - 2017 வரை)
நட்சத்திர வார பலன்கள் (30 – 04 – 2017 முதல் 06 - 05 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (30 – 04 – 2017 முதல் 06 - 05 – 2017 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.