LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

இந்த வார நட்சத்திர பலன்கள் (06–08–2017 முதல் 12-08–2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர் - (99948 11158)

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் செல்வம் சேரும். உங்கள் அன்பு உறவுகளின் ஆசைகளை நிறைவேற்றும் காலம் இது. எனவே அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். வழக்கமாகச் செய்யும் காரியங்கள் வழக்கத்திற்கு மாறாக மாறுபடும் போது மாற்றி யோசித்தால் ஆதாயம் பெருகும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். தாமதப்படலாம். மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும்.  பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும்.
பரணி
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். புதிய வீடு, பூமி வாங்கும் முயற்சிகள் வெற்றிபெறும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். வெள்ளத்தனைய மலர் நீட்டம் போல் உங்களின் உழைப்புக் கேற்ற உயர்வும், முன்னேற்றங்களும் இருக்கும். எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது ஏற்றம் தரும். அரசு ஊழியர்களுக்கு, மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் சிலரின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள்.  சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய வீடு அமையும். பணிபுரியும் பெண்கள் வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து கவனமுடன் செல்லுதல் அவசியம். சிலருக்கு அரசு உதவிகள் தாமதமாகும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம். பொறாமை காரணமாக நண்பர்களே பகைவராவர்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயல்படாமல் எதையும் ஆலோசித்துச் செயல்படுவது நல்லது. அரசுப் பணியாளர்களுக்கு மனதுக்குப் பிடித்த, புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து கௌரவம் உயரும்.  விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். மாணவர்கள் நன்கு படித்து  தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
ரோகிணி
இந்த வாரம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிலவும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பத்தங்கள் கையெழுத்தாகும். சிலர். இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம்.  செய்தொழில், வியாபாரம் நன்றாக நடந்து இலாபம் பொங்கும். உங்கள் குறிக்கோளை அடைய உண்மையாக உழைப்பது நல்லது. மேற்கு, தென்மேற்கு திசையிலான பயணங்களைத் தவிர்க்கவும். மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும். அரசுப் பணியில் தங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். வியாபாரிகள் இலாபத்தை அதிகரிக்கப் புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள். எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய சுற்றுலாப் பயணங்களால் இன்புறுவீர்கள். நண்பர்களால் பல நன்மைகள்  ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உடன் பணிபுரிபவர்களால் வேலையில் தொந்தரவுகள் எழலாம். கருத்து வேறுபாடு ஏற்படாவண்ணம் இருக்க தகவல் பரிமாற்றத்தின் போது எதையும் நேரிடையாகப் பேசுங்கள். உங்கள் குறிக்கோள்களை அடைய உடல் பலத்தை விட மனோபலமே அவசியம். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.
திருவாதிரை
இந்த வாரம் சகோதர நன்மை, வெற்றி மற்றும் சந்தோஷமும் உண்டாகும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டாலும், தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள். உடன் பிறப்புக்களுடன் சுமுகமாகச் செல்வது நல்லது. பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றங்காண முயல்வீர்கள். சொந்த பந்தங்களிடையே ஒற்றுமை மேலோங்கும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம்  பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.  ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும்.  உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். கலை மற்றும் உருவாக்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு பூரண திருப்தி ஏற்படும் விதமாக மனதில் புதிய எண்ண அலைகள் தோன்றும்.  அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெறுவர்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். சாமர்த்திய சாலியாக விளங்குவார். சிலருக்குப் பிரிவும், வீண் செலவுகளும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள்  சுலபமாகக் கிடைக்கும். அரசின் உதவிகள் கைகொடுக்கும்.  எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு.
பூசம்
இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய்வழி உறவுகள் உதவி செய்வார்கள். தொலை தூரப்பயணங்களால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். அரசு அதிகாரிகளால் சிலருக்குத் இடையூறுகள் ஏற்படலாம்.  வீண் அலைச்சல்கள் ஏற்படும். எனவே,  துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள். ஆயினும், பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம்.
ஆயில்யம்
இந்த வாரம் விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கை ஈடுபாட்டால் செலவுகள் அதிகரிக்கும்.  கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  உடன்பிறப்புக்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். புத்திர பாக்கியம் ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.  சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். ஞானத்தன்மை அதிகரிக்கும். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும்.

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். பொருளாதாரம் என்னும் நட்சத்திரங்கள் வாழ்க்கையெனும் வானில் நிலையாகக் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்.  கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். நீங்கள் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு  உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப்பயன்களை அடைவீர்கள்.
பூரம்
இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும் இனிய பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு அருந்த முடியாத நிலை ஏற்படும். எதிரிகளின் பணமும் வந்து சேரும்.  சிலருக்குக் குழந்தைகளால் தொல்லையும், அவமானங்களும் ஏற்படலாம். விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும். சிலருக்குத் தாங்கள் விரும்பாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும்.  தொழில் திறன் அதிகரித்து முன்னேற்றம்   ஏற்படும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும் தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூல பலன்கள் உண்டு. உறவு மற்றும் நண்பர்களின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான ஆதாயம் ஏற்படும்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். வாக்குவாதத்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். அனாவசியச் செலவுகளைக் குறைப்பது நல்லது. புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். சிலருக்கு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும்.
ஹஸ்தம்
இந்த வாரம் தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். சந்ததி விருத்தி ஏற்படலாம்.  மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் வெற்றி பெறும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரியச் செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர். வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். பெண்களின்  அறிவுத்திறன் கூடும்.  பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.  தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு தலைமைப் பதவிகள் தேடி வரும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சுவாதி
இந்த வாரம் புதிய வீடு மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி பெரும். அதற்கான வங்கிக் கடனுதவிகள் சுலபமாகக் கிடைக்கும். வீட்டில் திருமணம் சம்பந்தமான பேச்சுக்களால் மகிழ்ச்சி நிலவும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். வியாபாரிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வியாபார விருத்தி ஏற்படும்.  அரசுப் பணிபுரிபவர்களுக்கு விருப்பப்படி புதிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் சுறுசுறுப்பாகப் பணிகளை ஆற்றி நல்ல பெயர் ஏடுப்பீர்கள். புனித யாத்திரைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புக்காக பல இடங்களுக்கு அலைந்து திரிய நேரிடும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.   நல்லோர் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும்.
அனுஷம்
இந்த வாரம் சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.  புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.  வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். அவர்களின் அன்பு மற்றும் ஆதரவால் இடமாற்றங்கள் நினைத்தபடி கிடைக்கும்.
கேட்டை
இந்த வாரம் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலமாக இருக்கும்.. அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் பணவரவு மற்றும் உத்தியோக லாபம் ஏற்படும். பெண்களால் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும். வியாபாரிகள் புதிய முதலீடுகளை செய்வது நலம் பயக்கும். சுகமான பயணங்களால் இன்பம் பெருகும். ஞானம் பெருகும். பணியில் உள்ளவர்களுக்கு நிலுவைத் தொகைகள் வந்து சேரும். கணவன்மார்களின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  பொன்நகை, புதிய ஆடை சேர்க்கை உண்டு.
பூராடம்
இந்த வாரம் உங்களுக்கு ஓரளவே பணவரவு இருக்கும்.  கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் உங்களுக்கு மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும்.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு உண்டாகும். கணவன் மனைவியடையே அன்பும் பாசமும் பெருகும்.
திருவோணம்
இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும்
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். பெரிய  மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்.  சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம்.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
சதயம்
இந்த வாரம் வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச்செலவுகள் ஏற்படும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.  உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.
ரேவதி
இந்த வாரம் மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது.

by Swathi   on 06 Aug 2017  1 Comments
Tags: நட்சத்திர பலன்கள்   ராசி பலன்கள்   நட்சத்திர ராசி பலன்கள்   வார ராசிபலன்கள்   இந்த வார ராசி பலன்கள்   Natchathira Palangal   Star Horoscope  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
14-Aug-2017 16:27:49 மரியன் SAVIC said : Report Abuse
வணக்கம், என் பெயர் மரியன் சேவிக்,  இங்கே ஒரு கடனைத் தேடிக்கொண்டவர்களுக்கு இந்த நடுத்தரத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன்.  நான் சுமார் 300 மில்லியன் ரூபா கடனை கடனாக பெற்றுக்கொண்டேன். கடனைப் பெறாமல் 20 மில்லியன் ரூபாய் இழந்தது. நான் இரண்டு வெவ்வேறு பெண்கள் இரண்டு முறை திருப்பி ஐக்கிய நாடுகள், இன்னும் என் கடன் பெறவில்லை, நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன், என் வணிக செயல்முறை அழிக்கப்பட்டது. ஜனவரி 2017 ஜனவரியில், கடவுளுக்கு மகிமை உண்டாகட்டும், ஒரு கடன் வாங்குபவர், திருமதி இவானா லுக்காவுக்கு என்னை அறிமுகப்படுத்திய ஒரு நண்பரை நான் சந்தித்தேன், அவள் கடன் நிறுவனத்தில் கடன் வாங்க எனக்கு உதவியது. எனது அடையாள அட்டையின் நகல் மற்றும் எனது கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டபின் எனது கடனை ஏற்றுக் கொண்டேன், அது நம்பமுடியாததாக இருந்தது, மற்றவர்களுடைய அதே பணத்தை நான் எடுத்துக் கொண்டேன் என்று நினைத்தேன், நான் மீண்டும் அவற்றைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்குள் கடன், "ஆம்" என் வங்கியில் இருந்து ஒரு விழிப்புணர்வு என் கணக்கில் ஒரு வைப்பு இருந்தது என்று நான் எடுத்துக் கொண்டேன்.  .  பல
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.