LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

இந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை

ஜோதிட இமயம், அபிராமி சேகர் எம். ஏ. - 99948 11158

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் பக்தியில் அதிக நாட்டம் ஏற்படும். குழந்தைகளின் முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும். உயர்ரக ஆடை ஆபரணங்கள் மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். மக்கள் சேவையில் ஈடுபடுவதின் காரணமாக மக்களால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங்களைப் புகுத்தி ஆதாயங்காண்பர். சிலருக்கு பணிநிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும்..
பரணி
இந்த வாரம் மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச் செலவுகள் ஏற்படும் சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். அடிக்கடி ஏற்படும் பயணங்கள் ஏற்படும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். புனித பயணங்கள் போவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். தொழிலில் சிறுசிறு ஆதாயங்கள் கிடைக்கும். எதிர்பாலருடன் சந்தோஷமான சந்திப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சி தரும். எதிர்பாராத விதமாக ஆசிரியர் மற்றும் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். சுயமுயற்சிகள் கண்டிப்பாக வெற்றிகளைத் தரும்..
ரோகிணி
இந்த வாரம் பூஜா வழிபாடுகளால்  எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பால் அரசுப் பணியார்களின் ஆசைகள் நிறைவேறும். குறுகிய காலத்திற்குக் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். எதிர்பாலருடன் ஏற்படும் சாதாரண பழக்கம் காதலாக மாற வாய்ப்பு உண்டு. அது பிரச்சனையாகக் கூட மாறலாம். துன்பம் மற்றும் செலவுகள் மிகுதியான பயணங்கள் தொல்லை தரும். வெற்றிக்கு முன் ஏற்படும், தடைகளையும் தாமதங்களையும் கண்டு மனம் பேதலிக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதீர்கள்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள். போட்டியாளர்களைக் காட்டிலும்  அரிய சாதனைகளைப் புரிவீர்கள். அடிக்கடி ஏற்படும் பயணங்கள் தவிர்க முடியாததாகும். பெண்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீண் அலைச்சல்களும், வெட்டிச் செலவுகளும் தவிர்க்க முடியாத தாகும். பக்தியில் அதிக நாட்டம் ஏற்படும்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் மடுப் போன்ற பணவரவை வைத்து, மலை போன்ற செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். சுறுசுறுப்பு, தைரியம், வெற்றி பெறுவதற்கான தூண்டுதல்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அள்ளித்தரும்.  தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். உயர்ரக ஆடை ஆபரணங்கள் மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்.
திருவாதிரை
இந்த வாரம் பிடிவாதம், வாக்குவாதம் ஆகிய இருவாதங்களால், மணவாழ்க்கை எனும் படகு ஆட்டம் காணும். ஆக்கபூர்வமான ஆலோசனை அளித்து அன்பு நண்பர்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவர். கணவன், மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராகும். எதிர்காலத் தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது முன்னேற்றத்தைத் தரும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் காய் கனிந்து பழமாவது போன்ற இனிய பயணங்கள் ஆதாயம் தரும். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமையும், உயர்வும் ஏற்படும். முழு மனதுடன் உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களுக்கும், உங்கள் நிறுவனத்துக்கும் சிறப்பான ஆதரவை நல்குவார்கள். தெய்வப் பிரார்த்தனையால், தாமதமான திருமணங்கள் தடபுடலாக நடக்கும். வேலை தேடுபவர்களுக்கு திறமைக் கேற்ப நல்ல பணி கிடைக்கும். புதிய பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப அந்தஸ்தும் உயரும்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் உங்கள் அபிலாஷைகள் அனைத்தும்நிறைவேறும். பொருளாதார நிலை மற்றும் குடும்ப நிலை சிறப்பாக அமையும். சிலருக்குப் பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால்  மனமகிழ்ச்சி ஏற்படும். தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். சிலரின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர்.
பூசம்
இந்த வாரம் உடன்பிறப்புகள் மூலமாகவும், குறுகிய தூரப் பயணங்கள் மூலமாகவும் நன்மை அடைவீர்கள். உங்கள் செயல்திறன் கூடும். பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும். செல்வ நிலையும் உயரும். பிற்கால நலன் கருதி சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உயர்  அதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும். சிலருக்குப் புதுவாகன யோகம் ஏற்படும். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். விவசாயிகளுக்கு அரசின் உதவிகள் எளிதில் கிடைக்கும்.
ஆயில்யம்
இந்த வாரம் சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாகக் கழியும். பணிபுரியும் பெண்களுக்குத் திருமண காலம் கூடிவரும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனிவீடு அமையும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் வரும். விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும்.மக்கள் சேவையில் ஈடுபட்டதின் காரணமாக மக்களால் பாராட்டப்படுவீர்கள். குழந்தைகளின் சீரான முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும்.

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் கையில் பணமும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கி வழியும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையாது இருக்கும். எதையும் சாதிக்கும் திறனும், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் முனைப்பும் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். எந்தவொரு காரியத்தையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செயல்பட்டால் உன்னத நிலையை அடையலாம். சீரான பொருளாதார நிலையால், மனதிற்குப் பிடித்தபடி மனை, வண்டி வாகனம் என அனைத்தும் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், கௌரவத்தையும் அடைவீர்கள்.
பூரம்
இந்த வாரம் உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் உங்கள் பொருளாதார நிலைகள் உயர்ந்து வலுப்பெறும். சிறு தொழில் புரிபவர்களுக்குத் தேவையான வங்கிக் கடனுதவிகள் கிடைத்துத் தொழில் சிறக்கும். எடுக்கும் முயற்சிகளில் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீர்கள்.  சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் மனதுக்கு மிகவும் பிடித்தமான பழைய உறவுகளின் வரவு இதயக் கோட்டையில், தென்றலென வீசும். மணமேடையேறும் மங்கல நாளும் வந்து, மனதில் மகிழ்ச்சி மலர்கள் பூக்கும். சிலர் வீட்டில் அள்ளி அணைத்திடவே பிள்ளைச் செல்வம், துள்ளி விளையாடும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறி வேகம் பிறக்கும். அதன் காரணமாக இலாபமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும். தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். புதிய வீடு, பூமி வாங்கும் முயற்சிகள் வெற்றிபெறும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பத்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு ஏற்படும். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும்.
ஹஸ்தம்
இந்த வாரம் சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். சந்ததி விருத்தி ஏற்படலாம்.  மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்துக்கு நல்லது. புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். .  சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம்,  என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  வாக்கு வன்மை ஓங்கும்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் புதிய வியாபார யுக்திகளால் அதிக இலாபம் அடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.  நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். உழைப்பு அதிகமாகி அதற்கேற்பப் போதுமான ஊதியம் இருக்காது. நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.
சுவாதி
இந்த வாரம் தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு  ஞானத்தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புக்கள் ஏற்படும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.  நல்லோர் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சினத்தை அடக்கி உடன் பிறப்புக்களுடன் ஒத்துச் செல்வது நல்லது.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் நம்பிக்கைகளும், விருப்பங்களும் மனம்போல் நிறைவேறும். நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களின் ஆலோசனைகள் ஆதாயம் தரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடிவடையும். அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும்.  தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும்.
அனுஷம்
இந்த வாரம் எடுத்த காரியங்களில் வெற்றி பெற கடின உழைப்புத் தேவைப்படும்.. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். உயர் பதவிகள்  உங்களைத் தேடிவரும். திருமணம் ஆகாதவர்களுக்குக் கொட்டு மேளம் கொட்டும் நேரம் வரும். புதிய சேமிப்புகளைத் துவங்கலாம்.  உறவு மற்றும் நண்பர்களின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும்.
கேட்டை
இந்த வாரம் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். உங்கள் உடலில் சுறுசுறுப்புக் குறைந்து, சொம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் உங்களுக்குத் திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.  விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம் புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.  மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.
பூராடம்
இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். அரசாங்கம் தரும் பிரச்சனைகளால் கவலை எழும். புண்ணிய யாத்திரைகளுக்கான வாய்ப்புகள் ஏற்படும். வெகு தூரப் பயணங்கள், வெளிநாட்டு வாழ்க்கை ஆகியவற்றால் நன்மை ஏற்படும். இனிய நண்பர்கள் உதவிட இரு கரம் நீட்டுவர். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.
.உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். அரசு வேலை அல்லது தனியார் கம்பெனியில் உயர் அதிகாரி வேலை கிடைக்க வாய்ப்பு உண்டாகும். எல்லாக் காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம்  பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும்.
திருவோணம்
இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்.  சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்தித்திறன் குறையும் வாய்ப்பு ஏற்படலாம். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். அரசுப் பதவியில் உள்ளவர்கள் அதிகாரிகள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.
சதயம்
இந்த வாரம் பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். உடன் பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள் பொருளாதார நிலையும் சீராகும். மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ரேவதி
இந்த வாரம் சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும்.

by Swathi   on 08 Jun 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (22 – 04 – 2018 முதல் 28 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (22 – 04 – 2018 முதல் 28 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.