LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

இரவின் வண்ண ஓவியம்! - இல.பிரகாசம்

வானில் மின்னுகின்ற நட்சத்திரங்களின்

நளின ஒளிகள் 

என் கண்களை பறிக்கின்றன

 

பார்வைகளிரண்டும் அயராது வியந்து 

பால்வெளி ரகசியங்களை 

தம் அறிவுச்சிந்தனைக் கப்பாற்பட்டும்

தம் விழிகளின் வழியே நுழையும் 

வான்வெளி வண்ணங்களைக் கொண்டு

பல கோட்டு ஓவியங்களை புனைகின்றன

 

வண்ணங்கள் கலவாதிருக்கும் இரவினை

மின்னிடும் நட்சத்திர ஒளிகளைக் கொண்டு 

வரைந்த மென் கோட்டோவியங்களை

அகத்தினில் கண்டு வியந்து 

அவைகளை கைகளில் பறித்துக் கொள்ள

தாமரை இதழ் கண்களினூடே 

மனச்சிறகுள் பறந்து செல்ல எத்தனிக்கின்றன

 

அதற்குள் யாரோ? 

நிறைந்த நித்திரையைத் தருகின்ற ஒரு பெண்

ஒளிகளை வான் வீதிகளில் வீசியபடி

என் மனச் சிறகுகளை 

தன் புன்னகைகளால் மயக்குகிறாள்

 

இந்த இரவு மயக்கத்தையும்

அளவில்லா ஆசைகளைத் தூண்டியும்

என் மனதினை ஒவ்வொரு நாளும்

ஏக்கத்தில் தவிக்கவிட்டு

நீண்ட கனவென்னும் நித்திரையை

தென்றல் தாலாட்டால்

தனித்திருந்து தணிக்கின்றாள்!

- இல.பிரகாசம்

 

 

by Swathi   on 02 Sep 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.