LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

சினத்தை வெல்வோம்

சினத்தின் மூலம் நீங்கள் பெற்று வரும் உடல் நல இழப்பை நினைவு கொள்ளுங்கள். சினம் கொள்ளும் போது உயிராற்றல் மிகுகின்றது. இரத்தம் சூடேறுகிறது. இரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகரிக்கின்றது. கண்கள் ஒளியிழக்கின்றன. இருதயம் துரிதப்படுத்தப் பெற்று அதன் துடிப்பு விரைவாகின்றது. நரம்புத் தளர்ச்சி ஏற்படுகின்றது. பொதுவாக உடலியக்க ஒழுங்கே சீர் கு...லைந்து போகின்றது. சினத்தோடு நீங்கள் இருக்கும் போது உறவினர்கள், நண்பர்கள் கூட உங்களை நெருங்க அஞ்சுகின்றனர். உங்கள் சினமானது மற்றவர்களுக்கும் சினத்தை அல்லது வருத்தத்தைத் தூண்டுகிறது. இவற்றையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வாருங்கள். சினம் ஒழிப்பு இன்றியமையாதது என முடிவு கிடைக்கும். தொடர்ந்து நினைவைச் செயல்படுத்துங்கள். இனி இந்த நபரோடு தொடர்பு கொள்ளும் போது சினம் கொள்ளமாட்டேன், மறதியின்றி விழிப்போடு இருப்பேன், "எந்த நிலையிலும் சினம் கொள்ளாமல் இருக்க அறிவைப் பாதுகாத்துக் கொள்வேன்" என்று நீங்களே மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள். ஒருவாரம், காலை, மாலை, உட்கார்ந்து சினம் ஒழிப்பு உறுதி மொழிகளை உருப்போடுங்கள். நினைவு மறவாமல் குறிப்பிட்ட நபரோடு பேசுங்கள், பழகுங்கள் இம்முறையை ஒருவார காலம் நோன்பாகக் கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றி கண்டுவிட்டால் பிறகு எல்லாரிடத்திலும் சினம் கொள்ளாத வெற்றியை எளிதில் பெற்றுவிடலாம்.

by Swathi   on 20 Jan 2014  1 Comments
Tags: Sinam   Velvom   Ire   Win   சினம்   வெல்வோம்     
 தொடர்புடையவை-Related Articles
சினத்தை வெல்வோம் சினத்தை வெல்வோம்
ரோஹித் சர்மா, கோஹ்லியின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி !!! ரோஹித் சர்மா, கோஹ்லியின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி !!!
கருத்துகள்
24-Sep-2020 09:12:54 ganesamoorthi said : Report Abuse
It is very clear and excellent explanation. I liked it.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.