LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

ஐரோம் சர்மிளா

I love life,I Do not want to t ake my life,

but I want justice a nd peace.


மணிப்பூர் மாநிலத்தின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவர் ஐரோம் சானு சர்மிளா (Irom Chanu Sharmila ) ஆவார் . அப்பகுதி மக்கள் அவரை மெங்நெநுளபி என அழைக்கின்றனர் . இவர் 1972 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று மணிப்பூர் மாநிலத்தில் கொங்பால் என்னும் ஊரில் பிறந்தார் . மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 1958 ஆம் ஆண்டு முதல் ஆயுதப்படை சிறப்பு அதிபராகச் சட்டம் அமுலில் உள்ளது . சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு ராணுவத்திடம் உள்ளது . சட்டத்தை மீறுபவர்களாகக் கருதும் நபர்கள்மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் . நீதிமன்ற ஆணை இல்லாமலே யாரையும் கைது செய்யலாம் . ராணுவத்துக்கு அளவில்லா அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது . சந்தேகப்படும் யாரையும் சுட்டுக் கொல்லவும் ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .

மலோம் என்ற இடத்தில் பேருந்தில் சென்ற 10 பயணிகளை 2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று ராணுவம் சுட்டுக் கொன்றது . இதனை மலோம் படுகொலை என அப்பகுதி மக்கள் வர்ணிக்கின்றனர் . இதனால் கோபம் கொண்ட ஐரோம் சர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் . உணவு மற்றும் நீர் ஆகியவற்றை அருந்தாமல் உண்ணாவிரதம் தொடங்கினார் . அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக திரவ உணவை செலுத்தினர் . ஓர் ஆண்டிற்கு மேல் சிறையில் வைத்திருக்கக் கூடாது என்கிற சட்டத்தின்படி ஒரு நாள் விடுதலை செய்யப்பட்டு மறுநாள் முதல் வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார் . 15 ஆண்டாக உண்ணாவிரதம் தொடர்கிறது . உலகில் இதுவே நீண்ட உண்ணாவிரதப் போராட்டமாகும் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.