LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஜெயமோகன்

இறுதி யந்திரம்

 

எட்டு இருபது முதல் ஒரு மணி நேரத்தை அவருக்காக அதிபர் ஒதுக்கியிருந்தார்.
விருந்தினர் அறையில் அந்த ஒல்லியான பரட்டைத் தலை மனிதர் தன் கருவியுடன் காத்திருந்தார். முன்பக்கம் கண்ணாடி  விழி ஒன்றும் சில பித்தான்களும் கொண்ட சதுரமான எந்திரம் அது. விருந்தினர் அறை மிகவும் குளிராக இருந்தது.
எந்தவிதமான உடையணிந்தாலும் அந்தக் குளிர் எலும்புகளைத் துளைத்தேறும் என்று பட்டது. பரட்டை மனிதர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னமும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. கடிகார முள் மிக மெதுவாக நகர்ந்தது. அவர் தன்உபகரணத்தை இன்னுமொருமுறை சரிபார்த்துக்கொண்டார். திருப்தி ஏற்பட்டது.
ஒற்றைக் கண்ணில் செருகப்பட்டிருந்த கண்ணாடியை எடுத்து சிறிய பட்டுக் கைக்குட்டையால் பதற்றத்துடன் பலமுறை துடைத்தார். தூக்கிப் பார்த்த பிறகு பொருத்தினார். அப்போது அழைப்பு வந்தது. சிவப்பு நிற சீருடையும் அதில் பொற்பதக்கங்களும் அணிந்த காவலன் கம்பீரமாகவும் மெதுவாகவும் நடந்து வந்து,
மிக மெல்லிய குரலில் “உங்கள் நேரம் தோழர்” என்றான். அவர் அவசரமாக எழுந்தபோது மனம் துடிக்க ஆரம்பித்தது.
பெரிய அறை அது. அதுவும் குளிர்ந்து உறைந்து கிடந்தது. மேலே வெகு உயரமான கூரையிலிருந்து தொங்கிய விளக்குகளிலிருந்து கூசவைக்கும் ஒளி அறையெங்கும்
சிதறியிருந்தது. அதில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். முகங்கள்
குளிர்பதனப் பெட்டியில் வெகுகாலம் வைக்கப்பட்டவை போலிருந்தன. கண்கள்
பனிக்குண்டுகள். தன் கருவியை வைத்துவிட்டு அவர் மூவருக்கும் வணக்கம்
கூறினார். அவர்கள் மிக மெல்லிய குரலில் பதில் வணக்கம் கூறினார்கள்.
குளிர் அதிகரிப்பது போலப் பட்டது.
“நான் ரெமிங்கோ ரோமலோ டான்” என்றார் அவர். “விஞ்ஞானி. என் கருவியை இங்கு
காட்ட உத்தரவு பெற்றிருந்தேன்.”
அவர்கள் தங்களை முறையே கிரிகோர் வசீலியேவ்ஸ்கி, யெவ்கெனி ஃபதயேவ், இவான்
டாவிடோவ் என்று அறிமுகம் செய்துகொண்டனர். அவர்கள் அதிபரின் உயர்மட்ட
விஞ்ஞான ஆய்வுக்குழு மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள். கிரிகோர் அதன்
தலைவர்.
“நீங்கள் எந்த தேசத்தவர்?” என்றார் கிரிகோர்.
சற்று வெட்கியபடி “உண்மையை சொல்லப்போனால் எனக்கு தேசமில்லை. நான் ஒரு
ஜிப்ஸி” என்றார் டான். “ஐரோப்பிய தேசங்கள் முழுக்க நாங்கள்
துரத்தப்பட்டபடி இருக்கிறோம். என் தந்தை ஒரு ஜெர்மானியர் என்று என்
கண்களை வைத்துச் சொல்கிறார்கள். என் பெயருக்கு ஸ்பானிஷ் ஒலி உள்ளது.
ஆனால் அதற்கு ஸ்பானிஷில் அர்த்தம் ஏதும் இல்லை. ஒலி மட்டும் தான். ” டான்
மீண்டும் பவ்யமான முறையில் சிரித்தார்.
அவர்கள் புன்னகை புரிந்தனர்.
“இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்து ஒரு வருடமாயிற்று. இதுவரை விற்க
முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு இங்கு வர அனுமதி பெற்றேன்.”
 
 
வெளியே ஒரு சிறு ஓசை கேட்டது. உடனே மூவரும் கல்லென உறைந்து நின்றனர்.
டான் எழுந்து பவ்யமாக நின்றார். குளிரின் அலை ஒன்று வந்தது. சீரான
காலணியோசைகள் கேட்டன. மெய்க்காவலர் இருவர் புடைசூழ அதிபர் மிடுக்காக
நடந்து வந்தார். குட்டை மயிர். ராணுவத்திற்காகவே உருவான தாடையகன்ற சதுர
முகம். சிறிய மூக்குக்குக் கீழே கச்சிதமான முறுக்கு மீசை. மங்கலான சிறிய
கண்கள். அவற்றில் ஓர் இறுக்கம் இருந்தது. அதிபர் வந்ததும் மூவரும்
ஓசையின்றித் தலை வணங்கினர். டானும் அதையே செய்தார். அதிபர் அமர்ந்து மிக
மெல்லத் தலையசைத்ததும் அனைவரும் அமர்ந்து கொண்டனர்.
தரையும் சுவர்களும் பனிப்பாளங்களாக மாறிவிட்டவைபோல அறை குளிரில்
விரைத்திருப்பதை டான் உணர்ந்தார்.
அதிபரின் விழியசைவைக் கண்டு கிரிகோர் உயிர்பெற்றார். “திருவாளர் டான்
ரெமிங்கோ ரோமலோ. உங்கள் கருவியின் பயன் என்ன?”
“மேதகையீர், இது ஒரு உயர்சக்தி வாய்ந்த அழிப்பான். இது வரலாற்றை
அழிக்கும் சக்தி உடையது. தங்களுக்கு விருப்பமில்லாத பகுதிகள் ஏதும்
வரலாற்றில் இருக்குமெனில் இதன் உதவியுடன் எவ்விதத் தடயமும் இல்லாமல்
அழித்துவிட முடியும்.”
“விளக்குங்கள்” என்றார் ஃபதயேவ் “இது ஒரு வரலாற்று நூலில் சில பக்கங்களை
இல்லாமல் செய்துவிடுமா?”
“இல்லை மேன்மை தங்கியவரே. இது உண்மையான வரலாற்றையே அழிக்கும்.”
இவான் “நீங்கள் கூறுவது வியப்பளிக்கிறது.” என்றார். “ஏற்கனவே இங்கு
உயர்சக்தி வாய்ந்த சில புகைப்பட அழிப்பு உபகரணங்கள் உள்ளன.
புகைப்படங்களில் உள்ள நாம் விரும்பாத பகுதியை அவை துல்லியமாக இல்லாமல்
செய்துவிடக் கூடியவை. இது அவ்வகைப்பட்ட யந்திரமா?”
“இல்லை மேதகையீர், அவை புகைப்பட அழிப்பான்கள். நூல்களை அழிப்பவை உண்டு.
சில கருவிகள் நினைவுகளை அழிக்கும். இது அப்படியல்ல. இது பரிபூரண வரலாற்று
அழிப்பான். வரலாற்றில் ஒரு பகுதியை முற்றிலும் இல்லாமல் செய்துவிடும்.
நீங்கள் குறிப்பிட்டவை வரலாற்றின் வெறும் தடயங்கள் மட்டுமே.”
அதிபர், சேவகர்களுக்கு ஏதோ குறிப்பு அனுப்பினார். அவர்கள் கட்டுகட்டாக
நூல்கள் ஆல்பங்கள் ஆகியவற்றுடன் வந்தபடி இருந்தனர்.
கிரிகோர் “உங்கள் யந்திரம் போதிய அளவு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லையோ என
ஐயப்பட இடமிருக்கிறது.” என்றார்.
“தாங்கள் சோதித்துப் பார்க்கலாம், மேதகையீர்” என்றார் டான்.
“ஒருவரை வரலாற்றிலிருந்து நீக்க இதை எப்படிப் பயன்படுத்துவது?” என்றார் கிரிகோர்.
“மிக எளிது. இக்கருவியின் ஒளிப் பீரிடல் முன்பு அந்நபரின் முழுப்பெயர்,
அல்லது புகைப்படம், அல்லது உடல் உறுப்பு, அல்லது உடைகள் போன்று நேரடியாக
சம்பந்தமுள்ள பொருட்கள் ஆகியவற்றில் ஒன்றை வைத்து இந்த நீலப்பித்தானை
அழுத்தினால் போதும்.”
“இறந்துவிடுவாரா?”
“இல்லை பிரபு, பிறக்கவேயில்லை என்று ஆகிவிடுவார்.”
“நம்பவே முடியவில்லை” என்றார் இவான் டாலிடோவ்.
“தோழர் டான்” என்றார் அதிபர். அவர் குரல் மெலிதாக இருந்தது. “நீங்கள்
உங்கள் கருவியை இயக்கிக் காட்டலாமே.”
“உத்தரவு மேன்மைதங்கியவரே”
“மாதிரிக்கு தோழர் கிரிகோரையே எடுத்துக் கொள்ளுங்கள்.”
கிரிகோர் முகம் சவம்போல் ஆயிற்று. நிமிர்ந்து நிற்க முயன்றார். கரங்கள்
மட்டுமே துடித்துக்கொண்டிருந்தன. டான் அமைதியாக தன் கருவியைத் திருப்பி
குறிப்பார்த்தார். கிரிகோரின் தலை இறுகி சற்று கூனலானார். வாயின்
விளிம்புகள் அழுந்த மடிந்து, பின்பு முகம் ஒருபக்கமாக கோணிக்கொண்டது. ஒரு
கேவல் ஒலி எழுந்தது. ஒளி அணைந்தபோது கிரிகோர் நின்றிருந்த இடம் காலியாக
இருந்தது.
பிற உடல்கள் விறைப்பு தளர்ந்து சகஜநிலை பெறும் அசைவுகள் ஏற்பட்டன.
அதிபர் மெல்லிய குரலில் “எழுத்து வடிவில் கிரிகோரின் பெயர் உள்ளதா என்று
பாருங்கள்” என்றார். இவான் கலைக்களஞ்சியங்களையும் யென்கெனி ஃபதயேவ் அரசு
ஆவணங்களையும் புரட்ட ஆரம்பித்தார்கள்.
“அப்படி ஒரு பெயரே இல்லை” என்றார் இவான்.
“வியப்புதான். அப்படியொரு பெயர் இவற்றில் கையாளப்பட்ட தடயமே இல்லை.”
என்றார் யெவ்கெனிஃபதயேவ். வரலாற்று நூல்கள் பிற ஆவணங்கள், அரசு
அறிக்கைகள், பிறப்பு விவரப் பட்டியல், கல்வி நிலைய ஆவணங்கள், பாஸ்போர்ட்
பதிவுகள் உட்பட எங்கும் அப்பெயர் இருக்கவில்லை. வரலாற்றிலிருந்து
அதற்குமுன் அழிக்கப்பட்டவர்களின் பெயர்களடங்கிய ரகசியக் கோப்பில்கூட
அப்படி ஒரு பெயர் இல்லை. புகைப்படங்களில் கிரிகோர் நின்றிருந்த இடங்களில்
ஒன்று வேறு நபர்கள் இருந்தனர்; அல்லது மறுபக்கம் தெரிய காலியாக இருந்தது.
“அற்புதம்தான் தோழர்” என்றார் இவான்.
அதிபரின் உத்தரவிற்கு ஏற்ப வெளியேயிருந்து ஒரு பெண்மணியும் அவள் மகனும்
வந்தனர். இருவரும் இயந்திரங்கள்போல இருந்தனர்.
கிரிகோரின் பெயரை முழுமையாகச் சொல்லி, அந்தப் பையனிடம் அவரைத் தெரியுமா
என்று இவான் கேட்டார்.
பையன் புரியாது முகத்தை சுளித்தான். தாயைப் பார்த்தான். “இல்லை” என்றான்.
“உங்களுக்கு?” என்றார் இவான் தாயிடம்.
“இல்லையே, யார் அவர்? ஏதாவது ராஜத் துரோகியா?” என்றாள் அவள் குழப்பத்துடன்.
இவான் அழுத்தமாக, “திருமதி நடாலியா, உங்கள் கணவர் பெயர் என்ன?”
“இவான் செர்கியேவிச். கம்மியர். இறந்துவிட்டார்.”
“உங்கள் முழுப் பெயர்?”
“நடாலியா இவானவ்னா.”
“உன் தந்தை பெயர் என்ன?” என்றார் ஃபதயேவ்.
“இவான் செர்கியேவிச்” என்றான் பையன். “என் பெயர் திமிட்ரி இவானோவ்.”
அதிபர் தலையசைக்க அவர்கள் வெளியேறினர். ஃபைல்களும் நூல்களும்
அகற்றப்பட்டன. அதிபர் முதல்முறையாகச் சற்று புன்னகை புரிந்தார்.
“தோழர் இவான்!”
“உத்தரவு தோழர்.”
“தோழர் கிரிகோரின் இடத்தை இனிமேல் தாங்கள் நிரப்பலாம். அவரைவிடவும் தகுதியானவர்.”
இருவரும் சற்றுக் குழம்பினர். இவான் மெல்லிய குரலில் “தோழர்,
மன்னிக்கவேண்டும். உத்தரவு புரியவில்லை” என்றார்.
அதிபரின் கண்கள் இடுங்கின.
“உயர்மட்டத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் நாங்கள் இருவர்தான்
உறுப்பினர்கள். நான் தலைவர். இவர் செயலர். தாங்கள் சற்றுமுன் கூறிய பெயரை
நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை.”
ஃபதயேவ் “தங்கள் ஒருவேளை அப்பெயருள்ள எவரையேனும் நியமிக்க
விரும்பியிருக்கக்கூடுமோ?” என்றார்.
அதிபரின் முகம் சிரிப்பில் மலர்ந்தது. “நீங்கள் போகலாம்” என்றார்.
அவர்கள் வெளியேறியதும் எழுந்து “அருமையான இயந்தரம். அற்புதமான
கண்டுபிடிப்பு. இதை நான் வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.
“நீங்கள் என் மீட்பர்” என்றார் டான்.
“இதை எவ்வாறு இயக்குவது என்பதை ஒருமுறை எனக்குத் தனிப்பட்ட முறையில் காட்டுங்கள்.”
“உத்தரவு தோழர், இப்போது சற்றுமுன் காட்டியது போல.”
“சற்றுமுன் காட்டினீர்களா? எப்போது?”
“இப்போது ஒருவரை வரலாற்று நீக்கம் செய்து காட்டினேனே…”
“இப்போதா, இங்கா, யாரை?” என்றார் அதிபர் குழப்பத்துடன்.
டான் குழம்பினார். “ஆனால்” என்றார். அவருக்கும் நினைவு வரவில்லை.
“மன்னிக்கவும் சற்று குழம்பிவிட்டேன் – பித்தானை காட்டுகிறேன்.” என்றார்.
“எப்படி இதைக் கண்டு பிடித்தீர்கள். இதன் சூத்திரம் என்ன?” என்றார் அதிபர்.
“இது என் வம்ச ரகசியங்களுள் ஒன்று” என்றார் டான். “நான் ஜிப்ஸி, எங்கள்
இனம் இந்த புவியெங்கும் பரவி நிரம்பியிருந்தது. ஆயிரம் வருடங்களாக எங்கள்
இனக்குழுக்கள் இவ்வாறு வரலாற்றிலிருந்து அழிந்தபடி உள்ளன. இப்போது சிலரே
எஞ்சியிருக்கிறோம். தொலைந்து போன என் மூதாதையரில் ஒருவர் வழி தவறி என்
கனவுக்குள் நுழைந்துவிட்டார். அவரது பாடலில் இதற்கான ரகசியம் இருந்தது.”
அதிபர் சிரித்தார். “வரலாற்றில் இருப்பதைவிட இல்லாமலிருப்பதே எளிமையானது.
இனிமையானது, ஏனெனில் அங்கு அச்சம் இல்லை அல்லவா?”
“ஆம் பிரபு. ஜிப்ஸிகளைவிட அதை அறிந்த வம்சம் எது?”
“ஆனால் வரலாறு என்பது ஓர் அதிகார வெளி. அதிகாரம் இல்லாமல் என்னால் இருக்க
முடியாது.” என்றார் அதிபர். ஒரு கணம் அவர் மனிதனானார். “களைத்துச்
சோர்ந்தாலும் சுமந்தாக வேண்டும். வெகுதூரம் வந்துவிட்டேன். இனிமேல்
திரும்ப முடியாது.”
“இது மிக ஆபத்தான இயந்திரம் மேன்மை தங்கியவரே” என்றார் டான். “இது
எப்போதும் உங்கள் அருகிலேயே இருக்க வேண்டும். உங்கள் படுக்கையறையில்,
உங்கள் நேரடி கண்காணிப்பில்.”
“ஆம், மிகவும் நன்றி டான்.” என்றார் அதிபர். “வரலாறு எனக்கு மிகவும்
அசவுகரியமானதாக இருந்து வந்தது. இனி பயமில்லை. உங்களுக்கான பணம்
வெளிநாட்டு வங்கிகளுக்கு வரும். நீங்கள் போகலாம். எனக்கு வேலைகள் பல
உள்ளன.”
டான் வணங்கி விடைபெற்றார். வெளியே அவருக்காக வண்டி நின்றது.
தங்குமிடத்திற்கு சென்றதுமே மனைவியிடம் இரைந்தார். “கிளம்பு மரியா.
இக்கணமே நாம் கிளம்புகிறோம். ஆசிய நாடுகள் எதற்காவது…”
“பெரும் பணம் கிடைக்குமென்றீர்கள்…”
“ஆம், அதை வைத்து நாம் என்ன செய்ய முடியும்? தங்கத்திற்காக உலகையே உழுது
புரட்டிய ஐரோப்பா நம்மைச் சும்மா விடுமா? கிளம்பு.”
அவர்கள் அடையாள அட்டைகளையும் அனுமதி உத்தரவுகளையும் காட்டிக்
கிளம்பினார்கள். மாலை விமானம் வானில் ஏறிய பிறகு மரியா கேட்டாள்
“அப்படியானால் அந்த யந்திரத்தை ஏன் விற்றீர்கள்?”
“விற்கவில்லை. அதிபருக்கு என் அன்பளிப்பு அது” என்றார் டான்.
“உங்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை”
“அசடே” என்றார் டான் சிரித்தபடி “அ ]ந்த அழிக்கப்பட்ட வரலாறுகள் எங்கு
செல்கின்றன என்கிறாய்? அவை அந்த யந்திரத்துக்குள் சேமிக்கப்படுகின்றன.
அது அவரது படுக்கையறையில் தலைமாட்டில் எப்போதும் இருக்கும். அதை அழிக்க
முடியாது. நிறுத்தக்கூட முடியாது. அதற்குள் வேறு ஒரு வரலாறு நிலைக்காத
படங்களாக ஓடியபடியே இருக்கும். அழிக்கப்பட்டவர்களினால் ஆன வரலாறு.”
மரியா “அடப் பாவமே” என்றாள்.
“ஒருவேளை அதுதான் உண்மையான வரலாறு” என்றார் டான்.
“அதற்கு அவர் தான் முதல் சாட்சி.” பிறகு விமானமே அதிர்ந்து திரும்பிப்
பார்க்கும்படி பைத்தியக்காரத்தனமாக உரக்கச் சிரித்தார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
* ஆக்கியவர் பெயரின்றி கைப்பிரதித் தொகுப்பில் காணப்படும் இந்தக் கதை
அசலா தழுவலா மொழிபெயர்ப்பா என்பது தெரியவில்லை. கையெழுத்து
வீரபத்ரனுடையது.

          எட்டு இருபது முதல் ஒரு மணி நேரத்தை அவருக்காக அதிபர் ஒதுக்கியிருந்தார்.விருந்தினர் அறையில் அந்த ஒல்லியான பரட்டைத் தலை மனிதர் தன் கருவியுடன் காத்திருந்தார். முன்பக்கம் கண்ணாடி  விழி ஒன்றும் சில பித்தான்களும் கொண்ட சதுரமான எந்திரம் அது. விருந்தினர் அறை மிகவும் குளிராக இருந்தது.எந்தவிதமான உடையணிந்தாலும் அந்தக் குளிர் எலும்புகளைத் துளைத்தேறும் என்று பட்டது. பரட்டை மனிதர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னமும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. கடிகார முள் மிக மெதுவாக நகர்ந்தது. அவர் தன்உபகரணத்தை இன்னுமொருமுறை சரிபார்த்துக்கொண்டார். திருப்தி ஏற்பட்டது.ஒற்றைக் கண்ணில் செருகப்பட்டிருந்த கண்ணாடியை எடுத்து சிறிய பட்டுக் கைக்குட்டையால் பதற்றத்துடன் பலமுறை துடைத்தார். தூக்கிப் பார்த்த பிறகு பொருத்தினார். அப்போது அழைப்பு வந்தது.

 

        சிவப்பு நிற சீருடையும் அதில் பொற்பதக்கங்களும் அணிந்த காவலன் கம்பீரமாகவும் மெதுவாகவும் நடந்து வந்து,மிக மெல்லிய குரலில் “உங்கள் நேரம் தோழர்” என்றான். அவர் அவசரமாக எழுந்தபோது மனம் துடிக்க ஆரம்பித்தது.பெரிய அறை அது. அதுவும் குளிர்ந்து உறைந்து கிடந்தது. மேலே வெகு உயரமான கூரையிலிருந்து தொங்கிய விளக்குகளிலிருந்து கூசவைக்கும் ஒளி அறையெங்கும்சிதறியிருந்தது. அதில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். முகங்கள்குளிர்பதனப் பெட்டியில் வெகுகாலம் வைக்கப்பட்டவை போலிருந்தன. கண்கள்பனிக்குண்டுகள். தன் கருவியை வைத்துவிட்டு அவர் மூவருக்கும் வணக்கம்கூறினார். அவர்கள் மிக மெல்லிய குரலில் பதில் வணக்கம் கூறினார்கள்.குளிர் அதிகரிப்பது போலப் பட்டது.“நான் ரெமிங்கோ ரோமலோ டான்” என்றார் அவர். “விஞ்ஞானி. என் கருவியை இங்குகாட்ட உத்தரவு பெற்றிருந்தேன்.”அவர்கள் தங்களை முறையே கிரிகோர் வசீலியேவ்ஸ்கி, யெவ்கெனி ஃபதயேவ், இவான்டாவிடோவ் என்று அறிமுகம் செய்துகொண்டனர். அவர்கள் அதிபரின் உயர்மட்டவிஞ்ஞான ஆய்வுக்குழு மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள். கிரிகோர் அதன்தலைவர்.

 

          “நீங்கள் எந்த தேசத்தவர்?” என்றார் கிரிகோர்.சற்று வெட்கியபடி “உண்மையை சொல்லப்போனால் எனக்கு தேசமில்லை. நான் ஒருஜிப்ஸி” என்றார் டான். “ஐரோப்பிய தேசங்கள் முழுக்க நாங்கள்துரத்தப்பட்டபடி இருக்கிறோம். என் தந்தை ஒரு ஜெர்மானியர் என்று என்கண்களை வைத்துச் சொல்கிறார்கள். என் பெயருக்கு ஸ்பானிஷ் ஒலி உள்ளது.ஆனால் அதற்கு ஸ்பானிஷில் அர்த்தம் ஏதும் இல்லை. ஒலி மட்டும் தான். ” டான்மீண்டும் பவ்யமான முறையில் சிரித்தார்.அவர்கள் புன்னகை புரிந்தனர்.“இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்து ஒரு வருடமாயிற்று. இதுவரை விற்கமுடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு இங்கு வர அனுமதி பெற்றேன்.” 
 வெளியே ஒரு சிறு ஓசை கேட்டது. உடனே மூவரும் கல்லென உறைந்து நின்றனர்.டான் எழுந்து பவ்யமாக நின்றார். குளிரின் அலை ஒன்று வந்தது. சீரானகாலணியோசைகள் கேட்டன. மெய்க்காவலர் இருவர் புடைசூழ அதிபர் மிடுக்காகநடந்து வந்தார். குட்டை மயிர். ராணுவத்திற்காகவே உருவான தாடையகன்ற சதுரமுகம். சிறிய மூக்குக்குக் கீழே கச்சிதமான முறுக்கு மீசை. மங்கலான சிறியகண்கள். அவற்றில் ஓர் இறுக்கம் இருந்தது. அதிபர் வந்ததும் மூவரும்ஓசையின்றித் தலை வணங்கினர். டானும் அதையே செய்தார். அதிபர் அமர்ந்து மிகமெல்லத் தலையசைத்ததும் அனைவரும் அமர்ந்து கொண்டனர்.தரையும் சுவர்களும் பனிப்பாளங்களாக மாறிவிட்டவைபோல அறை குளிரில்விரைத்திருப்பதை டான் உணர்ந்தார்.அதிபரின் விழியசைவைக் கண்டு கிரிகோர் உயிர்பெற்றார்.

 

         “திருவாளர் டான்ரெமிங்கோ ரோமலோ. உங்கள் கருவியின் பயன் என்ன?”“மேதகையீர், இது ஒரு உயர்சக்தி வாய்ந்த அழிப்பான். இது வரலாற்றைஅழிக்கும் சக்தி உடையது. தங்களுக்கு விருப்பமில்லாத பகுதிகள் ஏதும்வரலாற்றில் இருக்குமெனில் இதன் உதவியுடன் எவ்விதத் தடயமும் இல்லாமல்அழித்துவிட முடியும்.”“விளக்குங்கள்” என்றார் ஃபதயேவ் “இது ஒரு வரலாற்று நூலில் சில பக்கங்களைஇல்லாமல் செய்துவிடுமா?”“இல்லை மேன்மை தங்கியவரே. இது உண்மையான வரலாற்றையே அழிக்கும்.”இவான் “நீங்கள் கூறுவது வியப்பளிக்கிறது.” என்றார். “ஏற்கனவே இங்குஉயர்சக்தி வாய்ந்த சில புகைப்பட அழிப்பு உபகரணங்கள் உள்ளன.புகைப்படங்களில் உள்ள நாம் விரும்பாத பகுதியை அவை துல்லியமாக இல்லாமல்செய்துவிடக் கூடியவை. இது அவ்வகைப்பட்ட யந்திரமா?”“இல்லை மேதகையீர், அவை புகைப்பட அழிப்பான்கள். நூல்களை அழிப்பவை உண்டு.சில கருவிகள் நினைவுகளை அழிக்கும். இது அப்படியல்ல. இது பரிபூரண வரலாற்றுஅழிப்பான். வரலாற்றில் ஒரு பகுதியை முற்றிலும் இல்லாமல் செய்துவிடும்.நீங்கள் குறிப்பிட்டவை வரலாற்றின் வெறும் தடயங்கள் மட்டுமே.”அதிபர், சேவகர்களுக்கு ஏதோ குறிப்பு அனுப்பினார். அவர்கள் கட்டுகட்டாகநூல்கள் ஆல்பங்கள் ஆகியவற்றுடன் வந்தபடி இருந்தனர்.கிரிகோர் “உங்கள் யந்திரம் போதிய அளவு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லையோ எனஐயப்பட இடமிருக்கிறது.” என்றார்.

 

         “தாங்கள் சோதித்துப் பார்க்கலாம், மேதகையீர்” என்றார் டான்.“ஒருவரை வரலாற்றிலிருந்து நீக்க இதை எப்படிப் பயன்படுத்துவது?” என்றார் கிரிகோர்.“மிக எளிது. இக்கருவியின் ஒளிப் பீரிடல் முன்பு அந்நபரின் முழுப்பெயர்,அல்லது புகைப்படம், அல்லது உடல் உறுப்பு, அல்லது உடைகள் போன்று நேரடியாகசம்பந்தமுள்ள பொருட்கள் ஆகியவற்றில் ஒன்றை வைத்து இந்த நீலப்பித்தானைஅழுத்தினால் போதும்.”“இறந்துவிடுவாரா?”“இல்லை பிரபு, பிறக்கவேயில்லை என்று ஆகிவிடுவார்.”“நம்பவே முடியவில்லை” என்றார் இவான் டாலிடோவ்.“தோழர் டான்” என்றார் அதிபர். அவர் குரல் மெலிதாக இருந்தது. “நீங்கள்உங்கள் கருவியை இயக்கிக் காட்டலாமே.”“உத்தரவு மேன்மைதங்கியவரே”“மாதிரிக்கு தோழர் கிரிகோரையே எடுத்துக் கொள்ளுங்கள்.”கிரிகோர் முகம் சவம்போல் ஆயிற்று. நிமிர்ந்து நிற்க முயன்றார். கரங்கள்மட்டுமே துடித்துக்கொண்டிருந்தன. டான் அமைதியாக தன் கருவியைத் திருப்பிகுறிப்பார்த்தார். கிரிகோரின் தலை இறுகி சற்று கூனலானார். வாயின்விளிம்புகள் அழுந்த மடிந்து, பின்பு முகம் ஒருபக்கமாக கோணிக்கொண்டது. ஒருகேவல் ஒலி எழுந்தது. ஒளி அணைந்தபோது கிரிகோர் நின்றிருந்த இடம் காலியாகஇருந்தது.பிற உடல்கள் விறைப்பு தளர்ந்து சகஜநிலை பெறும் அசைவுகள் ஏற்பட்டன.அதிபர் மெல்லிய குரலில் “எழுத்து வடிவில் கிரிகோரின் பெயர் உள்ளதா என்றுபாருங்கள்” என்றார். இவான் கலைக்களஞ்சியங்களையும் யென்கெனி ஃபதயேவ் அரசுஆவணங்களையும் புரட்ட ஆரம்பித்தார்கள்.“அப்படி ஒரு பெயரே இல்லை” என்றார் இவான்.“வியப்புதான். அப்படியொரு பெயர் இவற்றில் கையாளப்பட்ட தடயமே இல்லை.”என்றார் யெவ்கெனிஃபதயேவ்.

 

         வரலாற்று நூல்கள் பிற ஆவணங்கள், அரசுஅறிக்கைகள், பிறப்பு விவரப் பட்டியல், கல்வி நிலைய ஆவணங்கள், பாஸ்போர்ட்பதிவுகள் உட்பட எங்கும் அப்பெயர் இருக்கவில்லை. வரலாற்றிலிருந்துஅதற்குமுன் அழிக்கப்பட்டவர்களின் பெயர்களடங்கிய ரகசியக் கோப்பில்கூடஅப்படி ஒரு பெயர் இல்லை. புகைப்படங்களில் கிரிகோர் நின்றிருந்த இடங்களில்ஒன்று வேறு நபர்கள் இருந்தனர்; அல்லது மறுபக்கம் தெரிய காலியாக இருந்தது.“அற்புதம்தான் தோழர்” என்றார் இவான்.அதிபரின் உத்தரவிற்கு ஏற்ப வெளியேயிருந்து ஒரு பெண்மணியும் அவள் மகனும்வந்தனர். இருவரும் இயந்திரங்கள்போல இருந்தனர்.கிரிகோரின் பெயரை முழுமையாகச் சொல்லி, அந்தப் பையனிடம் அவரைத் தெரியுமாஎன்று இவான் கேட்டார்.பையன் புரியாது முகத்தை சுளித்தான். தாயைப் பார்த்தான். “இல்லை” என்றான்.“உங்களுக்கு?” என்றார் இவான் தாயிடம்.“இல்லையே, யார் அவர்? ஏதாவது ராஜத் துரோகியா?” என்றாள் அவள் குழப்பத்துடன்.இவான் அழுத்தமாக, “திருமதி நடாலியா, உங்கள் கணவர் பெயர் என்ன?”“இவான் செர்கியேவிச். கம்மியர். இறந்துவிட்டார்.”“உங்கள் முழுப் பெயர்?”“நடாலியா இவானவ்னா.”“உன் தந்தை பெயர் என்ன?” என்றார் ஃபதயேவ்.“இவான் செர்கியேவிச்” என்றான் பையன். “என் பெயர் திமிட்ரி இவானோவ்.”அதிபர் தலையசைக்க அவர்கள் வெளியேறினர். ஃபைல்களும் நூல்களும்அகற்றப்பட்டன.

 

        அதிபர் முதல்முறையாகச் சற்று புன்னகை புரிந்தார்.“தோழர் இவான்!”“உத்தரவு தோழர்.”“தோழர் கிரிகோரின் இடத்தை இனிமேல் தாங்கள் நிரப்பலாம். அவரைவிடவும் தகுதியானவர்.”இருவரும் சற்றுக் குழம்பினர். இவான் மெல்லிய குரலில் “தோழர்,மன்னிக்கவேண்டும். உத்தரவு புரியவில்லை” என்றார்.அதிபரின் கண்கள் இடுங்கின.“உயர்மட்டத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் நாங்கள் இருவர்தான்உறுப்பினர்கள். நான் தலைவர். இவர் செயலர். தாங்கள் சற்றுமுன் கூறிய பெயரைநாங்கள் கேள்விப்பட்டதே இல்லை.”ஃபதயேவ் “தங்கள் ஒருவேளை அப்பெயருள்ள எவரையேனும் நியமிக்கவிரும்பியிருக்கக்கூடுமோ?” என்றார்.அதிபரின் முகம் சிரிப்பில் மலர்ந்தது. “நீங்கள் போகலாம்” என்றார்.அவர்கள் வெளியேறியதும் எழுந்து “அருமையான இயந்தரம். அற்புதமானகண்டுபிடிப்பு. இதை நான் வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.“நீங்கள் என் மீட்பர்” என்றார் டான்.“இதை எவ்வாறு இயக்குவது என்பதை ஒருமுறை எனக்குத் தனிப்பட்ட முறையில் காட்டுங்கள்.”“உத்தரவு தோழர், இப்போது சற்றுமுன் காட்டியது போல.”“சற்றுமுன் காட்டினீர்களா? எப்போது?”“இப்போது ஒருவரை வரலாற்று நீக்கம் செய்து காட்டினேனே…”“இப்போதா, இங்கா, யாரை?” என்றார் அதிபர் குழப்பத்துடன்.டான் குழம்பினார். “ஆனால்” என்றார். அவருக்கும் நினைவு வரவில்லை.“மன்னிக்கவும் சற்று குழம்பிவிட்டேன் – பித்தானை காட்டுகிறேன்.” என்றார்.“எப்படி இதைக் கண்டு பிடித்தீர்கள். இதன் சூத்திரம் என்ன?” என்றார் அதிபர்.

 

         “இது என் வம்ச ரகசியங்களுள் ஒன்று” என்றார் டான். “நான் ஜிப்ஸி, எங்கள்இனம் இந்த புவியெங்கும் பரவி நிரம்பியிருந்தது. ஆயிரம் வருடங்களாக எங்கள்இனக்குழுக்கள் இவ்வாறு வரலாற்றிலிருந்து அழிந்தபடி உள்ளன. இப்போது சிலரேஎஞ்சியிருக்கிறோம். தொலைந்து போன என் மூதாதையரில் ஒருவர் வழி தவறி என்கனவுக்குள் நுழைந்துவிட்டார். அவரது பாடலில் இதற்கான ரகசியம் இருந்தது.”அதிபர் சிரித்தார். “வரலாற்றில் இருப்பதைவிட இல்லாமலிருப்பதே எளிமையானது.இனிமையானது, ஏனெனில் அங்கு அச்சம் இல்லை அல்லவா?”“ஆம் பிரபு. ஜிப்ஸிகளைவிட அதை அறிந்த வம்சம் எது?”“ஆனால் வரலாறு என்பது ஓர் அதிகார வெளி. அதிகாரம் இல்லாமல் என்னால் இருக்கமுடியாது.” என்றார் அதிபர். ஒரு கணம் அவர் மனிதனானார். “களைத்துச்சோர்ந்தாலும் சுமந்தாக வேண்டும். வெகுதூரம் வந்துவிட்டேன். இனிமேல்திரும்ப முடியாது.”“இது மிக ஆபத்தான இயந்திரம் மேன்மை தங்கியவரே” என்றார் டான். “இதுஎப்போதும் உங்கள் அருகிலேயே இருக்க வேண்டும். உங்கள் படுக்கையறையில்,உங்கள் நேரடி கண்காணிப்பில்.”“ஆம், மிகவும் நன்றி டான்.” என்றார் அதிபர். “வரலாறு எனக்கு மிகவும்அசவுகரியமானதாக இருந்து வந்தது. இனி பயமில்லை. உங்களுக்கான பணம்வெளிநாட்டு வங்கிகளுக்கு வரும். நீங்கள் போகலாம். எனக்கு வேலைகள் பலஉள்ளன.”டான் வணங்கி விடைபெற்றார்.

 

          வெளியே அவருக்காக வண்டி நின்றது.தங்குமிடத்திற்கு சென்றதுமே மனைவியிடம் இரைந்தார். “கிளம்பு மரியா.இக்கணமே நாம் கிளம்புகிறோம். ஆசிய நாடுகள் எதற்காவது…”“பெரும் பணம் கிடைக்குமென்றீர்கள்…”“ஆம், அதை வைத்து நாம் என்ன செய்ய முடியும்? தங்கத்திற்காக உலகையே உழுதுபுரட்டிய ஐரோப்பா நம்மைச் சும்மா விடுமா? கிளம்பு.”அவர்கள் அடையாள அட்டைகளையும் அனுமதி உத்தரவுகளையும் காட்டிக்கிளம்பினார்கள். மாலை விமானம் வானில் ஏறிய பிறகு மரியா கேட்டாள்“அப்படியானால் அந்த யந்திரத்தை ஏன் விற்றீர்கள்?”“விற்கவில்லை. அதிபருக்கு என் அன்பளிப்பு அது” என்றார் டான்.“உங்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை”“அசடே” என்றார் டான் சிரித்தபடி “அ ]ந்த அழிக்கப்பட்ட வரலாறுகள் எங்குசெல்கின்றன என்கிறாய்? அவை அந்த யந்திரத்துக்குள் சேமிக்கப்படுகின்றன.அது அவரது படுக்கையறையில் தலைமாட்டில் எப்போதும் இருக்கும். அதை அழிக்கமுடியாது. நிறுத்தக்கூட முடியாது. அதற்குள் வேறு ஒரு வரலாறு நிலைக்காதபடங்களாக ஓடியபடியே இருக்கும். அழிக்கப்பட்டவர்களினால் ஆன வரலாறு.”மரியா “அடப் பாவமே” என்றாள்.“ஒருவேளை அதுதான் உண்மையான வரலாறு” என்றார் டான்.“அதற்கு அவர் தான் முதல் சாட்சி.” பிறகு விமானமே அதிர்ந்து திரும்பிப்பார்க்கும்படி பைத்தியக்காரத்தனமாக உரக்கச் சிரித்தார். ஆக்கியவர் பெயரின்றி கைப்பிரதித் தொகுப்பில் காணப்படும் இந்தக் கதைஅசலா தழுவலா மொழிபெயர்ப்பா என்பது தெரியவில்லை. கையெழுத்துவீரபத்ரனுடையது.

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.