LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

இருவது வயது முகம் - நிலாரவி

இன்னமும் இருக்கிறது

என்வீட்டுக்கண்ணாடியில்

எப்போதாவது

முளைத்து மறைகிற

என் இருவது வயது முகம்


உல்லாசப்பயணங்களில்

பூங்காக்களில் நுழைகையில்

ஓடும் பேருந்தை

விரட்டிப்பிடிக்க நேர்கையில்

மலைக்கோயில் படிகளில்

ஓடி ஏற முயல்கையில்


சிறுவர்களுடன்

சில நிமிடம் சேர்ந்து

விளையாடுகையில்

யாருமற்ற சாலையொன்றில்

இருசக்கர வாகனத்தை

சற்று விரைவாய்

செலுத்திக் கடக்கையில்

கடற்கரை மணலில்

துணையின்

கைப்பிடித்து நடக்கையில்

காவலாய்  மகளை

கல்லூரிவரை விடுகையில்


பார்வையாளர்கள் பக்கம்

வந்துவிட்ட பந்தை

உட்புறமாய்

உதைத்து விடுகையில்

முதல் காதலியின்

முகமொத்த ஒருத்தியை

கடக்க நேர்கையில்


யாருக்கும் தெரியாமல்

என்னுள்

முளைத்து மறையுமென்

இருவது வயது முகம்.


நிலாரவி.

by Nilaravi   on 17 Apr 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன் ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன்
வர்ணஜாலம் வர்ணஜாலம்
நிழலாடும்  நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன் நிழலாடும் நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன்
நீதியைத் தேடி - பாவலர் கருமலைத்தமிழாழன் நீதியைத் தேடி - பாவலர் கருமலைத்தமிழாழன்
நேர்நின்றால்  இருக்கமாட்டீர் - பாவலர்  கருமலைத்தமிழாழன் நேர்நின்றால் இருக்கமாட்டீர் - பாவலர் கருமலைத்தமிழாழன்
தெய்வ நம்பிக்கை தெய்வ நம்பிக்கை
உத்திரத்தில் தொங்குபவன் உத்திரத்தில் தொங்குபவன்
கவிஞனின் கவிதையில் குழந்தை கவிஞனின் கவிதையில் குழந்தை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.