LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) கீழ்கண்ட பணிகளுக்கான 313 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறன்றன.

காலியிட விபரம் : உதவியாளர் பிரிவில் ஆமதாபாத்தில் 20, பெங்களூருவில் 97, ஐதராபாத்தில் 27, டில்லியில் 4, ஸ்ரீஹரிகோட்டாவில் 35, திருவனந்தபுரத்தில் 89 என 272 பணியிடங்களுக்கும், கிளார்க் பிரிவில் பெங்களூருவில் 2 இடமும், விண்வெளி துறையின் கீழ் உதவியாளர் பிரிவில் ஆமதாபாத் 16, பெங்களூரு 7, ஐதராபாத் 1, டில்லி 14, திருவனந்தபுரம் 1 என 39 பணியிடங்களும் என மொத்தம் 313 காலியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 31.07.2017 அடிப்படையில் 18 - 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதிலிருந்து ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை உள்ளது.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். கூடுதலாக கம்ப்யூட்டர் தொடர்புடைய தகுதியும் தேவைப்படும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் மூன்று விதமான பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒரே பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களுக்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பக் கட்டணம் : 100 ரூபாய். இதனை பாரத ஸ்டேட் வங்கிக் கிளை அல்லது ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 15.10.2017

தேர்வு மையங்கள் :
அகமதாபாத், பெங்களூரு, சென்னை. டெஹ்ராடூன், கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, புதுடெல்லி, திருவனந்தபுரம். தேர்விற்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.07.2017

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் www.isro.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

by Swathi   on 24 Jul 2017  0 Comments
Tags: ISRO Jobs   இஸ்ரோ   இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்              
 தொடர்புடையவை-Related Articles
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற நாசா முடிவு !! இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற நாசா முடிவு !!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கேட்டரிங் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்கள் !! இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கேட்டரிங் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்கள் !!
தோல்விகளை கடந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,-டி5 ராக்கெட் !! தோல்விகளை கடந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,-டி5 ராக்கெட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.