LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஒரே ராக்கெட்டில் 31 செயற்கை கோள்களை அனுப்பும் இஸ்ரோ!

ஒரே ராக்கெட்டில் 31 செயற்கை கோள்களை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து இஸ்ரோ  அனுப்புகிறது.

வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ‘ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங்’ (ஹிஸ்சிஸ்)’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.

டிஜிட்டல் இமேஜிங் சக்தியுடன், ஸ்பெக்ட்ரோஸ்கோபி தொழில்நுட்பத்தையும் இணைத்து இந்த ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதில் உள்ள ஆப்டிக்கல் இமேஜிக் டிடெக்டர் சிப்பை அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் எலக்ட்ரானிக் பிரிவும், சண்டிகரில் உள்ள செமி-கண்டக்டர் ஆய்வு மையமும் இணைந்து உருவாக்கி உள்ளது.

இந்த செயற்கைக்கோள் விண்ணிலிருந்து, பூமியில் உள்ள பகுதிகளின் எலக்ட்ரோமேக்னடிக் அலைக்கற்றைகளில் இருந்து தகவல்களை சேகரித்து அனுப்பும்.

இந்த பெரிய செயற்கைக்கோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறிய மற்றும் நானோ செயற்கைக் கோள்களையும் சேர்த்து பிஎஸ்எல்வி சி43 என்ற ராக்கெட்டில் இஸ்ரோ அனுப்புகிறது. இவற்றில் 23 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை.  

டிச.4ல் ஜிசாட் செயற்கைக்கோள்அடுத்ததாக இஸ்ரோவின் ஜிசாட்-11 என்ற 5.7 டன் எடையுள்ள வர்த்தக செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் டிசம்பர் 4ம் தேதி ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோளில் 40 கு-பாண்ட் மற்றும் கா-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இதன் மூலம் வினாடிக்கு 14 ஜிகாபைட் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும். இதனால் இந்தியாவில் இன்டர்நெட் வேகம் அதிகரிக்கும்.

by Mani Bharathi   on 29 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம்- மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு! இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம்- மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு!
ரயில் 18-க்குப் பிறகு அதிநவீன தொழில்நுட்பத்துடன் தேஜஸ் ரயில் பெட்டிகள் நாட்டிற்கு அர்ப்பணிப்பு! ரயில் 18-க்குப் பிறகு அதிநவீன தொழில்நுட்பத்துடன் தேஜஸ் ரயில் பெட்டிகள் நாட்டிற்கு அர்ப்பணிப்பு!
சிலிண்டர் விலை குறைப்பு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு! சிலிண்டர் விலை குறைப்பு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!
உலக அளவில் ஊட்டச்சத்து மிகவும் குன்றிய குழந்தைகள் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடம்! உலக அளவில் ஊட்டச்சத்து மிகவும் குன்றிய குழந்தைகள் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடம்!
"உலகிற்கு இந்தியா வழங்கி இருக்கும் பரிசு யோகா!"- பிரதமர் மோடி புகழாரம்!
வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப் படாத நிலங்களுக்கு தெரு மதிப்பு நிர்ணயிக்கக் கூடாது: சார்பதிவாளர்களுக்கு உத்தரவு! வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப் படாத நிலங்களுக்கு தெரு மதிப்பு நிர்ணயிக்கக் கூடாது: சார்பதிவாளர்களுக்கு உத்தரவு!
பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்டை 31 செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோ விண்ணில் ஏவியது! பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்டை 31 செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோ விண்ணில் ஏவியது!
இந்தியாவில் உதவி பேராசிரியராக பணியாற்ற வெளிநாட்டில் டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு நேரடியாக அனுமதி! இந்தியாவில் உதவி பேராசிரியராக பணியாற்ற வெளிநாட்டில் டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு நேரடியாக அனுமதி!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.