LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

இதயத்துள் உறைகின்ற மேகம்

 

ஒரு சிறகுமுளைத்த கவிஞனைப்போல
மேகம்
சுதந்திரமாய்த் திாிகிறது.
ஆகா
அது வானம்.
அடியும் முடியும் தொியவே மாட்டாத
திறந்து கிடக்கின்ற சுவனம்
அதைப்பார்த்து மயங்குவதா?
இல்லை,
மேகத்தைப் பார்த்து மனம் ஏங்குவதா?
நான் நினைக்கிறேன்,
இந்த நூற்றாண்டில் வெண்மேகம் மட்டும்தான்
பாிபூரணமான சதந்திரத்தை
அனுபவிக்கின்ற ஒன்றென்று.
இது 
தும்பிக்குக் கூட
சிறகுகள் நோண்டப்பட்டு
வாலில் கடதாசி முடியப்பட்ட யுகம். 
'மேகம்'
அதற்கு வாலும் இல்லை
சிறகும் இல்லை
வெட்டுதற்கு.
அதனால்தான் அது
சிறு குழந்தையின் மனம்போல பூக்கிள்ளி முகருவதும்
பிறகு கழிப்பதுமாய்
வானப் பூந்தோப்பில் மேய்கிறது மேய்ச்சல்....
இந்த வகையில்தான்
நான் வெண்மேகத்தை விரும்புகிறேன்.
அதைப்போல நானுமொரு பஞ்சுப் பொதியாகி
நினைத்தால் நின்று
தேவையென்றால் நடைகட்டி
யாாின் கெடுபிடிக்கும் வால்முறுக்க மாட்டாமல்
வாழும் நிலையொன்று எனக்கும் கிடைக்குமென்றால்
எப்படி இனிக்கும் சுகம்!
இன்று
மிகவும் சுதந்திரமாய்,
ஒன்றுக்கு ஒன்று குதிநக்கும் கொடுமைக்கே
இடமற்றுக் காற்றுப்போல்
திாிகின்ற ஒன்றென்றால்,
நான்
மீண்டும் வலியுறுத்த நேர்கிறது
அது வெண்மேகமாகத்தான் இருக்க முடியுமென்று.
என்பிாிய வெண்மேகத்தைப் பற்றி
இனியாச்சும் நானொரு
கவிதை எழுதவேண்டும். 
மனம்
அதிகாலையைப்போல குளிர்ந்து கிடக்கையில்
இருக்கின்ற கற்பனை அனைத்தையும்
அள்ளித் தௌித்து
பஞ்சு மேகத்தைப் பாடி
சிம்மாசனமேற்றிப் பார்க்கத்தான் வேண்டும்.

 

ஒரு சிறகுமுளைத்த கவிஞனைப்போல

மேகம்

சுதந்திரமாய்த் திாிகிறது.

 

ஆகா

அது வானம்.

அடியும் முடியும் தொியவே மாட்டாத

திறந்து கிடக்கின்ற சுவனம்

 

அதைப்பார்த்து மயங்குவதா?

இல்லை,

மேகத்தைப் பார்த்து மனம் ஏங்குவதா?

 

நான் நினைக்கிறேன்,

இந்த நூற்றாண்டில் வெண்மேகம் மட்டும்தான்

பாிபூரணமான சதந்திரத்தை

அனுபவிக்கின்ற ஒன்றென்று.

 

இது 

தும்பிக்குக் கூட

சிறகுகள் நோண்டப்பட்டு

வாலில் கடதாசி முடியப்பட்ட யுகம். 

 

'மேகம்'

அதற்கு வாலும் இல்லை

சிறகும் இல்லை

வெட்டுதற்கு.

அதனால்தான் அது

சிறு குழந்தையின் மனம்போல பூக்கிள்ளி முகருவதும்

பிறகு கழிப்பதுமாய்

வானப் பூந்தோப்பில் மேய்கிறது மேய்ச்சல்....

 

இந்த வகையில்தான்

நான் வெண்மேகத்தை விரும்புகிறேன்.

அதைப்போல நானுமொரு பஞ்சுப் பொதியாகி

நினைத்தால் நின்று

தேவையென்றால் நடைகட்டி

யாாின் கெடுபிடிக்கும் வால்முறுக்க மாட்டாமல்

வாழும் நிலையொன்று எனக்கும் கிடைக்குமென்றால்

எப்படி இனிக்கும் சுகம்!

 

இன்று

மிகவும் சுதந்திரமாய்,

ஒன்றுக்கு ஒன்று குதிநக்கும் கொடுமைக்கே

இடமற்றுக் காற்றுப்போல்

திாிகின்ற ஒன்றென்றால்,

நான்

மீண்டும் வலியுறுத்த நேர்கிறது

அது வெண்மேகமாகத்தான் இருக்க முடியுமென்று.

 

என்பிாிய வெண்மேகத்தைப் பற்றி

இனியாச்சும் நானொரு

கவிதை எழுதவேண்டும். 

 

மனம்

அதிகாலையைப்போல குளிர்ந்து கிடக்கையில்

இருக்கின்ற கற்பனை அனைத்தையும்

அள்ளித் தௌித்து

பஞ்சு மேகத்தைப் பாடி

சிம்மாசனமேற்றிப் பார்க்கத்தான் வேண்டும்.

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.