LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

இயைபுத் தொடை

இயற்பாத் தொடைகளாம் எதுகையும் மோனையும்
இயைபும் சிந்திலும் இயலும்; எனினும்
இயைபுத் தொடைபல இடங்களிற் பயிலுதல்
சிந்துப் பாடலின் சிறப்பா கும்மே.
கருத்து : இயற்பாக்களுக்கு உரிய தொடைகளாகி எதுகைத் தொடையும், மோனைத் தொடையும், இயைபுத் தொடையும் சிந்துப் பாக்களில் அமையும்; என்றாலும் இயைபுத் தொடை பல இடங்களிற் பயின்று வருவது சிந்துப் பாடலின் சிறப்பாகும்.
விளக்கம்
எதுகை : முதல் எழுத்து அளவொத்துவர அடுத்த எழுத்து ஒன்றோ பலவோ ஒன்றுவது எதுகை எனப்படும். அது அடியெதுகை, சீரெதுகை என்று இரண்டு வகைப்படும். சீரெதுகையிலும் அடியெதுகை சிறப்புடைத்து.
காட்டு
கொந்து குழல் இந்நுதல் யானைக் - கோடு
கும்பமெனும் இன்பமுலை அம்பிகையின் உதவும்
நந்துலவு சிந்துதிரை வீசும் - சந்த
னாசலகு கேசனடி நாடிடுமென் மனமே   (வ.க.கா.சி. 4)
இதில் கொந்து - நந்து என்பன அடியெதுகைகள். கொந்து-இந்து, கும்ப-இன்ப-அம்மி, என்பவையும் நந்து-சிந்து-சந்த என்பனவும், னாசலகு-கேசனடி என்பனவும், சீரெதுகைகள். 
மோனை : முதல் எழுத்து ஒன்றுவது மோனை. இது அடிமோனை, சீர்மோனை என்று இருவகைப்படும், அடிமோனையிலும் சீர்மோனை சிறப்புடையது. 
மேற்காட்டிய கண்ணியில் அடிமோனை இல்லை. கொந்து-கும்ப என்பதும், நந்து-நாடிடு என்பதும் சீர்மோனைகள். 
இயைபு : இறுதி ஒன்றி வருவது இயைபு எனப்படும். இசைப் பாக்களுக்கு இயைபு சிறந்தது. இயைபிலும் அடியியைபு, சீரியைபு என இரண்டு வகையுண்டு. அடியியைபே சிறப்புடையது. எனினும் இசைப் பாடல்களில் ஒவ்வொரர் அரையடியும் ஒரு வரியாக வருவதால் அவற்றின் இறுதியில் வருவன சீரியைபாக இருந்தாலும் சிறப்புடையனவாகவே உள்ளன. அடியிறுதி, அரையடி இறுதியோடு வேறிடங்களிலும் வருதலுண்டு. காவடிச் சிந்துப் பாடல்களில் இவற்றைக் காணலாம். ஒரடியில் நான்கு, ஐந்து இயைபுகளும் வருதலுண்டு. 
காட்டு
நந்தவ னத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை - வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி       (சி.பா.ப.224)
இந்த ஆனந்தக் களிப்பில் ஆண்டி, வேண்டி, தோண்டி, தாண்டி என்ற இயைபுகள் அரையடி தோறும் வந்துள்ளதால் பாடலில் ஒலி நயம் நிறைந்திருப்பதைக் காணலாம்.
காட்டு
என்னடி நான்பெற்ற மங்கை - இள
நங்கை - விடல்
சங்கை - என்ன
இப்படி ஆயிற்றே செங்கை - வளை
இடர்பெற்றிட உடைபட்டன
நடைகெட்டது னுடையிற்பல
எய்தின சந்தனப் புள்ளி - என்ன
செய்தனை   சொல்லடி கள்ளி          (கா.சி.க.வ.ப.194)
இந்த அடியில் மங்கை-நங்கை-சங்கை-செங்கை என்றும், புள்ளி-கள்ளி என்றும் இயைபுகள் வந்துள்ளதைக் காண்க.
எனவே இயற்பாத் தொடைகளாகிய எதுகைத் தொடையும், மோனைத் தொடையும், இயைபுத் தொடையும் சிந்துப் பாடல்களிலும் வரும் என்பதும், அவற்றில் இயைபுத் தொடை சிந்துப் பாடலின் பல இடங்களிலும் பயின்று வந்தால் பாடல் சிறப்பாக இருக்கும் என்பதும் உணரத் தக்கனவாகும்.

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.