LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜெய்ஹிந்த் -2 எனது லட்சியப்படம் : அர்ஜுன் !!

ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த் -2. இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் . புதுமுகமாக சிம்ரன் கபூர் என்ற முன்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாலே, அதுல் மாதூர், மயில்சாமி, மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமித் திவாரி, பேபி யுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். எச் சி வேணுகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். அர்ஜூன் ஜெனியா இசை அமைக்கிறார். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். 

 

ஜெயஹிந்த் 2 படம் குறித்து அர்ஜுனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது, தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இதை உருவாக்குகிறேன். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்தது விட்டது. சமீபத்தில் பாங்காக்கில் ஒரு சண்டை காட்சியை படமாக்கினோம். ராணுவம் சம்மந்தப்பட்ட இடம் அது. சுமார் பத்து ஏக்கர் அந்த இடம் முழுக்க உபயோகம் இல்லாத பிளைட்கள், படகுகள், கார்கள், என குவிந்து கிடந்தது. அங்கே அமெரிக்க ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதும் காட்சிகள் பத்து நாட்கள் படமானது. இது என் இயக்கத்தில் ஒரு லட்சியப் படம் என்றே சொல்லலாம். ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வியை பொறுத்தே அமைகிறது என்கிற கருத்தை வலியுறுத்தும் படமாக ஜெய்ஹிந்த் -2 இருக்கும் என மிகிழ்ச்சியுடன் கூறுகிறார் அர்ஜுன்..

by Swathi   on 03 Jan 2014  0 Comments
Tags: ஜெய்ஹிந்த் -2   ஜெய்ஹிந்த்   ஜெய்ஹிந்த் -2 அர்ஜுன்   அர்ஜுன்   Jai Hind 2   Jai Hind   Arjun  
 தொடர்புடையவை-Related Articles
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !! ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !!
அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்கிறேன் : அர்ஜுன் !! அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்கிறேன் : அர்ஜுன் !!
ஜெய்ஹிந்த்-2 இசை வெளியீட்டில் மேஜர் முகுந்த் குடும்பத்தை பெருமைப்படுத்திய அர்ஜுன் !! ஜெய்ஹிந்த்-2 இசை வெளியீட்டில் மேஜர் முகுந்த் குடும்பத்தை பெருமைப்படுத்திய அர்ஜுன் !!
ஜெய்ஹிந்த் -2 எனது லட்சியப்படம் : அர்ஜுன் !! ஜெய்ஹிந்த் -2 எனது லட்சியப்படம் : அர்ஜுன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.