|
|||||
ஜெய்க்கு ஜோடியாக ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா உட்பட 9 கதாநாயகிகள் !! |
|||||
வாலு திரைப்படம் ஒரு வழியாக ரிலீசுக்கு தயாராகிவிட்டதால், அதன் இயக்குனர் அடுத்ததாக ஒரு வித்தியாசமான திரைக் கதையை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்க போகிறாராம். இந்த படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்க இருக்கிறார். படத்தில் ஒரு ஹீரோ என்றாலும், ஹீரோயின்கள் ஒருவரல்ல..... ஒன்பது பேராம். இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானி, நயன்தாரா, த்ரிஷா, ஆன்ட்ரியா, லட்சுமிராய், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட 9 கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்களாம். இந்த படத்தில் சிம்புவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கலாம் எனத் தெரிகிறது. இந்த படத்திற்கு கன்னி ராசி எனப் பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
|||||
by Swathi on 03 Jun 2014 0 Comments | |||||
Tags: Kanni Rasi Nine Heroines Jai ஜெய் ஒன்பது கதாநாயகிகள் கன்னி ராசி | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|