LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அன்புள்ள மாணவ செல்வங்களே... இளைஞர்களே...

அன்புள்ள மாணவ செல்வங்களே, இளைஞர்களே, தமிழ்ச் சமூகத்தை மாற்றி அமைத்த எனது அருமை சகோதர சகோதரிகளே !

 

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்னும் தமிழ் முதுமொழிக்கேற்ப, உங்களின் "தமிழ் மரபுப் புரட்சி" மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இது உங்களுக்குத் தொடக்கம் தான், இன்னும் நீங்கள் நிறையச் சாதிக்கவேண்டியுள்ளது. உண்மையைச் சொல்லப்போனால் உங்களை மட்டுமே நம்பித்தான் அடுத்த தலைமுறை உலக தமிழ் சமூகம் இருக்கின்றது. இந்தப் புரட்சியின் மூலம் நீங்கள் சாதித்தவை ஏராளம், அனைத்தையும் பட்டியலிட முடியாவிட்டாலும் சில இங்கே,

 

 • உலகத்தமிழர்களை ஒன்றிணைத்தது.
 • தமிழன் ஏட்டளவில் மட்டும் ஒழுக்கத்தைப் போதிப்பவன் அல்ல, அதனைச் செயல்படுத்தி முன்மாதிரியாக எப்படி இருப்பது என்பதை உலகுக்குத் தெரிவித்து உள்ளீர்கள்.
 • சாதி மதத்தை புறந்தள்ளி சாதிக்கும் மனப்பான்மை.
 • பொறுமையும், மன உறுதியும் நீங்கள் வெயிலிலும், மழையிலும், பனியிலும் தவமிருந்தபோது வெளிப்பட்டது. 
 • அனைவரும் சகோதர சகோதரிகள் என்று வெறும் வாயில் சொல்லாமல் மனப்பூர்வமாக நடந்துகொண்ட விதத்தில் "ஆண்கள் வாய்ப்பு கிடைக்காதவரை நல்லவர்கள்" என்ற வார்த்தையை பொய்யாக்கி உள்ளீர்கள்.
 • வாக்களிப்பது மட்டுமே அரசியல் அல்ல என்றுணர்ந்து நீங்களும் அரசியல் கற்றுக்கொண்டீர்கள். 
 •  "தமிழனுக்கு பேசத்தெரியது, எப்படி தொடர்பு கொள்வதென்பது தெரியாது" என்பன போன்ற பொதுவான வாதத்தை உடைத்தெறிந்து உள்ளீர்கள்.
 • நட்பையும், துரோகத்தையும் பிரித்து பார்க்கும் மனப்பக்குவம் பெற்றுள்ளீர்கள்.
 • கொச்சையாகப் பேசியவரையும் அன்புடன் வழிநடத்தி மன்னிப்பு கூற வைத்தீர்கள்.
 • "வீரம்" காட்டுவது என்பது அடக்குவது அல்ல, "எப்படி வெற்றி பெறுவது" என்பதை உலகுக்கு எடுத்துரைத்துள்ளீர்கள்.
 • தலைமைப் பண்பு என்பது வெளியிலிருந்து வரவேண்டியதில்லை தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது என்பதை உணர்த்தினீர்கள்.

 

மொத்தத்தில், வள்ளுவமும் அகநானூறும் புறநானூறும் கலித்தொகையும் சிலப்பதிகாரமும் மற்றுமுள்ள அனைத்துத் தமிழும் எடுத்துரைக்க வந்த அனைத்தையும் உங்களின் நற்பண்பால் இந்த உலகுக்கு உதாரணத்துடன் காட்டினீர்கள். அதற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

அதேபோல், அடுத்துவரும் உலகை மீண்டும் தமிழ் சமூகம் ஆளவேண்டுமானால், நீங்கள் செய்யவேண்டியது இரண்டே இரண்டு தான். ஏனெனில் இந்த இரண்டும் தான் ஆளுவதற்குத் தேவை என்பதை நாம் கற்றுக்கொண்ட பாடம்.

 

முதலில் பணம். ஆம், அறிவழியில் பொருளீட்டுவோம் என்று மன உறுதியுடன் நீங்கள் ஒவ்வொருவரும் தொழில் முனைபவர்களாக மாறுங்கள். அதேபோல் நல்லவைகள் எங்கிருந்தாலும் தயங்காமல் ஏற்றுக்கொண்டு, நமது அடிப்படையை விட்டு விலகாமல் எந்தத் தொழில் செய்தாலும் அதில் தமிழ் மரபு, கலை, பண்பாடு, சித்த மருத்துவம், விவசாயம் தொடர்பாகவும், இயற்கையைப் பாதுகாப்பதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

 

அடுத்து அதிகாரம். நீங்கள் தற்சார்புடைய அதிகாரத்துடன் இருந்தால் மட்டுமே உலகை நன் முறையில் வழிநடத்திச்செல்ல முடியும். அன்பும் அமைதியும் பொறுமையும் நுண்ணறிவும் தேவையானநேரத்தில் விட்டுக்கொடுத்தும் தொண்டாற்றியும் மன உறுதியுடனும் முன்னேறுங்கள். வருங்காலம் உங்கள் கையில். அமைதியான பசுமை உலகம் படையுங்கள்.

வாழ்க தமிழ், வாழ்க பாரதம்.

 

-யோகி ராஜாபாபு 

by Swathi   on 24 Jan 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்துவதற்கு கலெக்டர் தடை! தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்துவதற்கு கலெக்டர் தடை!
செப்டம்பர் 29-ந் தேதி சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட உத்தரவு! செப்டம்பர் 29-ந் தேதி சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட உத்தரவு!
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்! எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!
தனித்தமிழ் அறிஞர் புலவர் கி.த.பச்சையப்பனார் மறைவுக்கு அஞ்சலி தனித்தமிழ் அறிஞர் புலவர் கி.த.பச்சையப்பனார் மறைவுக்கு அஞ்சலி
கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சூர்யா! கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சூர்யா!
வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ. 5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்! வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ. 5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்!
சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழை முதன்மையாக எடுத்து படிக்க ஆர்வம்காட்டும் சீன மாணவர்கள் .. சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழை முதன்மையாக எடுத்து படிக்க ஆர்வம்காட்டும் சீன மாணவர்கள் ..
தமிழக மின்வெட்டு தீர நிலக்கரி ஒதுக்கீடு! தமிழக மின்வெட்டு தீர நிலக்கரி ஒதுக்கீடு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.