LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருக்குறள் வழி வாழ்ந்து மறைந்த அமெரிக்கத் தமிழர் முனைவர்.அழகப்பா ராம்மோகன் அவர்கள் நினைவைப் போற்றும் விதமாகச் சிறப்புக் கட்டுரைத் தொகுப்பு

 

முனைவர்.அழகப்பா இராம்மோகன் குறித்து அவரது நண்பர் சிகாகோ வ.ச.பாபு அவர்கள் குறிப்பிடுகையில் :

இயற்கையில் உறவுகளைத் தேர்ந்தெடுப்பதோ, நிர்ணயிப்பதோ நம்மிடம் இல்லை. உறவாக அமைந்துவிட்ட தாயும், தந்தையும், உடன் பிறப்புகளிடையேயும் அமையும், அமைந்துவிட்ட பாசமும், பிணைப்பும் ஆயுட்காலம் முழுமையுமே தொடருகின்றன,, பின்னரும் தொடர்ந்தே சரித்திரமாக இம்மண்ணில் பதிந்துவிடுகின்றன.இடையில் நாமாகத் தேர்ந்தெடுக்கும் உறவுகள் காலப்போக்கில் நம்மோடு இணைந்த, இணைக்கப்படும் உறவுகளாகவும், நட்பாகவும் அமைந்துவிடுவது என்பதே வாழ்வின் வெற்றிதோல்விக்கும் முதன்மையாகிவிடுகிறது. நல்லதொரு  நட்பு என்றதொன்று அமைந்துவிடல் என்பதையே வாழ்வின் பெரும் பேராகப் ஏற்றுக்கொண்டுசெல்லல் என்பதனை வள்ளுவம் நட்பு எனப் பதிவு செய்துள்ளது.

அயலகத்தமிழனாக அமெரிக்க மண்ணில் வாழ்வமைத்துக் கொண்ட நாட்களில், சிகாகோ மண்ணில் 1974ன் நாளொன்றில் திரு. இராம்மோகன் அவர்களை மிச்சிகன் ஏரிக்கரை இல்லத்து சந்தித்த சிற்சில நாட்களில்தான்  சிகாகோ வாழ் தமிழர் ஒன்றிணைந்து செயலாற்ற, கருத்துகள் பரிமாற, தமிழ் கலை, கலாச்சாரம், பண்பாடுகாத்திட புலம்பெயர்ந்த நாட்டில் அமைப்புகள்தோன்றிட திரு. இராம்மோகன் ஒரு "மூலகர்த்தா" என்பதனை அறிய முடிந்தது.(1975 களின் நினைவுகள்இன்றும் மனத்தின் அடித்தளத்தில் தோன்றிடுவது உண்டு!)  1985 களில் அதுவும் சிகாகோ தமிழ்ச்சங்க நிகழ்ச்சி ஒன்றில். நட்பின் நெருக்கம் சற்றே அதிகமாகிட, பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்த கருத்துகளோடு, நெருங்கிய நாட்களாக, 1987ல் நடந்த ஒரு முயற்சிதான் திரு. இராம்மோகன் அவர்களின் இரு திங்களுக்கு ஒரு காரிக்கிழமை என்று வடமேற்கு பல்கலைக்கழகத்து அமைக்கப்பட்ட சிறார்க்குத் தமிழ்க்கல்வி. பெற்றவர்க்கும் மற்ற சிகாகோ வாழ் தமிழர்க்கும் தமிழ்ச்சார்ந்ந ஈடுபாடு தொடர வாய்ப்பாக "தமிழுக்கு ஒரு அந்திப்பொழுது" நிகழ்ச்சி. தொண்டாற்ற நின்றவர்களும், மனமுவந்து வந்த ஆர்வலர்களும் நிறைந்திருக்க அரங்கம் முழுமையாக இருந்த நாட்கள் பல! எனினும்     

தமிழ்க்கல்விக்கு அமைந்த வகுப்புகளின் காலஇடைவெளியும், பயணதூர இடைவெளியும் தடைக்கற்களாக அமைந்தமையால் "கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன" கதையாய் தமிழுக்கென ஒரு அந்திப்பொழுதின், சிறார்கள் கல்வி அமைப்பும், தமிழறிவு வளர்ச்சிக்கென நிலைபாடு கொண்டமைந்த நிகழ்வுகளும் பங்காளர்களின் வருகையின்மையால் நிலை தடுமாறி நின்றுவிட்ட நிலையாகியது. ஆயினும் வடமேற்கு பல்கலைக்கழகத்துத் தமிழ்ப்பள்ளி ஆரம்பித்த இணைகால நேரத்து 1988ல் இலக்கிரேஞ்சு நகரில் நண்பர் மருத்துவர் இளங்கோ முன்னிலையில் இருவாரத்திற்கு ஒரு ஞாயிறு என்றமைந்த தமிழ்ப்பள்ளி ஆரம்பித்தது. இவ்விரண்டு பள்ளிகளின் முழுமை வடிவமே 30ஆண்டு காலமாக இன்றும் தொடரும் தமிழ்ப்பள்ளிகள்.  இப்பள்ளிகளின் கடந்த 2019 மே திங்கள் 15வதுஆண்டு நாள் நண்பர் திரு. இராம்மோகன் அவர்களின் பிறந்த நாளாக அமைந்தமை, அவரது 80 பிறந்த நாளை கொண்டாட அவரின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவும் ஒரு வாய்ப்பளித்தது.. 

வடமேற்கு பல்கலைக்  கழகமமைந்த தமிழ்ப்பள்ளி காலக்கட்டத்திலே தமிழுக்கென வளர்ச்சியாக அமைந்ததை,  மேலும் மேன்மையுள்ள நோக்கை அடைய திரு. இராம்மோகனின் முயற்சியாகப் பதிவுசெய்யப்படாத நிகழ்வுகளை மாற்றியமைக்க, தமிழுக்கென ஒரு பதிவுபெற்ற அமைப்பென "உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை" நவம்பர் 15, 1990  உருவாக்கப்பட்டது. இரு ஆண்டில் அமைப்பு அமெரிக்க மண்ணில் வரிவிலக்கு பெற்ற அமைப்பாகவும் முன்னேற்றப்பட்டது. 

பதிவுபெற்ற அமைப்பானது என்பதோடு நில்லாது சாதனைகள் படைப்பதாகவும் இருக்கவேண்டும் என்ற தீர்க்கமான எண்ணம் சூழவே நண்பர்கள் துணையுடன். திரு. இராம்மோகனின் பெருமுயற்சித் திட்டங்களாகத் திருக்குறள் மற்றும் தமிழர் பண்பாட்டுக் கையேடு வெளியீடு செயற்பாடு, தமிழகப்புறநகர் எளிய மாணாக்கர்களுக்கென "வேதியல், பூதியல், கணிதவியல்" செயற்திட்டம், தமிழிசை மேம்பாட்டுச் செயற்திட்டம், தமிழரிடை நூல்படித்தல் அவசியத்தை வலியுறுத்த "தமிழ் மையம் – வள்ளுவர் அறிவகம், படிப்பகம்" செயற்திட்டம், தொன்தமிழ் நூல் மறுமலர்ச்சி செயற்திட்டம் போன்றவை 1993ல்  அறிமுகப்படுத்தப்பட்டன. திட்டங்களின் ஒருங்கிணைப்பு என்ற பெரும் பொறுப்புப்பணியை ஏற்று நடத்தியவரும் திரு. இராம்மோகனே!.

தமிழ் மொழிக்கான தொண்டனாக மற்றுமில்லாது, உலகத்தமிழர்க்கான தொண்டனாகவும் 1984லிருந்தே ஈழத்தமிழர் தன்னாட்சிதனுக்கு ஆதரவு ஆரம்பித்த அன்று முதல், கருத்தொத்த நண்பர்கள்தம் துணையோடு ஈழத்தமிழரின் துயர் போக்கிட அவர்களின் அறம் சார்ந்த வாழ்வு நிலைபெற்றிட 84 தொடங்கி 2009 வரையும் திரு. இராம்மோகன் ஆற்றிய பணிகள் பல!  ஈழத்தமிழ் மண்ணில் நடந்துற்ற உட்போரில் துன்புற்ற தமிழர்க்குத் தேவையான மருந்து வகைகளை American Medical Aid Association அமைப்பின் உதவியோடு, நண்பர்கள்தம் துணையோடு அனுப்பி வைக்கப்பட்டதின் ஒருங்கிணைப்பாளர் திரு. இராம்மோகன். 


ஈழத்தமிழர் மட்டுமில்லாது அமெரிக்க மண்ணில் ஏழ்மையுடன் வாழும் மனிதர்களையும் நினைவில் கொண்டு 1993ல் Christoper House ல் ஆரம்பிக்கப்பட்ட "வறியோர்க்கு உணவு" நிகழ்விற்கு முதன்மையானவர் திரு. இராம்மோகன். 1993ன்றைத் தொடர்ந்து பெரும் வளர்ச்சி பெற்று இன்று(2019)  ஆண்டிற்கு ஆறு முறை வறியோர்க்கு உணவு நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதுவும் தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள் உதவியுடன்தான். 

அமெரிக்க மண்ணில் "திருக்குறளாய்ந்த" தமிழ்த்திருமணங்களே நடந்திடல் வேண்டுமென்ற உள்ளுணர்வு சேர்ந்திடத் தமிழ் இளையோர்க்குத் திருமணம் செய்திடப் பெருமையும் நண்பர் அவரை அடையும். இதனை ஒழுங்குறச் செய்திட பதிவு பெற்ற "The Wedding,  ThirumaNam" அமைப்பும் உருவாகியுள்ளது.

மேற்கண்ட பல்வேறு துறைகளோடும் தம்மை இணைந்து கொண்டிருக்கும் திரு. இராம்மோகனின் ஈடுபாடு தமிழறிஞர் விருந்தோம்பலிலும் ஈடு இணையற்றது. அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் அழைப்போடு ஆண்டுதோறும் அமெரிக்க மண் வந்தருளிய தமிழறிஞர்களை தம் இல்லத்தில் வரவேற்று விருந்தோம்பிய திருவாட்டி. மீனா அவர்களையும், திரு. இராம்மோகன் அவர்களையும் அமெரிக்க மண் வாழ் தமிழர்கள் என்றுமே நினைவில் கொள்வர் 

by Swathi   on 21 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.