LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

ஜெகன்னாதப் பெருமாள்

சுவாமி : ஜெகன்னாதப் பெருமாள்.

அம்பாள் : கல்யாணவல்லி.

தீர்த்தம் : ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்.

தலவிருட்சம் : அரசமரம்.

தலச்சிறப்பு : இக்கோவில் திவ்ய தேசம் 108 வைணவ சேத்திரங்களில் 44வது ஆகும். ஆழ்வார்களில் திருமங்கையழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதாகும். புல்லாரண்யம், தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.

திருத்தல வரலாறு : முன்னொரு காலத்தில் புல்லர், காவலர், கண்வர் என்ற 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்த பெற்றனர். மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரச மர ரூபமாய் அவர்களை காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்கு சக்ர தரியாய் அபய முத்ரையுடன் காட்சியளித்து தன்னை சேவிக்கும் பக்தர்களை காக்கும் பொருட்டு இப்பொழுதும் சான்னித்யமாய் அருள் பாலிக்கிறார்.

தசரதன் மகபேறு வேண்டி உலகத்தை சுற்றிவரும் பொழுது இந்த பெருமாளை 60000 மனைவிகள் இருந்தும் குழந்தை பேறு இல்லையே என்று வேண்ட உடனே ஆதி ஜெகன்னாத பெருமாள் ஒரு மந்திரத்தை சொல்ல பின்பு தசரதன் இத்தலத்தில் நகாபிரதிஷ்டை (அதாவது இப்போது அந்த சந்தான கிருஷ்ணனை தர்பசயன ராமர் சன்னதி அருகில் தரிசிக்கலாம்) செய்து பின் புத்ரகமோஷ்டி யாகம் செய்ய பெற்றதாக கூறப்படுகிறது.

இராமாயணத்தில் சீதையை ராமன் தேடி வரும் காலத்தில் இத்தலத்தில் சேதுக்கரை வரை சென்று எங்கெங்கிலும் சமுத்திர மயமாய் இருக்கிறதே எப்படி செல்வது, கடலைதாண்டுவதா? யார் உதவியை நாடுவது? தெற்கே சென்ற அனுமனையும் காணவில்லையே? என்ற ஆயாசத்துடன் வல்வில் ராமன் சோகமயமாய் தன் தம்பி லக்ஷ்மணன் மடியில் சயனம்(படுக்கை) தலைசாய்த்து தர்பையை பரப்பி உடல் நீட்டி அதாவது 3 நாட்கள் இத்தலத்தில் உபவாசம் கிடந்தார்.

இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.
அரசமரத்தடியில் நாகர் சிலை

கருவறையைச் சுற்றிலும் இக்கதை வண்ணப்படங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் சிறப்பாக மிளிரும் சிற்பக்கலை போல, சித்திரக் கலைக்கும் சான்றாக விளங்குகிறது.

இந்தச் சன்னிதிக்கு முன்னதாக சந்தான கோபாலன் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். எட்டு யானை களுடனும், எட்டு நாகங்களுடனும், ஆமையை ஆசனமாகக் கொண்டுள்ள ஆதிசேஷன் மீது கண்ணன் காட்சி தருகிறார். இவரைப் பிரார்த்தித்துக் கொண்டு நாகப் பிரதிஷ்டை செய்தால், நாகதோஷமும் புத்திரதோஷமும் விலகும் என்பது நம்பிக்கை.

அதன் எதிரே கொடிமரத்துடன் கூடிய பட்டாபிராமர் சன்னிதி உள்ளது. ராவண வதம் முடித்து புஷ்பக விமானத்தில் சீதையுடன் திரும்பும் போது, பக்தர்களின் வேண்டுகோளுக்கு இசைந்து இங்கே பட்டாபிஷேக காட்சியை ராமன் கொடுத்தாராம். இந்தச் சன்னிதியில் நின்ற நிலையில் ராமனும், அருகே தம்பி லட்சுமணனும், சீதை உடனிருக்க தோற்றம் தர அனுமன் குவித்த கரங் களோடு நிற்கிறார்.

இந்த திவ்விய தேசத்தில், பின்புறம் தல விருட்சமாக ஆண்டுகள் பல கடந்த அரசமரம் உள்ளது. இலையிலிருந்து வேர்வரை மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது பொதுவான கருத்து. ‘மரங்களில் நான் அரசாக இருக்கிறேன்’ என்பது கீதையில் கண்ணன் வாக்கல்லவா! இம்மரத்தடியில் தான் பக்தர்கள் நாகப்பிரதிஷ்டை செய்கிறார்கள்.

திருப்புல்லாணி வந்து, கல்யாண ஜெகன்னாதரை சேவிக்க திருமணத் தடைகள் நீங்கும் எனவும், சந்தான கோபாலரை வணங்கி அரசமரம் சுற்றினால் மழலைப் பேறு கிடைக்கும் எனவும், ராம பிரானை வழிபட்டால் வெற்றிகள் குவியும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.


திருவிழாக்கள் :

பிரம்மோற்சவத் திருவிழா - பங்குனி மாதம் ,

ராமர் ஜெயந்தி திருவிழா - சித்திரை மாதம்,

இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தீபாவளி மற்றும் வாரத்தின் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலில் கூட்டம் பெருமளவில் இருக்கும்.

அருகிலுள்ள நகரம் : திருப்புல்லாணி.

கோயில் முகவரி : அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில்,

by Swathi   on 16 Oct 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குடும்பத்துடன் கடம்பவனம்  சென்றுள்ளீர்களா?  பார்க்கவேண்டிய  தமிழ்ப் பண்பாட்டுத் திருத்தலம் குடும்பத்துடன் கடம்பவனம் சென்றுள்ளீர்களா? பார்க்கவேண்டிய தமிழ்ப் பண்பாட்டுத் திருத்தலம்
கண்ணைக் கவரும்  பிச்சாவரம் காடு கண்ணைக் கவரும் பிச்சாவரம் காடு
பிச்சாவரம் காடு பிச்சாவரம் காடு
மகாபலிபுரம் மகாபலிபுரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.