LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

ஜிகிர்தண்டா (Jigirthanda)

தேவையானவை :

 

பால் - ஒரு லிட்டர்

சர்க்கரை - 8 தேக்கரண்டி

சைனா கிராஸ் - 4 தேக்கரண்டி

ரோஸ் சிரப் - 1 தேக்கரண்டி

நன்னாரி ஸிரப் - 1 தேக்கரண்டி

ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) - 1

பால் கோவா - 2 தேக்கரண்டி

 

செய்முறை :

 

1. ஒரு லிட்டர் பாலை, சர்க்கரை சேர்த்து அடி கனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் பவுடர் சேர்க்கவும். பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6 மணி நேரம் வைக்கவும்.

 

2. சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை' சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.

 

3. குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஊற்றவும். இப்போது பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும். பிறகு ரோஸ் ஸிரப், நன்னாரி ஸிரப் ஊற்றவும்.

 

4. தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும்.

Jigirthanda

Ingredients for Jigirthanda :


Milk-1litre

Sugar-8tbsp

China Grass-4tbsp

Rose Syrup-1tbsp

Sarsaparilla syrup-1tbsp

Ice-cream (vanilla)-1

Milk Cake-2tbsp

 

Method to make Jigirthanda :


1. Mix the milk with sugar and boil in a deep pan at low flame and add rose power with them. Boil the milk till it reduce to half in volume and let it come to room temperature. Then refrigerate this for 6 hours.

2. Boil the china grass with water and keep aside from stove for 2hours.After 2hours it will look like pieces of jellies. Cut the jellies into small pieces and put them for 6hours in refrigerator.

3. Now take glass. Pour some milk upto half of glass. Put the pieces of china grass with milk. Now pour the rose syrup, sarsaparilla syrup with milk.

4. Finally put a scoop of vanilla ice-cream and put the milk cake on top. Enjoy the drink.

by yogitha   on 28 Aug 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
10-Jul-2015 03:13:20 manjuladevi said : Report Abuse
மிகவும் உபயோகபட்டது ... நன்றி
 
10-Oct-2013 05:49:32 rajalakshmi said : Report Abuse
சீனா க்ரோஸ் மதுரயில் எங்கு கிடைக்கும் ?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.