LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சராகிறார் ஜான் கெர்ரி !

அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜான் கெர்ரி நியமிக்கபடுவார் என , தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறை அதிபரானார். இவருடைய கேபினட்டில் வெளியுறவுத் துறை அமைச்சராக ஹிலாரி கிளின்டன் நியமிக்கப்பட்டார். ஒபாமாவின் நம்பிக்கைக்கு உரிய அமைச்சராகவும், சர்வதேச அளவில் மிக பிரபலமாகவும் இருக்கிறார். அதிபர் தேர்தலின் போதே, ஒபாமா வெற்றி பெற்றாலும் நான் அமைச்சர் பதவியை தொடர மாட்டார் என ஹிலாரி  ஏற்கெனவே அறிவித்து விட்டார்.இந்நிலையில், ஹிலாரி கிளின்டன் வயிற்று வலியால் தவித்து வருகிறார்.வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு வீட்டிலேயே மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில், ஹிலாரி ராஜினாமா செய்வது உறுதி என்றும், தற்போது செனட் வெளியுறவு கமிட்டியின் தலைவராக இருக்கும் ஜான் கெர்ரியை அடுத்த வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்க ஒபாமா திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒபாமாவுக்கு மிக நெருக்கமானவர் ஜான் கெர்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

John Kerry To Get Secretary Of State Nomination

President Barack Obama is expected to nominate Senate Foreign Relations Committee Chairman John Kerry to succeed Hillary Clinton as secretary of state.Kerry, the Democratic nominee for president in 2004 and a stalwart Obama supporter, had been widely tipped as the likely candidate for top U S diplomat following the withdrawal last week of U S ambassador to the United Nations Susan Rice.

by Swathi   on 18 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.