LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF

ஜோதிடம் -அறிமுகம் -ஜோதிட இமயம் அபிராமி சேகர்

இறைவன் படைப்பிலே எத்தனையோ ஜீவராசிகள் இப்பூவுலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மடிந்து விடுகின்றன. அதில் மனிதனும் ஒரு ஜீவராசியாகும். மற்ற ஜீவராசிகளுக்கெல்லாம் ஐந்தறிவை படைத்த இறைவன் மனிதனுக்கு மட்டுமே ஆற்றறிவு உள்ளவனாகப் படைத்தான்.

மற்ற ஜீவராசிகளுக்கெல்லாம் ஒரு வாழ்க்கையோ வரலாறோ இல்லை ஆனால் மனித இனத்துக்கு மட்டுமே ஒரு வாழ்வும் வரலாறும் உண்டு. மற்ற ஜீவராசிகளுக்கு தேவைகளோ ஆசை அபிலாஷைகளோ இல்லை ஆனால் மனிதனுக்கு மட்டுமே தேவைகளும் ஆசை, அபிலாஷைகளும் நிறைய உண்டு.

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்பதற்கேற்ப மனிதனுக்கு இறைவன் ஆறாவது அறிவு என்ற விஷயத்தைக் கொடுத்து அதைக்கொண்டு மனிதன் ஒரு விஷயத்தை அலசி ஆராய்ந்து ஏன் எதற்கு எப்படி என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்து தமது வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ள முயற்சி எடுக்கிறான். ஆனால் மனித இனம் எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் வெற்றிகரமாக அமைகிறதா என்றால் இல்லை என்பதே உண்மையாகும்.

ஏனெனில் எல்லோரது வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த ஏற்ற இறக்கங்கள் எதனால் ஏற்படுகிறது. நாம் நினைக்கும் காரியங்கள் எடுக்கும் முயற்சிகள் சில சமயங்களில் வெற்றியும் சில சமயங்களில் தோல்விகளும் ஏன் ஏற்படுகின்றன என்பதை விளக்குவதே ஜோதிடமாகும்.

4 வேதங்களும் 18 புராணங்கள் 108 உபநிஷத்துக்கள் இவையே இந்து மதமாகும். இந்து மதமானது ரிக், யஜூர், சாம, அதர்வன என்ற 4 வேதங்களையும் சிவபுராணம், விஷ்ணு புராணம், விநாயக புராணம் கந்தரபுராணம் என்ற 18 வித புராணங்களையும் 108 விதமான உபநிஷத்துகளையும் தன்னுள் கொண்டு ஓங்கி உயர்ந்து வளர்ந்து வரும் மதமாகும்.

இந்து மதம் மட்டுமே கடவுள் வழிபாட்டையும் ஒழுக்கம் உண்மை, நேர்மை, சத்தியம், வாய்மை இவறைப் பற்றியும் பாவ புண்ணியம் பற்றியும் முன்ஜென்ம மற்றும் வரும் ஜென்ம தொடர்பு பற்றியும் அதிக அளவில் குறிப்பிடுகிறது.

 “ஜோதிட சாஸ்த்திரமே” நம் “இந்து மதத்தை” அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. ஜோதிடம் என்றாலே நம் முன்ஜென்ம வினை மற்றும் நாம் போன ஜென்மத்தில் செய்த நல்வினை தீவினைகளைக் குறிப்பிடுவதேயாகும். போன ஜென்மத்தில் அல்லது கடந்த ஜென்மத்தில் நம் வாழ்க்கையின் நன்மை தீமைக்கேற்ப இச்ஜென்மத்தில் நம் வாழ்க்கை அமைகிறது என்பதை விளக்குவதே ஜோதிட சாஸ்த்திரமாகும்.

இதற்கு நவக்கிரகங்களும் தன் பங்கிற்கு நாம் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப நமக்குப் பயன் அளிக்கவல்லதாக ஜோதிட சாஸ்த்திரத்தில் சொல்லப்படுகிறது.

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களாலும் 9 கிரகங்களாலும் 27 நட்சத்திரங்களாலும் மனித வாழ்வு அமைகிறது.

அண்டவெளியில் எத்தனையோ கிரகங்கள் இருப்பினும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருப்பினும் நம் முன்னோர்கள் 7 கிரகங்களையும் அதாவது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுகரன், சனி இவற்றையும் இத்துடன் ராகு, கேது, ஆகிய இரு நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் சாயக்கிரகங்களையும் இணைத்தும் நட்சத்திரங்களை 27 தொகுதிகளாகப் பிரித்தும் அவை பூவுலகில் மனித இனத்திற்கு ஏற்படுத்தும் தாக்கத்தைப் வைத்தும் அவனது வாழ்க்கையில் ஏற்படும் நல்வினை தீவினைகளை வகுத்தனர்.

நம் முன்னோர்கள் கிரகங்களின் தன்மையின் அடிப்படையில் அவற்றின் சுழற்சியை வைத்தும் அவை வான மண்டலத்தில் பயனிக்கும் நிலையை வைத்தும் “வான சாஸ்த்திரம்” என்ற கோட்பாட்டை முன்னிறுத்தியும் கிரகங்களின் அசைவையும் நிலையையும் வைத்து வான சாஸ்த்திரத்தின் அடிப்படையில் இந்த “ஜோதிம் சாஸ்த்திரம்” உருவாக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

இத்துடன் வானில் மின்னும் நட்சத்திரக் கூட்டங்களையும் கணக்கில் கொண்டு கிரகங்களையும் நட்சத்திரங்களையும் வைத்து வான சாஸ்த்திரம் கணிக்கப்பட்டு அவை ஜோதிட சாஸ்த்திரத்தால் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு நவக்கிரங்களும் தன் பங்கிற்கு நாம் சென்ற ஜென்மத்தில் நல்வினை தீவினைகளுக்கேற்ப இச்ஜென்மத்தில் நமக்கு பயன் அளிக்கவல்லதாக குறிப்பிடப்படுகிறது.

பொதுவாக “ஜோதிடம்” என்பது ஆகாயத்தில் சுழன்று உலவிவரும் பல கிரங்களின் அல்லது கோள்களின் கதிர்வீச்சினால் பூமியில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி அறிவுக்கும் ஒரு “தெய்வீக்க்” கலையாகும்.

ஜோதிடம் விஞ்ஞானத்தோடு கூடிய ஒரு “மெய்ஞானமாகும்”. இதில் விஞ்ஞானம் எங்கு வருகிறதென்றால் கிரகங்களேயாகும். நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படும் 9 கிரகங்களில் ராகு, கேது நீங்களாக பாக்கி உள்ள 7 கிரகங்களும் வான மண்டலத்தில் சுற்றி வரும் அதன் சுழற்சியும் அதன் அசையும் தன்மையும் விஞ்ஞான முறைப்படி கணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் கிரகங்களின் பெயர்ச்சி கணக்கிடப்படுகிறது.

ஜோதிட சாஸ்த்திரம் முழுக்க முழுக்க விஞ்ஞானமும் அல்ல அதே சமயம் இவை முழுக்க முழுக்க மெய் ஞானமும் அல்ல. விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்த ஒரு சாஸ்த்திரமே ஜோதிட சாஸ்த்திரம் என்பதே பொதுவானதாகும்.

ஜோதிடத்தை நம்புவோரும் உண்டு, நம்பாதவர்களும் உண்டு, உலகில் ஒரு விஷயம் உண்டு என்றால் இல்லையென்று மறுப்போரும் உண்டு. கடவுள் என்ற ஒன்று உண்டு என்றால் இல்லையென்று மறுப்போரும் உண்டு. அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. நமது சிந்தனைக்கும் எண்ணங்களுக்கும் எட்டாத பலவகை ஈர்ப்பு சக்திகளால் நம் உடலும் மனமும் இயக்கப்படுகிறது. அதன்படியே நமது அன்றாட வாழ்க்கை அமைகிறது. எனவே தன்கைக்கு அல்லது சக்திக்கு மீறிய செயல் ஒரு தனிமனித வாழ்வில் நடந்தேறும் பொழுது அவன் கண்டிப்பாக மெய்ஞானத்தை நம்பித்தான் ஆக வேண்டும்.

இன்று விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி மனிதன் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலனை அனுப்பி சோதித்துப் பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டது. அங்கு மனிதன் சென்று வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை அலசி ஆராய்ந்து வருகிறது. ஆனாலும் இயற்கையை நாம் எந்த சந்தர்ப்பத்திலும் வெல்ல முடியவில்லை. இயற்கையின் பேரழிவுகளில் இருந்து நாம் ஒரு அளவுக்கு மட்டுமே நம்மை காப்பாற்றிக் கொள்ள முடிகிறதே ஒழிய முழுமையாக நம்மை நாம் தற்காத்து கொள்ள முடியவில்லை.

இத்தகைய இயற்கையின் விளைவே நம் ஜோதிட சாஸ்த்திரமாகும். நம் பூமிப்பந்தில் நடக்கும் இயற்கை நிகழ்வுகளுக்கு வானில் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் கிரகங்களே அன்றி வேறொன்றுமில்லை. இத்தகை சூழ்நிலையை அந்தக் கிரகங்கள் நம் பூமியில் வாழும் மனிதன் மேல் செலுத்துகின்ற கதிர்வீச்சின் அளவே அவரவது தனிப்பட்ட ஜாதகமாகும்.

எல்லாம் அவரவர் “தலைவிதிப்படியே” நடக்கும் என்று பொதுவாக குறிப்பிட்டாலும் தலையெழுத்து தலைவிதிப்படியே நடக்கும் என்பது இதன் பொருள். அந்தந்த தலையெழுத்தை பிரம்மன் பூலோகத்தில் ஒரு ஜீவன் பிறக்கும் பொழுதே எழுதிவிடுகிறான். என்ன நடக்கும் எப்படி நடக்கும் எப்பொழுது நடக்கும் என்பதை பற்றிய கேள்வியும் விளக்குமுமே ஜோதிடமாகும்.

இந்த ஜாதகத்தை வைத்தே ஒரு தனிமனிதனுள் உருவஅமைப்பு ஆசை, அபிலாஷை, விருப்பு, வெறுப்பு, வெற்றி, தோல்வி, ஏற்ற இறக்கங்கள், ஆயுள், தாய், தந்தை, சகோதர சகோதரிகள், கல்வி, வேலை, தொழில், திருமணம், குழந்தை, வீடு, வண்டி வாகனங்கள், உறவினர்கள், நண்பர்கள், நோய், கடன், வழக்கு, வெளிநாட்டு தொடர்பு அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

மேற்படி விஷயங்களைப் பற்றிய விவரங்களை அறிவதே ஜோதிட சாஸ்த்திரமாகும். அப்படிப்பட்ட ஜோதிட சாஸ்த்திரத்தை கொண்டு நம் வாழ்வில் நடக்கும், நடக்க போகும் நிகழ்வுகளை நாம் அறிந்து அதன்படி வாழ முற்படலாம். இவை பற்றிய விரிவான விளக்கங்களை குறிப்பிடுவதே ஜோதிடமாகும்.

ஜோதிட சாஸ்த்திரம் என்பது ஒரு கடல் போன்றது. இன்னும் சொல்லப்போனால் கடலைக் காட்டிலும் சமுத்திரம் போன்றது. அவ்வளவு விஷயங்களை இச்சாஸ்த்திரம் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சாஸ்த்திரத்தில் ஏகப்பட்ட கணிதமுறைகள் சூத்திரங்கள் விதிகள், விலக்குகள் என்று பரந்து விரிந்து காணப்படுகின்றன.

சப்தரிஷிகளும் ஒரு ஜாதகத்தை வைத்து வெவ்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்ததாக பல ஜோதிட சாஸ்த்திர நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி சப்தரிஷிகளும் விவாதிக்கக் கூடிய ஒரு ஜாதகத்திற்கு அவ்வளவு எளிதில் பலன் கூறுவது சாத்தியமல்ல.

என்றாலும் மாறிவரும் விஞ்ஞான வளர்ச்சிக்குத் தக்கபடி ஜோதிட சாஸ்த்திரமும் இன்று வளர்ந்து வருகிறது. மேலும் பலவித ஆராய்ச்சிகளுக்கு உட்பட்டு வளர்ந்து வருகிறது. மேலும் காலத்திற்கேற்றபடி பல பரிணாமங்களை தன்னகத்தே கொண்டு வளர்ந்து வருகிறது. உலகம் உள்ளங்கையில் அடங்கிய இக்காலத்தில் நம் தேவைகளும் விருப்பங்களும் அதிகம். எனவே நம் விருப்பத்திற்கேற்ப நம் ஜாதகம் அமைந்துள்ளாதா என்பதே இப்பொழுது நமக்கு உள்ள கேள்விகளாகும். இப்படிப்பட்ட கேள்விக்கான பதிலை நாம் நவின விஞ்ஞான உலகத்திற்கேற்ப ஆராய உள்ளோம்.

ஜோதிடம் ஒரு காலத்திலும் பொய்யானது இல்லை. அது பொய்ப்பதும் இல்லை. அப்படியானால் ஒன்று சரியான ஜோதிடராக இருக்க வேண்டும் மற்றும் சரியான பிறந்த நேரம் இருத்தல் வேண்டும். பிறந்த நேரம் சரியாக இல்லையென்றால் எல்லாமுமே மாறிப் போய்விடும். எனவே விதியின் பலனை நாம் நன்கு அறிய வேண்டுமென்றால் நமக்கு நல்ல நேரம் இருந்தால் மட்டுமே நாம் நல்ல ஜோதிடரைப் பார்க்க முடியும். இல்லையெல் அவரது பலனும் நடக்காமலே போய்விடும்.

எனவே பிறந்த நேரம் சரியானதாக இருக்க வேண்டும். ஒரு நிமிடம் மாறினாலும் சிலபேருக்கு லக்னம், ராசி, நட்சத்திரம் மாறிவிடும். கணிதம் மாறும் பொழுது பலனும் மாறிவிடும். எனவே பிறந்த சரியான நேரம் இருந்தால் மட்டுமே சரியாக கணித்து பலன் கூற முடியும்.

“வலைத்தமிழ்” வாசகர்களின் ஜோதிட சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளோம். அதற்கு ஜாதகர், ஜாதகி பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த நேரம், பிறந்த ஊர் (இரவு 12:00 மணிக்கு மேல் பிறந்தால் விடிந்தால் என்ன கிழமை) இவை போன்ற விவரங்கள் மிக மிக அவசியம். எனவே இவை பற்றிய சரியான விவரங்கள் கொடுப்போர்க்கு மட்டுமே பலன் அளிக்க உள்ளோம். பிறந்த நேரம் சரியாக இருக்க வேண்டும். மேலும் பிறந்த ஊர் வெளிநாடு என்றால் எந்தநாடு எந்த மாநிலம் என்ற விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட்டால் சரியாகக் கணிதம் செய்து பலன் உரைக்க ஏதுவாகும்.

கேள்விக்கான பதிலுடன் பரிகாரங்களும் குறிப்பிடப்படும். முடிந்தவரை பரிகாரங்களை செய்துவர எதிர்பார்த்த பலன்கள் உடனே நடந்தேறும். இல்லையெல் காலதாமதமாகும். ஏனெனில் பரிகாரம் செய்வதற்கும் ஜாதகத்தில் ஒரு யோகம் வேண்டும். இல்லையெல் பரிகாரமே செய்ய முடியாது அல்லது கிரகங்கள் செய்ய விடாது. நமக்கு நல்ல நேரம் இருந்தால் மட்டுமே ஒரு நல்ல ஜோதிடரை சந்திக்கவோ அவர் கூறும் பரிகாரங்களை செய்யவோ முடியும்.

முன்பே குறிப்பிட்டது போல் ஜோதிட சாஸ்த்திரம் :

  1. வேதங்களோடு தொடர்புடையது.
  2. மதத்தோடு தொடர்புடையது
  3. பஞ்சபூதங்களோடு தொடர்புடையது
  4. நவக்கிரங்களோடு தொடர்புடையது
  5. நட்சத்திரங்களோடு தொடர்புடையது
  6. வானியல் கணிதங்களோடு தொடர்புடையது
  7. முற்பிறவி, மறுபிறவி இவற்றோடு தொடர்புடையது
  8. பாவபுண்ணியம் இவற்றோடு தொடர்புடையது
  9. கர்மபலனோடு தொடர்புடையது
  10. தெய்வ வழிபாட்டோடு தொடர்புடையது
  11. பரிகாரங்களோடு தொடர்புடையது

மேற்கண்ட தொடர்புகளின் ஒட்டுமொத்த “வரைவுக் கட்டமே” ஒரு தனி மனிதனுடைய ஜாதகமாகும்.

இவற்றின் அடிப்படையில் வலைதமிழ் வாசகர்களின் கேள்விகளுக்கு மாறிவரும் விஞ்ஞான கால சூழ்நிலைகளுக்கேற்ப பதில் அளிக்க உள்ளோம்.

சிருஷ்டியின் ரகசியத்தை படைத்த பிரமாவால் மட்டுமே அறிய முடியும். இருப்பினும் இறைவன் கோள்களைப் படைத்து மனிதனை படைத்து ஜாதகம் என்ற ஒன்றை உருவாக்கி அவற்றிலிருந்து தன் எதிர்கால பலனை அறிந்து அதற்கேற்றபடி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மனித இனத்திற்கு ஒரு வாய்ப்பு அளித்துள்ளான்.

அப்படிப்பட்ட இறைவனுக்கு நம் நன்றி செலுத்துவோம். நாம் எப்பொழுது பிறப்போம் என்பது தெரியாது. எப்பொழுது மரிப்போம் என்பது தெரியாது. நம் பிறப்பும் இறப்பும் இறைவன் கையில்.

நாம் மரிக்கும் நேரம் தெரிந்துவிட்டால் வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமையாது. அதை இறைவன் தன் கையில் வைத்துக் கொண்டுள்ளான். நாம் வாழும் காலம்வரை முடிந்தவரை மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் மற்றவர்களுக்கு உதவி செய்து வாழவும் இருக்கப் பழகுவோம்.

இப்பிறவியில் முடிந்தவரை நன்மைகள் செய்து ஒழுக்கத்துடன் வாழ்ந்து மற்றவர்களுக்கு உதவி செய்து இறை சிந்தனையுடனும் பக்தியுடனும் நல் எண்ணத்துடனும் நம் கடைமைகளை சரிவர செய்து வாழ்ந்து இறைவன் பாதங்களைபற்றி மோட்சத்தை அடைவோமாக.

- ஜோதிட இமயம் அபிராமி சேகர்

by Swathi   on 13 Oct 2015  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை
இந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை இந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
கருத்துகள்
03-Oct-2016 04:17:45 உமா said : Report Abuse
தருமணம் குரு திசையில் தான் நடக்க வேண்டுமா
 
17-May-2016 10:37:24 சுரேஷ் said : Report Abuse
நான் என் ஜோதிட சார்ந்த அனைத்து கேள்விக்கும் பதில் தங்களால் தருவீர்களா எனக்கு?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.