LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவிற்கான கெயித்தர்ஸ்பர்க் நகரத்தின் இளம் மேயராக தொடர்ந்து இரண்டு வருடங்களாக தமிழ் குழந்தைகள் தேர்வாகியுள்ளார்கள் ..

வட அமெரிக்காவின், மேரிலாந்து மாநிலத்தில், கெயித்தர்ஸ்பர்க் நகரத்திற்கான 2017-ஆம் ஆண்டின் இளைய மேயர் (Junior Mayor) போட்டியில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழ் குழந்தைகள் இளம் மேயராக தேர்வாகியுள்ளனர். நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் கெயித்தர்ஸ்பர்க் நகரின் 2017-ஆம் ஆண்டிற்கான ஜூனியர் மேயராக, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த, செல்வி பூரணி கண்ணன் (வயது 9) தேர்ந்தெடுக்கப்பட்டாள்.  கடந்த ஆண்டு நடந்த இப்போட்டியில் தமிழ்ச்சங்கத்தின் தென்றல்-முல்லை ஆசிரியர் குழு உறுப்பினர் மகள் செல்வி.ஸ்ரீநிதி குருவாயுரப்பன் 2016-ம் ஆண்டிற்கான இளம் மேயராக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.  

குழந்தைகளுக்கு சமூக நலப் பணிகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜூனியர் மேயர் என்னும் கௌரவப் பதவி, கெயித்தர்ஸ்பர்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நம் தமிழ் குழந்தைகளின் கைகளில் இருக்கிறது என்பது கூடுதல் உவப்பு! 

ஜுனியர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அப்படி என்ன சிறப்பு? ஜுனியர் மேயராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தன் ஓராண்டு பதவி காலத்தில் நகர மேயர் கலந்துகொள்ளும் அனைத்து பொது விழாக்களிலும், மேடையில் அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தபடி கலந்து கொள்வார். சமூக நலப் பணிகளும் செய்வார். இவ்வாண்டு கூடுதலாக, ஜூனியர் மேயர் தான் செய்ய விரும்பும் சமூக நலப் பணிகளை முன் கூட்டியே திட்டமிட்டு, எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இப்பணிகளுக்கு தலைமை ஏற்றல், திட்டமிடுதல், செயல்படுத்துதல் ஆகிய அனைத்தும் ஜூனியர் மேயரின் பொருப்புகள். ஜூனியர் மேயர் உருவாக்கும் சமூக நலத் திட்டத்தில் நகர மேயரும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும் (elected officials), நகர சபை உருப்பினர்களும் (City Council Members) பங்குகொள்வர். ஜூனியர் மேயரின் பள்ளியில், அவர் வகுப்பில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தில் உதவுவர்.

இவ்வாண்டிற்கான தலைப்பு, “கெயித்தர்ஸ்பர்க் நகரத்தின் சமூகக் கூடத்தை எப்படி வடிவமைப்பாய்? நகர முன்னேற்றத்தில் அனைத்து இனத்தவரையும் எப்படி பங்குபெறச் செய்வாய்”? என்பதே. இதற்கு செல்வி பூரணி எப்படி தயாரானாள் என்று அவரது தாய் திருமதி. லலிதா கண்ணன் அவர்களுடனும் தந்தை முனைவர்.கண்ணன் குஞ்சிதபாதம் அவர்களுடனும் பேசியபோது, "தலைப்பைக் கேட்டதும் சமூகக் கூடத்தை வரைபடமாக பலமுறை வரைந்து பார்த்தாள். வரைந்து, வரைந்து பலமுறை அழித்து, மாற்றங்கள் பல செய்த பின், ஒரு வழியாய் எழுதத் தொடங்கினாள்".

சென்ற டிசம்பர் மாதம் இந்தியாவிலிருந்து திரும்புகையில் துபாய் விமான நிலையத்தில், தாய்மார்கள் அறை மற்றும் தொழுகைக்காக ஒதுக்கப்பட்ட பிரார்த்தனை அறை ஆகியவற்றை கண்டு வியந்து, எல்லா பொது இடங்களிலும் இந்த வசதிகள் இருக்கவேண்டும் என என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள். அதை மனதில் வைத்துக்கொண்டிருந்து அதே வசதிகளை, தன் கற்பனையில் உருவான சமூகக் கூடத்திலும் இடம் பெறச் செய்தாள். ஊனமுற்றோருக்கான வசதிகளும், வைபை (Wifi) இணைப்பும் அடங்கிய இக்கூடத்தில், உடற்பயிற்சிக் கூடம், குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகள் காப்பகம் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகள் இடம் பெற்றன.

தான் வகுத்துள்ள சமூகநலத் திட்டத்தின் மூலம் உடல் ஊனமுற்றோர், ஏழைகள் மற்றும் உடல் நலம் குன்றியவர்கள் நன்மை பெறக்கூடும் என்று குறிப்பிட்டு இருக்கிறாள். மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு, வாழ்த்து அட்டைகள், ஊதர்பைகள் (balloons) மற்றும் பூங்கொத்துகள் வழங்கவும், அவர்கள் மனம் குளிரும்படி இசைக் கருவிகள் வாசித்து மகிழ்விக்கவும், கண் பார்வையற்ற குழந்தைகளுக்கு கதைப் புத்தகங்கள் படிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளாள்.

மேலும், தன் சக மாணவர்களை ஊக்குவித்து அவர்களோடு சேர்ந்து, வீடு இல்லாமல் வாழும் ஏழைகளுக்கு குளிர்காலத்திற்குத் தேவையான உணவு, தண்ணீர் புட்டிகள், உடை, போர்வைகள், முதலுதவிப் பெட்டி, மருந்துகள், அவர்கள் குழந்தைகளுக்கு கதை புத்தகங்கள், கல்வி புகட்டும் பொம்மைகள் மற்றும் கருவிகள் ஆகியவற்றை சேகரித்துக் கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளாள். பள்ளி வளாகத்திற்குள்ளேயே உரமிடப்படாமல் காய் கனிகளை விளைவித்து, அந்த விளைச்சலையும் இந்த ஏழைகளுக்குச் சென்றடையச் செய்வேன் என்றும் கூறியுள்ளாள்.

“கெய்த்தர்ஸ்பர்கில் வாழும் பல்வேறு இனத்தவரையும் அனுசரித்து, மக்களை நல்வழி நடத்தி, இந்நகரை எப்படி சிறப்பானதாக மாற்றுவாய்?,” என்ற கேள்விக்கு, பல்வேறு இனத்தவரும் தங்கள் பண்பாடு, கலை கலாச்சாரம், இசை, நடனம், உணவு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் கலை மற்றும் பண்பாட்டு வார விழா ஒன்றை நடத்த விரும்புவதாக குறிப்பிட்டிருந்தாள். ஆங்கிலம் தெரியாத மக்களுக்கு உதவ பல்மொழி மொழிபெயர்ப்பாளர்களை பணி அமர்த்துவதோடு, இலவச ஆங்கில வகுப்புகளும் நடத்த வேண்டுமென்று கருத்து தெரிவித்துள்ளாள்.

மக்களாகிய நாம், நம் நகரம், நம் நாடு, நமது கடமை என்ற பற்றுதலோடு செயல்பட்டால் மகிழ்ச்சிமிகு சமுதாயத்தை உருவாக்கலாம் என்றும்,  பல்வேறு இனத்தவரையும் அரவணைத்து, அவர்கள் குரல்களுக்கு செவி சாய்த்து, அவர்களை நல்வழியில் நடத்திச் செல்வது மேயரின் கடமை என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே மேயரின் குறிக்கோளானால், சிறப்பான கெயித்தர்ஸ்பர்கை உருவாக்கலாம் என்றும், நேர்காணலின் போது நடுவர்களிடம் ஆணித்தரமாய் அடித்துச் சொன்னதாக என்னிடம் கூறினாள்.

அனைத்தையும் கடந்து, இப்போட்டியில் பூரணி வெற்றி பெற்றதாக மேயர் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் கிடைத்ததும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி! மகிழ்ச்சியில் கண்கள் குளமாக, மின்னஞ்சலில் தொடர்ந்து வந்த வரிகளைப் படிக்க இயலவில்லை. கண்கள் பார்த்து, வாய் படித்தாலும், செய்தியை மூளை உள் வாங்கவில்லை. ஈன்ற பொழுதினும் பேருவப்பு!

செல்வி பூரணி, ஜூனியர் மேயராக ஏப்ரல் 13 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்ட பின், மே 1 ஆம் தேதி நடந்த  மேயர் மற்றும் நகர சபை கூட்டத்தின் போது, கெய்த்தர்ஸ்பர்க் நகர மக்களுக்கு முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டாள்." என்று பெருமையுடன் குறிப்பிட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.இராசாராம் சீனுவாசன் "நம் தமிழ்க்குழந்தைகளின் சாதனைகள் அனைத்தும் நம் பகுதி தமிழர்களுக்கும், தமிழ்ச்சங்கத்திற்கும் பெருமை தரத்தக்க செயலாகும். எனவே செல்வி. பூரணிக் கண்ணனும் , கடந்த ஆண்டு இளம் மேயர் செல்வி.ஸ்ரீநிதி குருவாயுரப்பன் இருவரும் தமிழ்ச்சங்க மேடைகளில் பட்டயம் வழங்கி பெருமைப்படுத்தப்பட்டார்கள் என்று குறிப்பிட்டார். 

காணொளிப் பதிவு நன்றி: திரு.கொழந்தைவேல் இராமசாமி.

 

Photo: from left: Gaithersburg Mayor Jud Ashman, Purani Kannan, 4th grade teacher Ms. Dara Tokarz, Diamond elementary school Principal Mr. Daniel Walder.

by Swathi   on 09 May 2017  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில்  உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 மலேசியாவில் உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் லவுடன் கவுண்டி நூலகங்களில் தமிழ் நூல்கள் வள்ளுவன் தமிழ்மையத்தின் முயற்சியில் சாத்தியமானது .. அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் லவுடன் கவுண்டி நூலகங்களில் தமிழ் நூல்கள் வள்ளுவன் தமிழ்மையத்தின் முயற்சியில் சாத்தியமானது ..
பேராசிரியர் மு.இளங்கோவனுக்குத் தொல்காப்பியக் காவலர் விருது –  சப்பான் தமிழ்ச்சங்கம் வழங்கியது! பேராசிரியர் மு.இளங்கோவனுக்குத் தொல்காப்பியக் காவலர் விருது – சப்பான் தமிழ்ச்சங்கம் வழங்கியது!
அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல்   வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் திரு.ராஜன் நடராஜன்  வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .. அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் திரு.ராஜன் நடராஜன் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் ..
அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை !! அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை !!
துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா
சனவரி 8 முதல் 12 வரை தமிழ் மொழி மற்றும் கலாச்சார வாரமாக அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண அரசு அறிவிப்பு!! சனவரி 8 முதல் 12 வரை தமிழ் மொழி மற்றும் கலாச்சார வாரமாக அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண அரசு அறிவிப்பு!!
சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு
கருத்துகள்
20-May-2017 01:58:44 IBCTamil said : Report Abuse
அருமையான உலக செய்தி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.