LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

காக்கி சட்டை - திரை விமர்சனம் !!

கதைச்சுருக்கம் :

ஆரம்பத்தில் அமைதி போலீசாக வந்து காமெடி பண்ணும் சிவகார்த்திகேயன்... ஒரு கட்டத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் திருப்புமுனையால், மனித உடலுறுப்புகளை திருடி விற்கும் கும்பலை கண்டிபிடித்து எப்படி அழிக்கிறார் என்பதை ஆக்சன் தீ பறக்க அதிரடியாக, அதே அளவுக்கு காமெடியாக சொல்லியிருக்கும் படம் தான் காக்கி சட்டை.  

சரி வாங்க இப்போ விரிவான கதைய பார்ப்போம்...

காவல் நிலையத்தில் ஒரு சாதாரண போலீசாக பணிபுரிகிறார்... நம்ம ஹீரோ சிவகார்த்திகேயன்(மதிவாணன்). ஹீரோயின் குடும்பத்துக்கு அவர் செய்யும் ஒரு உதவியினால் ஸ்ரீ திவ்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. அதுவே சில நாளில் காதலாக மாறுகிறது.

ஒரு சாதாரண போலீசாக இருந்தாலும் நேர்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார் நம்ம சிவா. ஆனால், அவர் வேலைசெய்யும் காவல் நிலையத்தில் உள்ள மற்றவர்களெல்லாம் சிவாவுக்கு எதிர்மறையாக இருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடையும் சிவா... இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் தனது ஆதங்கத்தை எடுத்து உரைக்கிறார்.

"தொட்டாலே ஷாக் அடிக்கிற மாதிரி ஒரு பெரிய கேஸ் இருந்த புடிச்சுட்டு வா... அப்புறம் நான் நடவடிக்கை எடுக்கலைன்னா.. கேளு" என பிரபு சொல்ல... ஹீரோவின் ஆக்சன் களம் ஆரம்பிக்கிறது.... இந்நிலையில், ஒரு மருத்துவமனையில் மனித உடலுறுப்புகளை திருடி வியாபாரப் பொருளாக பாவித்து விற்பனை செய்யும் கொடூர குற்றம் நடப்பது சிவகார்த்திகேயனுக்கு தெரியவருகிறது.

இறுதியாக உடலுறுப்புகளை திருடி விற்கும் கும்பலை, கண்டிபிடித்து, அவர்கள் கொடுக்கும் சாவால்களை எல்லாம் சமாளித்து, வில்லன்களை எல்லாம் எப்படி அழிக்கிறார் என்பது தான் படத்தின் மீதிகதை.  


மெரீனா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப் படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே என காமெடி ஹீரோவாக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு போலீஸ் வேடம் நன்றாக பொருந்தியுள்ளது. இந்த படத்தில் காமெடியிலும், ஆக்சனிலும் கலக்கி இருக்கிறார்.

ஸ்ரீதிவ்யா படத்தின் நாயகியாக மட்டுமல்லாமல், கதையின் நாயகியாகவும் வருகிறார். பாடல் காட்சிகளில் அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கொள்ளை கொள்கிறார்.

இன்ஸ்பெக்டராக வரும் பிரபுவுக்கு சுவாரசியமான கதாபாத்திரம்...

இம்மான் அண்ணாச்சி, மனோபாலா காமெடி படத்திற்கு கூடுதல் பலம் என்றே சொல்லலாம்.

முதல் பாதி காதல், காமெடி என ஜாலியாக நகர... இரண்டாம் பாதியில் ஆக்சன் அனல் பறக்கிறது... காமெடி ஹீரோவாக நடித்து வந்த சிவகார்த்திகேயனை, ஆக்சன் ஹீரோவாக தேவையான இடங்களில் காட்டியிருப்பது இயக்குனரின் திறமையை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது.  

அனிருத்தின் இசையில் அனைத்துப் பாடல்களும் ஏற்கனவே செம ஹிட். பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார் அனிருத்.

மொத்தத்தில் காக்கி சட்டை.... நல்ல பொழுது போக்கு படம் தாங்க....  நம்பி போகலாம்....

Siva Karthikeyan Latest Stylish Pictures
by Swathi   on 27 Feb 2015  0 Comments
Tags: Kaaki Sattai   Kaaki Sattai Review   Kaaki Sattai Thirai Vimarsanam   Kaaki Sattai Cinema Vimarsanam   காக்கி சட்டை   காக்கி சட்டை திரை விமர்சனம்   காக்கி சட்டை சினிமா விமர்சனம்  
 தொடர்புடையவை-Related Articles
விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !! விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !!
காக்கி சட்டை - திரை விமர்சனம் !! காக்கி சட்டை - திரை விமர்சனம் !!
பிப்ரவரி 27-ல் வெளியாகிறது காக்கிசட்டை !! பிப்ரவரி 27-ல் வெளியாகிறது காக்கிசட்டை !!
குத்து பாடல்களில் இருந்து ரொமான்ஸ் பாடல்களுக்கு மாறிய சிவகார்த்திகேயன் !! குத்து பாடல்களில் இருந்து ரொமான்ஸ் பாடல்களுக்கு மாறிய சிவகார்த்திகேயன் !!
பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் படம் !! பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் படம் !!
லிங்கா ரிலீஸ் அன்று காக்கி சட்டை ஆடியோ ரிலீஸ் !! லிங்கா ரிலீஸ் அன்று காக்கி சட்டை ஆடியோ ரிலீஸ் !!
இயக்குனரிடம் இன்னொரு வாய்ப்பு கேட்ட சிவகர்த்திகேயன் !! இயக்குனரிடம் இன்னொரு வாய்ப்பு கேட்ட சிவகர்த்திகேயன் !!
காக்கிச்சட்டை இசை மற்றும் படம் வெளியீடு எப்போது ? காக்கிச்சட்டை இசை மற்றும் படம் வெளியீடு எப்போது ?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.