LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    சுற்றுலா (Tourism) Print Friendly and PDF

குடும்பத்துடன் கடம்பவனம் சென்றுள்ளீர்களா? பார்க்கவேண்டிய தமிழ்ப் பண்பாட்டுத் திருத்தலம்

கடம்பவனம்     

 

 

 

 

 

       

                                 கடம்பவனம் என்ற தமிழ்ப் பண்பாட்டுத் திருத்தலம் 

                                - பண்பாடு மற்றும் பாரம்பரியம் 

                                - நுண்கலைகள் மற்றும் கிராமியக்கலைகள்

                                - உணவு வகைகள்

                                - கிராமிய பழந்தமிழர் விளையாட்டுகள் மற்றும் தற்காப்புக் கலைகள்

                                - தமிழ்  மொழிஇ  இலக்கியம்

                                - ஆன்மீகக் கோட்பாடுகள்

                                - கைத்தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள்

என பல்வேறு பரிணாமங்களை ஒருங்கிணைத்து இயங்கிவரும்  சுற்றுலாத்தலம்.

எங்கே உள்ளது?

மதுரையிலிருந்து  சுமார் 25 கிலோ மீட்டர்  தொலைவில்  பரளி எனும் இயற்கையெழில் கொஞ்சும் கிராமியச் சூழலில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் கடம்பவனம் சுற்றுலாக் கிராமம் (Ethnic resort)  மற்றும் பண்பாட்டு மையம் (Cultural centre)  அமைந்துள்ளது.

கடம்பவனம் சுற்றுலாக் கிராமத்தில் 15 குளிரூட்டப்பட்ட குடில்கள் அமைக்கப்பட்டு, இங்கு தங்கும் விருந்தினர்க்கு காலை பூபாள ராகத்துடன் எழுப்புவது, குடில்களின் வாயிலில் சாணம் தெளித்து கோலம் போடுவது, தியானம், யோகா பயிற்சியளிப்பது, கோவில் வழிபாடு நடத்துவது, அவற்றிற்கு பின்னால் உள்ள காரண காரியங்களை விளக்குவது,  கதை சொல்வது மேலும் Village walk, Hill Trekking  அழைத்துச் செல்வது சமையல் வகுப்புகள் (Ethnic food cooking demo)  என ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறோம். இங்கு தங்கும் விருந்தினர்க்கு  மதுரையை மையமாகக் கொண்டு ஆன்மீகச் சுற்றுலா திட்டங்கள் ‘Spiritual packages’ உருவாக்கியுள்ளோம். கூடுதலாக பேரவை, சிற்றவை, புல்வெளி, வெட்டவெளி என கூட்ட அரங்குகள் (Banquet facilities) உள்ளன.   "தடாகம்" என்ற நீச்சல்குளம் உள்ளது. 

சுற்றுலாக் கிராம குடில்களுக்கு மறைமலைஇ பாரதிஇ கோதை போன்ற தமிழ் இலக்கியம் தொடர்பான பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.  விருந்தினருக்கு தமிழ் பண்பாட்டை எடுத்துக்காட்டும் நல்ல  தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.  பண்பாடு மற்றும் இலக்கியம் தொடர்பான புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப்படவுள்ளது.

சுற்றுலாக்கிராமத்தை அடுத்து அமைந்துள்ளது கடம்பவனம் பண்பாட்டு மையம் .

 

கடம்பவனம் பண்பாட்டு மையம்

இங்கு மாலை 5 மணி முதல் பொதுமக்கள் நுழைவுச்சீட்டு வாங்கி வரலாம்.

வளாகத்தின் நுழைவுப் பகுதியில் அய்யனார் கோயில் மற்றும் இந்துக்கடவுளர் கோயில்கள் அமைக்கப் பெற்று இதில்; நமது பூஜை முறைகள் பற்றியும், தமிழரின் அன்றாட வாழ்க்கையில் சமயத்தின் பங்கு குறித்தும் எடுத்துச் சொல்லப்படுகின்றது.

Village Walkway:  கிராமத் தெருவில் சிறுவர் கிட்டிப்புல், கோலிகுண்டு, பாண்டி, பல்லாங்குழி, சடுகுடு போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடிக் கொண்டிருப்பதை விருந்தினர்கள் பார்க்கலாம், பங்கு பெறலாம்.  சிறப்பு நாட்களில் கபடி,  உரியடித்தல்,  வழுக்குமரம் நடைபெறும்.

இந்த  வளாகத்திலே, ஐநூறு இருக்கைகள் கொண்ட அழகிய கலையரங்கம் அமைந்துள்ளது. இதில் 6.30 மணி துவங்கி 15 -20 நிமிடம் கர்நாடக சங்கீதம் வாய்ப்பாட்டாகவோ வாத்தியக் கச்சேரியாகவோ நடைபெறும். தொடர்ந்து 25 நிமிடம் பரதநாட்டியம் நடைபெறும்.  இறுதியாக 25 நிமிடம் கரகம், காவடி,  சிலம்பாட்டம் போன்ற கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். தோற்பாவைக் கூத்து, அதற்கென உள்ள அரங்கில் நடைபெறும். இவை அனைத்திற்கும் ஆங்கிலத்தில் விளக்க உரை அளிக்கப்படுகிறது. 

வளாகத்தின் உணவுக்கூடத்தில் 8 மணி முதல் இரவு உணவு நமது பாரம்பரிய முறைப்படி வாழைஇலையில் வழங்கப்படுகிறது. நமது வழக்கமான சிற்றுண்டி வகைகளோடு கம்பு தோசை, திணையரிசி பணியாரம், கொள்ளு ரசம், வரகு வெண்பொங்கல் போன்ற சிறுதானியங்களை கொண்டு செய்யும் சுவைமிகு சத்தான உணவு வகைகள், சுக்கு மல்லி காபி, நெல்லிக்காய்ச் சாறு போன்ற  தமிழரின்  பானங்கள்,  பிற  உணவு  விடுதிகளில்  கிடைக்காத  கூட்டாஞ்சோறு, உளுந்தஞ்சாதம், போன்ற உணவு வகைகள், இனிப்புகள், பலகாரங்கள் உள்ளிட்ட தரமான மாறுபட்ட உணவு வழங்கப்படுகிறது.

பாரம்பரிய தமிழ் அடுக்களை(சமையலறை)யில் “உணவு கண்காட்சி”(Food display) அமைத்து  அதில் உணவு தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருள்கள், அவற்றின்; ஊட்டசத்து பற்றிய குறிப்புகள் மற்றும் அச்சிடப்பட்ட செய்முறை குறிப்புகளும் இடம் பெறும். இதை வெளிநாட்டு பயணிகள் மிகவும் ரசிக்கின்றனர்.

Crafts Bazaar-    பாரம்பரிய கைவினைப் பொருட்கள்இ மதுரை சின்னாளப்பட்டி, சுங்குடி புடவைகள்,  வளையல்கடை  போன்றவை  உள்ளிட்ட கடைத்தெரு விரைவில் அமைக்கப்படும்.

தினமும் நடைபெற வேண்டிய கலை நிகழ்ச்சிகள் பொருளாதாரத்தடைகளினால் தற்போது வாரமிருமுறை (சனி  &  ஞாயிறு) மட்டுமே நடைபெறுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாள் மற்றும் அரைநாள் “தமிழ் பண்பாட்டு முகாம்”  நடத்தப்படுகிறது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் மாணாக்கர்களுக்கு தங்கும் வசதியுடன கூடிய பண்பாட்டு முகாம்கள் (Residential value camp)  நடத்தப்படுகிறது.

 

எதிர்காலத் திட்டம்

எதிர்கால திட்டமாக, ஒரு கலைப்பள்ளி நிறுவி அதில் பரதம் உள்ளிட்ட நுண்கலைகள், கரகம், காவடி போன்ற நாட்டுப்புறக் கலைகள், சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகள், ஆகியவற்றில் மாணவருக்கு பயிற்சியளிக்கப்படும்.

தமிழ் மொழி மற்றும் பண்பாடு தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்ள ஒரு ஆய்வு மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும். தமிழ் மொழி கற்க விரும்பும் அயல்நாட்டவர் மற்றும் தாய்மொழி பேச மட்டுமே அறிந்து வைத்துள்ள தமிழ் மக்களுக்கும் எளிய வகையில் மொழியைக் கற்பிக்க (Crash Course)  பாடத்திட்டங்கள் அமைத்து பயிற்சி முகாம் நடத்தப்படும். தமிழ் இலக்கியங்களை எளிமைப்படுத்தி அவற்றைக் கற்க ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் இளைஞரிடையே எடுத்துச் செல்ல வேண்டும்.  உதாரணமாக சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களைச் சித்திரப்படக் கதைகளாக்கித் தருவது,  மேலும் Cartoon  படமாக்குவது (Animation)  போன்ற முயற்சிகளையும் கடம்பவனத்தில் ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும்இ தமிழர் வாழ்வியல் முறைகளை வருங்காலத் தலைமுறையினருக்கும் பதிவாக்கம்  செய்வதற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

Social Entrepreneurship என்பதாக உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்கைத்தரம் உயர உதவுவதோடு எண்ணற்ற கிராமிய நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் அவர்களது கலைகளைப் போற்றி பாதுகாத்து பொருளாதார ரீதியாகவும், அவர்களை முன்னேற்றும் நோக்குடன் கடம்பவனம் செயல்படுகின்றது.

கடம்பவனத்தை உருவாக்கியிருப்பவர்கள் திரு.மா.கணபதி M.Arch  மற்றும் திருமதி. சித்ரா கணபதி M.Com, ICWA,    தம்பதியர்.  திரு. மா. கணபதி அவர்கள் மதுரையின் முன்னணிக்  கட்டிடக் கலை வல்லுநர்.  திருமதி. சித்ரா கணபதி கடம்பவனத்தின்  நிர்வாக இயக்குநர், பொதுத்துறையிலும், கலைத்துறையிலும், தமிழிலும் ஆர்வம் உள்ளவர்.  தனித் தமிழ் தந்தை எனப் போற்றப்படும் மறைமலை அடிகளாரின் கொள்ளுப் பேத்தி.

திருமதி சித்ரா கணபதியின் அன்னையார் முனைவர். திருமதி. சாரதா நம்பி ஆருரன்,   தமிழ் வல்லுனர், ஆன்மீகச் சொற்பொழிவாளர். அவர் உட்பட நன்னெஞ்சம் படைத்த சான்றோர் துணையோடு,  தமிழர் வாழ்வியல் முறைகளை போற்றிப், பாதுகாத்து இளைய தலைமுறையினர்க்கு எடுத்துச் செல்லும் உயர்ந்த நோக்குடனும், மதுரையின் சுற்றுலா வளர்ச்சிக்கு காரணியாகவும் கடம்பவனம் செயல்படுகிறது.

 

KADAMBAVANAM

Ethnic Resort & Cultural Centre 

Madurai Natham road, Parali, Madurai,

Tamil Nadu, India.+91 9500954090/94

www.kadambavanam.in

Recognized by INCREDIBLE INDIA as "The Best Rural Tourism Project" in Tamil Nadu

by Swathi   on 31 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கண்ணைக் கவரும்  பிச்சாவரம் காடு கண்ணைக் கவரும் பிச்சாவரம் காடு
பிச்சாவரம் காடு பிச்சாவரம் காடு
ஜெகன்னாதப் பெருமாள் ஜெகன்னாதப் பெருமாள்
மகாபலிபுரம் மகாபலிபுரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.