LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

சவாரி செய்யட்டுமா..

இப்பத்தான் மழைக்காலம் முடிஞ்சிருக்கு. வானத்திலிருந்து மேகம் விலகி இருந்தது இத்தனை நாள் என்னால் பூமியை பார்க்கமுடியாமல் இந்த மேகம்

தடுத்திருந்தது. இப்ப விலகிவிட்டது. அதனால் மகிழ்ச்சியான  சூரியன் நல்லா கண்ணைத் திறந்து பூமியை பார்த்தது. நல்ல வெயில் ஆனா வயல் வெளியெல்லாம் தண்ணீர் நிறைந்திருந்தது. வயல் வரப்பில் நல்ல பசுமையாக புல்ல தளைத்திருந்தது. அந்த வயல் வரப்பில் ஒரு பசு புல் மேஞ்சிட்டிருந்தது.

 

வானம் தெளிஞ்சதுனாலே பறவைககளும் வானத்திலே வட்டமிட்டுப் பறந்திட்டிருந்தாங்க. அவைகளில் நம்ம காக்காவும் இருந்தது.

 

சிறகுகளை அசைத்து அசைத்து பறக்கிறது, ரொம்ப கடினமாக இருக்கு. சிறகுகளை ஆசைக்காமல் ஜாலியா மெல்லமா சவாரி செய்யறதுக்கு என்ன வழி என்று காக்கா கீழே பார்த்தது. அப்ப ஒரு பசு புல் மேய்ந்து கொண்டிருந்தது. அது ஒரு இடத்தில் புல் மேய்ந்து விட்டு அடுத்த இடத்துக்கு மெதுவாகப் போனது . அங்க புல் மேயத் தொடங்கியது. ஆகா இதுதான் சரியான வழி பேசமா பசுவோட முதுகில் உட்கார்ந்துகிட்டா ஜாலியாக இருக்கும் என்று நினைத்தது. 

 

பசு காகத்தை கண்டுகொள்ளவில்லை. காக்கா கா கா என்று கத்தியது. அப்பவும் பசு அதை கவனிக்கவில்லை. இதுகிட்ட நமக்கென்ன பேச்சு என்று புல்மேயறதுலேயே கண்ணா இருந்தது.

 

நான் உன்னோட முதுகில் ஏறி உகட்காரப் போறேண்ணு சொல்லிட்டு பசுவோட முதுகில் ஏறி உட்கார்ந்தது. அவ்வளவு தான் பசுவுக்கு வந்ததே கோபம். அது வாலச் சுழற்றி அதை விரட்டி விட்டது. அது பலதடவை முயற்சி செய்தது. ஒவ்வொரு முறையும் பசு அதை விரட்டி விரட்டி விட்டது.

 

இப்ப என்ன செய்வது காகம் யோசித்தது. அதோட மனசுலில் ஒரு திட்டம் தோன்றியது. அது நேரா பசுவோட முகத்துக்கு நேராப் போயி "நீ உன் முதுகில் சவாரி செய்ய ஒத்துக்கமாட்டேங்கிற. ஆனா எனக்கு உன் முதுகில் சவாரி செய்யணும்ணு ரொம்ப ஆசையாவும் இருக்கு. அதனால்  நமக்கிடையே ஒரு போட்டி வச்சுக்குவோம்.

 

அந்தப் போட்டியில நீ ஜெயிச்சா நான் உன் மேல் உட்க்கார மாட்டேன். ஆனா நான் ஜெயிச்சா ஊம்மேல் சவாரி செய்ய நீ ஒத்துக்கணும் சரியா? அப்படீண்ணு கேட்டுச்சு.

 

பசு முதல் தடவையா காக்கா ஏரெடுத்துப் பார்த்தது. இத்துணூண்டு இருந்துட்டு இது நம்ம போட்டிக்குக் கூப்பிடுது. என்கிட்டே சவால் விடுது. ஒரு கை

பாத்துருவோம் அதோட இந்தக் காக்காயோட தொல்லை தீருமே என்று நினைத்து  போட்டி சொல்லுணு கேட்டது.

 

நீ மேஞ்சிட்டிருக்கிற வயல்வரப்பு கீழே இருக்கு. இந்த வயலில் தண்ணீர் இருக்கு. இதுக்கு கொஞ்சம் மேலாக அந்த வயல் இருக்கு பார். அதுலையும் தண்ணீர் இருக்கா. நான் மேலே இருக்கிற வயலை  எடுத்துக்கிறேன். நீ கீழே இருக்கிற வயலை எடுத்துக்கோ. இரண்டுலையும் தண்ணீர் இருக்கல்ல. இந்த வயலில் இருக்கிற தண்ணியெ முழுதும் குடிக்கணும் வயல் வத்திப்போகணும் யாரோட வயல் முதலில் வத்திப் போகுதோ அவங்கதான் ஜெயிச்சவங்க... இதுதான் போட்டி சரியா அப்படீண்ணு சொல்லியது.

 

இந்தச் சின்ன காக்கா எப்படி ஒரு வயல் நிறைய இருக்கிற தண்ணியை குடிக்கப்போகுது அப்படீண்ணு நினைத்து கொண்டு சரி ஒத்துக்கிறேன்ணு சொல்லிட்டு

தண்ணியை குடிக்க ஆரம்பித்தது. காக்காவும் மேல இருக்கிற வயலுக்குப் பறந்து போய் தண்ணியை குடிக்கற மாதிரி நடித்தது. அப்புறம் அது என்ன பண்ணியது தெரியுமா? மேலே  இருக்கிற வயலோட வரப்பில் ஓட்டை போட ஆரம்பித்தது. அலகால வரப்பைக் குத்திக் குத்தி சின்னச்

சின்ன ஓட்டை போட்டது ஒண்ணு இரண்டு ஒட்டையல்ல ஒன்பது ஒட்டை போட்டது. அதனால் என்னானது மேலயிருக்கிற வயலிலிருந்து

தண்ணீர் கீழே பார்த்து ஒழுகத் தொடங்கியது.

 

கீழே இருக்கிற பசுவோ தண்ணீர் குடிக்குது குடிக்குது ஆனா வயல் குறையவே  மாட்டேங்குது என்னடா இது அதிசயமா இருக்குத்து என்று தலையைத் தூக்கி மேலே பார்த்தா வயல் வரப்பிலிருந்து தண்ணிர் ஒழுகி கீழ் வயலுக்கு வருது.

 

ஏய் காக்கா. நீ என்ன ஏமாற்றிட்டே. நான் இதை ஒத்துக்க மாட்டேண்ணு சொல்லியது.

 

"இங்க பாரு மேல இருக்கிற வயல் வத்திப் போயிருச்சு'' அதனாலே நான்தான் ஜெயிச்சேன் சொல்லியப்து.

 

நான் உன் முதுகுமேல் உட்க்காருவேன் அப்படீண்ணு சொல்லிட்டு பசுவோட முதுகுமேல் உட்க்காரப் போச்சு. ஆனா பசுவிடலே அது வாலால்

காக்காயை விரட்டியது. அப்படி விரட்டும்போது காக்கா கொஞ்சம் மேலே பறக்கும் அப்புறம் மறுபடியும் பசுவோட முதுகில் உட்காரும்.

 

நீங்க எங்கயாவது ஒரு பசு மேஞ்சிட்டிருக்கிறத பாருங்க. அதுக்குப் பக்கத்தில் ஒரு காக்கா இருக்கும். அது பசுவோட முதுகில் உகட்கார்ந்து சவாரி பண்ண முயற்சி செய்யும். பசு வாலைச் சுழற்றி அது விரட்டும்.

 

by Swathi   on 11 Mar 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
29-Apr-2018 06:50:35  said : Report Abuse
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.