LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றிக் குறிப்பிடுவதால் கைந்நிலை எனப்பட்டது. இந் நூலைச் இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். 
நூல்
1. குறிஞ்சி
நுகர்தல் இவரும் கிளிகடி ஏனல்
நிகரில் மடமான் எரியும் அமர் சாரல்
கானக நாடன் கலந்தான் இவன் என்று
மேனி சிதையும் பசந்து. 1
- வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
வெந்த புனத்துக்கு வாச முடைத்தாகச்
சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலைநாடன் வாரான்கொல் தோழிஎன்
நெஞ்சம் நடுங்கி வரும். 2
- வரைவு நீட்டித்த வழி ஆற்றாமையைத் தலைவி தோழிக்குக் கூறுதல்
பாசிப் பசுஞ்சுனைப் பாங்கர் அழிமுதுநீர்
காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும்
பாசம்பட் டோடும் படுகல் மலைநாடற்கு
ஆசையின் தேம்பும் என் நெஞ்சு. 3
- வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
ஓங்கல் விழுப்பலவின் இன்பம் கொளீஇய
தீங்கனி மாவின் முசுப்பாய் மலைநாடன்
தான்கலந்து உள்ளாத் தகையானோ நேரிழாய்
தேங்கலந்த சொல்லின் தெளித்து. 4
- வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
இரசங்கொண்டு இன்தேன் இரைக்கும் குரலைப்
பிரசை இரும்பிடி பேணி வரூஉம்
முரசருவி ஆர்க்கும் மலைநாடற்கு என்தோள்
நிரையம்எனக் கிடந்த வாறு. 5
- வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
மரையா உகளும் மரம்பயில் சோலை
உரைசால் மடமந்தி ஓடி உகளும்
புரைதீர் மலைநாடன் பூண்ஏந்து அகலம்
உரையா வழங்குமென் நெஞ்சு. 6
கல்வரை ஏறிக் கடுவன் கனிவாழை
எல்உறு போழ்தின் இனிய பழங்கவுள்கொண்டு
ஒல்என ஓடு மலைநாடன் தன்கேண்மை
சொல்லச் சொரியும் வளை. 7
கருங்கை கதவேழம் கார்ப்பாம்புக் குப்பங்
கி...க்...கொண்...கரும்
பெருங்கல் மலைநாடன் பேணி வரினே
சுருங்கும் இவள்உற்ற நோய். 8
- தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்.
காந்தள ரும்புகை என்று கதவேழம்
ஏந்தல் மருப்பிடைக் கைவைத்து இனனோக்கிப்
பாய்ந்தெழுந்து ஓடும் பயமலை நன்னாடன்
காய்ந்தான்கொல் நம்கண் கலப்பு. 9
- வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
பொன்இணர் வேங்கைப் புனஞ்சூழ் மலைநாடன்
மின்னின் அனையவேல் ஏந்தி இரவினுள்
இன்னே வரும்கண்டாய் தோழி இடையாமத்து
என்னை இமைபொரு மாறு. 10
- தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூமி
பொறிகிளர் மஞ்ஞை புகன்று குடையும்
முறிகிளர் நன்மலை நாடன் வருமே
அரிதுரைத்திவ் இல்லில் நமக்கு. 11
- தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
நாக நறுமலர்நாள் வேங்கைப் பூவிரவிக்
கேசம் அணிந்த கிளர்எழிலோன் ஆகம்
முடியுங் கொல் என்றுமுனிவான் ஒருவன்
வடிவேல்கை ஏந்தி வரும். 12
- தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
2. பாலை
கடுகி அதர்அலைக்கும் கல்சூழ் பதுக்கை
விடுவில் எயினர்தம் வீளைஓர்த் தோடும்
நெடுவிடை அத்தம் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண். 13
- வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்.
.................................
............................................அவிழும்
புதல்மாறு வெங்கானம் போக்குரைப்ப நில்லா
முதன் ....................
கதநாய் துரப்ப. 14
- வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்.
...........................................
...........................................
கடுங்கதிர் வெங்கானம் பல்லாருட்கண் சென்றார்
கொடுங்கல் மலை..... 15
- சென்ற செய்யுளில் கூறப்பட்டதாக இருக்கலாம்.
............. வுறையு மெல்லென் கடத்துக்
கடுஞ்சின வேங்கை கதழ்வேழம் சாய்க்கு
...........................................
........................................... நமர். 16
கடமா இரிந்தோடும் கல்லதர் அத்தம்
மடமா இரும்பிடி வேழ மரு.............
....................ண்ட உண்கண் ணுள்நீர்
........................................... 17
ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடை
ஏமாண் சிலையார்க்கும் இனமா இரிந்துஓடும்
தாமாண்பில் வெஞ்சுரம் சென்றார் வரக்கண்டு
வாய்மாண்ட பல்லி படும். 18
- பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.
அரக்கார்ந்த ஓமை அரிபடு நீழல்
செருக்கில் கடுங்களிறு சென்றுறங்கி நிற்கும்
பரற்கானம் பல்பொருட்குச் சென்றார் வருவர்
நுதற்கு இவர்ந் தேறும் ஒளி. 19
- பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.
..............................................................
........................................... வீழ்க்கும்
ஓவாத வெங்கானம் சென்றார்........
..............வார் வருவார் நமர். 20
ஆந்தை குறுங்கலி கொள்ளநம் ஆடவர்
காய்ந்து கதிர்தெறூஉம் கானம் கடந்தார்பின்
ஏந்தல் இளமுலை ஈர்எயிற்றாய் என்நெஞ்சு
நீந்து நெடுவிடைச் சென்று. 21
- பிரிவாற்றாத தலைவி தன் தோழிக்குக் கூறியது.
கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர்
உள்ளம் பிரிந்தமை நீஅறிதி - ஒள்இழாய்
தொல்லை விடரகம் நீந்திப் பெயர்ந்தவர்
வல்லைநாம் காணும் வரவு. 22
- பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.
சிலையொலி வெங்கணையார் சிந்தியா நெஞ்சில்
கொலைபுரி வில்லொடு கூற்றுபோல் ஓடும்
இலையொலி வெங்கானத்து இப்பருவம் சென்றார்
தொலைவிலர்கொல் தோழி நமர். 23
- ஆற்றாமையறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது.
வெஞ்சுரம் தேரோட வெகிநின்று அத்தமாச்
சிந்தையான் நீர்என்று செத்துத் தவாஓடும்
பண்பில் அருஞ்சுரம் என்பவால் ஆய்தொடி
நண்பிலார் சென்ற நெறி. 24
- ஆற்றாமையறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது.
3. முல்லை
கார்செய் புறவில் கவினிக் கொடிமுல்லை
கூர்எயிறு ஈனக் குருத்தரும்ப - ஓரும்
வருவர்நம் காதலர் வாள்தடங் கண்ணாய்
பருவரல் பைதல்நோய் கொண்டு. 25
- பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது.
குருதி மலர்த்தோன்றி கூர்முகை ஈன
........... சேவல் எனப்பிடவாம் ஏறி
பொருதீ எனவெருளும் பொன்நேர் நிறத்தாய்
அரிதவர் வாரா விடல். 26
- பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது.
.......................................................................
.............. ................ ஒல்கப் புகுதரு
கார்தரு மாலை கலந்தார் வரவுள்ளி
ஊர்தரு மேனி பசப்பு. 27
.......................................................................
................. பெய்த புறவில் கடுமான்தேர்
ஒல்லைக் கடவாவார் இவர்காணின் காதலர்
சில்........................................................... 28
.............. .............. ............... குருந்தலரப்
பீடார் இரலை பிணைதழுவக் காடாரக்
கார்வானம் வந்து முழங்................
......... ............ ....................... 29
.............. ............... ................ ................
.............. .................. ............. ...............
கொன்றை கொடுகுழல் ஊதிய கோவலர்
மன்றம் புகுதரும் போழ்து. 30
.............. .............. .................. ..............
................ ............. ................. ..............
.............. .............. ................ வானம்
வந்து துளிவழங்கக் கண்டு. 31
காரெதிர் வானம் கதழ்எரி சி.........
............... ................. .............. ..............
.................. ...........லக மெழுநெஞ்சே சொல்லாயால்
கூர்எரி மாலைக் குறி. 32
தளையவிழ்தே .......... ............. ...............
............... .............. ................... ..............
உளையார் கலிநன் மாப்பூட்டி வருவார்
களையாரோ நீயுற்ற நோய். 33
முல்லை எயிறுஈன ............ ............
............. ............. ...........ன மல்கிக்
கடல்முகந்து கார்பொழியக் காதலர் வந்தார்
உடனியைந்த கெ............. ......................... 34
.............. ............... ................ ..............
............... .............. ரடைப் பால்வாய் இடையர்
தெரிவிலர் தீங்குழல் ஊதும் பொழுதால்
அரித ............ ............... 35
பிடவங் குருந்தொடு பிண்டி மலர
மடவமயில் கூவ மந்திமா கூரத்
தடமலர்க் கோதையாய் தங்கார் வருவர்
இடபமெனக் கொண்டு தாம். 36
- தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என வற்புறுத்தி ஆற்றுவித்தல்.
4. மருதம்
கழனி உழவர் கலிஅஞ்சி ஓடித்
தழென மதஎருமை தண்கயம் பாயும்
பழன வயலூரன் பாணஎம் முன்னர்ப்
பொழெனப் பொய்கூறா தொழி. 37
- பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணனை வாயிலாக விடுக்கத் தலைவி பாணனை நோக்கிக் கூறியது.
கயலினம் பாயும் கழனி நல்லூர
நயமிலேன் எம்மனை இன்றொடு வாரல்
துயிலின் இளமுலையார் தோள்நயந்து வாழ்கின்
குயி...... .............. ........... கொண்டு. 38
- பரத்தையர் சேரியில் பயின்று வந்த தலைவனைப் பிரிந்து தலைவி கூறியது.
முட்ட முதுநீர் அடைகரை மேய்ந்தெழுந்து
தொட்ட வரிவரால் பாயும் புனல்ஊரன்
கட்டலர் கண்ணிப் புதல்வனைக் கொண்டுஎம்மில்
சுட்டி அலைய வரும். 39
- தலைவன் மகற்கொண்டு வரும் சிறப்பினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது.
தாரா இரியும் தகைவயல் ஊரனை
வாரான் எனினும் வரும்என்று - சேரி
புலப்படும் சொல்லும் இப்பூங்கொடி அன்னார்
கலப்படும் கூடுங்கொல் மற்று. 40
- வாயிலாக வந்த பாணனுக்குத் தோழி தலைவியின் பண்பு கூறி வாயில் மறுத்தது.
பொய்கைநல் லூரன் திறன்கிளப்ப என்னுடையை?
அதன்று எனினும் அறிந்தோம்யாம் - செய்தி
நெறியின் இனியசொல் நீர்வாய் மழலைச்
சிறுவன் எனக்குடைமை யால். 41
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.
நீத்தம் நீர்ஊரன் நிலைமையும் வண்ணமும்
யார்க்கு ரைத்திபாண? அதனால்யாம் என்செய்தும்?
கூத்தனாக் கொண்டு குறைநீர் உடையையேல்
ஆட்டுவித்து உண்ணினும் உண். 42
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.
போதவிழ் தாமரைப் பூந்துறை ஊரனைத்
தாதவிழ் கோதைத் தகையிலார் தாம்புலப்பர்
ஏதின்மை சொல்லி இருப்பர் பிறர்மகளிர்
பேதமை தம்மேலே கொண்டு. 43
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.
தன்துறை ஊரன் தடமென் பணைத்தோளாய்
வண்டூது கோதை வகைநாடிக் - கொண்டிருந்து
கோல வனமுலையும் புல்லினான் என்றெடுத்துச்
சாலவும் தூற்றும் அலர். 44
- வாயிலாக வந்த தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது.
மூத்தேம் இனிப்பாண முன்னாயின் நாம்இளையேம்
கார்த்தண் கலிவயல் ஊரான் கடிதுஎமக்குப்
பாத்தில் பயமொழி பண்பு பலகூறி
நீத்தல் அறிந்திலேம் இன்று. 45
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.
கயநீர்ப் பாய்ந்தோடும் காஞ்சிநல் ஊரன்
நயமே பலசொல்லி நாணினன் போன்றான்
பயமில் யாழ்ப்பாண பழுதாய கூறாது
எழுநீபோ நீடாது மற்று. 46
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.
அரக்காம்பல் தாமரை அம்செங் கழுநீர்
ஒருக்கார்ந்த வல்லி ஒலித்தாரக் குத்துஞ்
செருக்கார் வளவயல்ஊரன் பொய்ப் பாண
இருக்கஎம் இல்லுள் வாரல். 47
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.
கொக்கார் வளவயல்ஊரன் குளிர் சாந்தம்
மிக்க வனமுலை புல்லான் பொலிவுடைத்தா
தக்கயாழ்ப் பாணதளர் முலையாய் மூத்தமைந்தார்
உத்தரம் வேண்டா வரல். 48
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.
5.பாலை
நாவாய் வழங்கு நனிதிரைத் தண்கடலுள்
ஓவா கலந்தார்க்கு ஒல்லென் இறாக்குப்பைப்
பாவாரம் சேர்ப்பதற்கு உரையாய் பரியாது
நோயான் நுணுகிய வாறு. 49
நெடுங்கடல் சேர்ப்ப நின்னோடு உரையேன்
ஒடுங்கு மடற்பெண்ணை அன்றிற்கும் சொல்லேன்
கடுஞ்சூளில் தான்கண்டு கானலுள் மேயும்
தடந்தாள் மடநாராய் கேள். 50
மணிநிற நெய்தல் மலர்புரையும் கண்ணாய்
அணிநல முண்டிறந்து ...ம்மருளோ விட்ட
துணிமுந் நீர்ச் சேர்ப்பற்குத் தூதொடு வந்த
பணிமொழிப் புள்ளே பற. 51
அன்னையும் இல்கடிந்தாள் யாங்குஇனியாம் என்செய்கம்
புன்னையங் கானலுள் புக்கருந்தும் - நின்னை
நினையான் துறந்த நெடுங்கழிச் சேர்ப்பற்கு
உரையேனோ பட்ட பழி. 52
அலவன் வழங்கும் அடும்பிமிர் எக்கர்
நிலவு நெடுங்கானல் நீடார் துறந்தார்
புலவுமீன் குப்பை கவரும் துறைவன்
கலவான்கொல் தோழி நமக்கு. 53
- வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.
என்னையர் தந்த இறவுணங்கல் யாம்கடிந்து
புன்னையங் கானல் இருந்தேமாப் பொய்த்தெம்மைச்
சொன்னலம் கூறி நலனுண்ட சேர்ப்பனை
என்னைகொல் யாம்காணு மாறு. 54
- வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.
கொக்கார் கொடுங்கழிக் கூடுநீர்த் தண்சேர்ப்பன்
நக்காங்கு அசதி தனியாடித் - தக்க
பொருகயல் கண்ணினாய் புல்லான் விடினே
இருகையும் நில்லா வளை. 55
- பாங்கி தலைவன் இயற்பழித்துழித் தலைவி இயற்பட மொழிந்தது.
நுரைதரும் ஓதம் கடந்துஎமர் தந்த
கருங்கரை வன்மீன் கவரும்புள் ஓப்பின்
புகரில்லேம் யாமிருப்பப் பூங்கழிச் சேர்ப்பன்
நுகர்வனன் உண்டான் நலம். 56
- வரைபொருள் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.
கொடுவாய்ப் புணரன்றில் கொய்மடல் பெண்ணைத்
தடவுக் கிளைபயிரும் தண்கடல் சேர்ப்பன்
நிலவுக் கொடுங்கழி நீந்திடும் முன்றில்
புலவுத் திரைபொருத போழ்து. 57
- தோழி இரவுக் குறியிடம் தலைவிக்கு உணர்த்தியது.
சுறாஎறி குப்பை சுழலும் கழியுள்
இறாஎறி ஓதம் அலற இரைக்கும்
உறாஅநீர்ச் சேர்ப்பனை உள்ளி இருப்பின்
பொறாஅஎன் முன்கை வளை. 58
- தலைவி தோழியிடம் பிரிவாற்றாமை கூறி வருந்துதல்.
தாழை குருகுஈனும் தண்ணந் துறைவனை
மாழை மானோக்கின் மடமொழி - நூழை
நுழையும் மடமகன் யார்கொல் என்றுஅன்னை
புழையும் அடைத்தாள் கதவு. 59
- இரவு குறிக்கண் சிறைப்புறத்தானாக நிற்கத் தோழி தலைவிக்குக் கூறுவாளாகப் படைத்து மொழிந்தது.
பொன்னம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி
தென்னவன் கொற்கைக் குருகுஇரிய - மன்னரை
ஓடுபுறம் கண்ட ஒண்தாரான் தேர்இதோ
கூடல் அணைய வரவு. 60
- வினை முடித்து மீண்ட தலைமகன் வரவு கண்ட தோழி தலைவிக்குக் கூறியது.
கைந்நிலை முற்றிற்று.

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றிக் குறிப்பிடுவதால் கைந்நிலை எனப்பட்டது. இந் நூலைச் இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். 

நூல்

1. குறிஞ்சி
நுகர்தல் இவரும் கிளிகடி ஏனல்நிகரில் மடமான் எரியும் அமர் சாரல்கானக நாடன் கலந்தான் இவன் என்றுமேனி சிதையும் பசந்து. 1
- வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

வெந்த புனத்துக்கு வாச முடைத்தாகச்சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம்வஞ்ச மலைநாடன் வாரான்கொல் தோழிஎன்நெஞ்சம் நடுங்கி வரும். 2
- வரைவு நீட்டித்த வழி ஆற்றாமையைத் தலைவி தோழிக்குக் கூறுதல்

பாசிப் பசுஞ்சுனைப் பாங்கர் அழிமுதுநீர்காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும்பாசம்பட் டோடும் படுகல் மலைநாடற்குஆசையின் தேம்பும் என் நெஞ்சு. 3
- வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

ஓங்கல் விழுப்பலவின் இன்பம் கொளீஇயதீங்கனி மாவின் முசுப்பாய் மலைநாடன்தான்கலந்து உள்ளாத் தகையானோ நேரிழாய்தேங்கலந்த சொல்லின் தெளித்து. 4
- வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

இரசங்கொண்டு இன்தேன் இரைக்கும் குரலைப்பிரசை இரும்பிடி பேணி வரூஉம்முரசருவி ஆர்க்கும் மலைநாடற்கு என்தோள்நிரையம்எனக் கிடந்த வாறு. 5
- வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

மரையா உகளும் மரம்பயில் சோலைஉரைசால் மடமந்தி ஓடி உகளும்புரைதீர் மலைநாடன் பூண்ஏந்து அகலம்உரையா வழங்குமென் நெஞ்சு. 6
கல்வரை ஏறிக் கடுவன் கனிவாழைஎல்உறு போழ்தின் இனிய பழங்கவுள்கொண்டுஒல்என ஓடு மலைநாடன் தன்கேண்மைசொல்லச் சொரியும் வளை. 7
கருங்கை கதவேழம் கார்ப்பாம்புக் குப்பங்கி...க்...கொண்...கரும்பெருங்கல் மலைநாடன் பேணி வரினேசுருங்கும் இவள்உற்ற நோய். 8
- தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்.

காந்தள ரும்புகை என்று கதவேழம்ஏந்தல் மருப்பிடைக் கைவைத்து இனனோக்கிப்பாய்ந்தெழுந்து ஓடும் பயமலை நன்னாடன்காய்ந்தான்கொல் நம்கண் கலப்பு. 9
- வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

பொன்இணர் வேங்கைப் புனஞ்சூழ் மலைநாடன்மின்னின் அனையவேல் ஏந்தி இரவினுள்இன்னே வரும்கண்டாய் தோழி இடையாமத்துஎன்னை இமைபொரு மாறு. 10
- தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்

எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூமிபொறிகிளர் மஞ்ஞை புகன்று குடையும்முறிகிளர் நன்மலை நாடன் வருமேஅரிதுரைத்திவ் இல்லில் நமக்கு. 11
- தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்

நாக நறுமலர்நாள் வேங்கைப் பூவிரவிக்கேசம் அணிந்த கிளர்எழிலோன் ஆகம்முடியுங் கொல் என்றுமுனிவான் ஒருவன்வடிவேல்கை ஏந்தி வரும். 12
- தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்

2. பாலை
கடுகி அதர்அலைக்கும் கல்சூழ் பதுக்கைவிடுவில் எயினர்தம் வீளைஓர்த் தோடும்நெடுவிடை அத்தம் செலவுரைப்பக் கேட்டேவடுவிடை மெல்கின கண். 13
- வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்.

.............................................................................அவிழும்புதல்மாறு வெங்கானம் போக்குரைப்ப நில்லாமுதன் ....................கதநாய் துரப்ப. 14
- வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்.

......................................................................................கடுங்கதிர் வெங்கானம் பல்லாருட்கண் சென்றார்கொடுங்கல் மலை..... 15
- சென்ற செய்யுளில் கூறப்பட்டதாக இருக்கலாம்.

............. வுறையு மெல்லென் கடத்துக்கடுஞ்சின வேங்கை கதழ்வேழம் சாய்க்கு...................................................................................... நமர். 16

கடமா இரிந்தோடும் கல்லதர் அத்தம்மடமா இரும்பிடி வேழ மரு.................................ண்ட உண்கண் ணுள்நீர்........................................... 17

ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடைஏமாண் சிலையார்க்கும் இனமா இரிந்துஓடும்தாமாண்பில் வெஞ்சுரம் சென்றார் வரக்கண்டுவாய்மாண்ட பல்லி படும். 18
- பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.

அரக்கார்ந்த ஓமை அரிபடு நீழல்செருக்கில் கடுங்களிறு சென்றுறங்கி நிற்கும்பரற்கானம் பல்பொருட்குச் சென்றார் வருவர்நுதற்கு இவர்ந் தேறும் ஒளி. 19
- பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.

......................................................................................................... வீழ்க்கும்ஓவாத வெங்கானம் சென்றார்......................வார் வருவார் நமர். 20

ஆந்தை குறுங்கலி கொள்ளநம் ஆடவர்காய்ந்து கதிர்தெறூஉம் கானம் கடந்தார்பின்ஏந்தல் இளமுலை ஈர்எயிற்றாய் என்நெஞ்சுநீந்து நெடுவிடைச் சென்று. 21
- பிரிவாற்றாத தலைவி தன் தோழிக்குக் கூறியது.

கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர்உள்ளம் பிரிந்தமை நீஅறிதி - ஒள்இழாய்தொல்லை விடரகம் நீந்திப் பெயர்ந்தவர்வல்லைநாம் காணும் வரவு. 22
- பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.

சிலையொலி வெங்கணையார் சிந்தியா நெஞ்சில்கொலைபுரி வில்லொடு கூற்றுபோல் ஓடும்இலையொலி வெங்கானத்து இப்பருவம் சென்றார்தொலைவிலர்கொல் தோழி நமர். 23
- ஆற்றாமையறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது.

வெஞ்சுரம் தேரோட வெகிநின்று அத்தமாச்சிந்தையான் நீர்என்று செத்துத் தவாஓடும்பண்பில் அருஞ்சுரம் என்பவால் ஆய்தொடிநண்பிலார் சென்ற நெறி. 24
- ஆற்றாமையறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது.

3. முல்லை
கார்செய் புறவில் கவினிக் கொடிமுல்லைகூர்எயிறு ஈனக் குருத்தரும்ப - ஓரும்வருவர்நம் காதலர் வாள்தடங் கண்ணாய்பருவரல் பைதல்நோய் கொண்டு. 25
- பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது.

குருதி மலர்த்தோன்றி கூர்முகை ஈன........... சேவல் எனப்பிடவாம் ஏறிபொருதீ எனவெருளும் பொன்நேர் நிறத்தாய்அரிதவர் வாரா விடல். 26
- பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது.

..................................................................................... ................ ஒல்கப் புகுதருகார்தரு மாலை கலந்தார் வரவுள்ளிஊர்தரு மேனி பசப்பு. 27

........................................................................................ பெய்த புறவில் கடுமான்தேர்ஒல்லைக் கடவாவார் இவர்காணின் காதலர்சில்........................................................... 28

.............. .............. ............... குருந்தலரப்பீடார் இரலை பிணைதழுவக் காடாரக்கார்வானம் வந்து முழங்......................... ............ ....................... 29

.............. ............... ................ .............................. .................. ............. ...............கொன்றை கொடுகுழல் ஊதிய கோவலர்மன்றம் புகுதரும் போழ்து. 30

.............. .............. .................. .............................. ............. ................. ............................ .............. ................ வானம்வந்து துளிவழங்கக் கண்டு. 31

காரெதிர் வானம் கதழ்எரி சி........................ ................. .............. ................................ ...........லக மெழுநெஞ்சே சொல்லாயால்கூர்எரி மாலைக் குறி. 32

தளையவிழ்தே .......... ............. .............................. .............. ................... ..............உளையார் கலிநன் மாப்பூட்டி வருவார்களையாரோ நீயுற்ற நோய். 33

முல்லை எயிறுஈன ............ ......................... ............. ...........ன மல்கிக்கடல்முகந்து கார்பொழியக் காதலர் வந்தார்உடனியைந்த கெ............. ......................... 34

.............. ............... ................ ............................. .............. ரடைப் பால்வாய் இடையர்தெரிவிலர் தீங்குழல் ஊதும் பொழுதால்அரித ............ ............... 35

பிடவங் குருந்தொடு பிண்டி மலரமடவமயில் கூவ மந்திமா கூரத்தடமலர்க் கோதையாய் தங்கார் வருவர்இடபமெனக் கொண்டு தாம். 36
- தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என வற்புறுத்தி ஆற்றுவித்தல்.

4. மருதம்
கழனி உழவர் கலிஅஞ்சி ஓடித்தழென மதஎருமை தண்கயம் பாயும்பழன வயலூரன் பாணஎம் முன்னர்ப்பொழெனப் பொய்கூறா தொழி. 37
- பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணனை வாயிலாக விடுக்கத் தலைவி பாணனை நோக்கிக் கூறியது.

கயலினம் பாயும் கழனி நல்லூரநயமிலேன் எம்மனை இன்றொடு வாரல்துயிலின் இளமுலையார் தோள்நயந்து வாழ்கின்குயி...... .............. ........... கொண்டு. 38
- பரத்தையர் சேரியில் பயின்று வந்த தலைவனைப் பிரிந்து தலைவி கூறியது.

முட்ட முதுநீர் அடைகரை மேய்ந்தெழுந்துதொட்ட வரிவரால் பாயும் புனல்ஊரன்கட்டலர் கண்ணிப் புதல்வனைக் கொண்டுஎம்மில்சுட்டி அலைய வரும். 39
- தலைவன் மகற்கொண்டு வரும் சிறப்பினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது.

தாரா இரியும் தகைவயல் ஊரனைவாரான் எனினும் வரும்என்று - சேரிபுலப்படும் சொல்லும் இப்பூங்கொடி அன்னார்கலப்படும் கூடுங்கொல் மற்று. 40
- வாயிலாக வந்த பாணனுக்குத் தோழி தலைவியின் பண்பு கூறி வாயில் மறுத்தது.

பொய்கைநல் லூரன் திறன்கிளப்ப என்னுடையை?அதன்று எனினும் அறிந்தோம்யாம் - செய்திநெறியின் இனியசொல் நீர்வாய் மழலைச்சிறுவன் எனக்குடைமை யால். 41
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

நீத்தம் நீர்ஊரன் நிலைமையும் வண்ணமும்யார்க்கு ரைத்திபாண? அதனால்யாம் என்செய்தும்?கூத்தனாக் கொண்டு குறைநீர் உடையையேல்ஆட்டுவித்து உண்ணினும் உண். 42
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

போதவிழ் தாமரைப் பூந்துறை ஊரனைத்தாதவிழ் கோதைத் தகையிலார் தாம்புலப்பர்ஏதின்மை சொல்லி இருப்பர் பிறர்மகளிர்பேதமை தம்மேலே கொண்டு. 43
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

தன்துறை ஊரன் தடமென் பணைத்தோளாய்வண்டூது கோதை வகைநாடிக் - கொண்டிருந்துகோல வனமுலையும் புல்லினான் என்றெடுத்துச்சாலவும் தூற்றும் அலர். 44
- வாயிலாக வந்த தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது.

மூத்தேம் இனிப்பாண முன்னாயின் நாம்இளையேம்கார்த்தண் கலிவயல் ஊரான் கடிதுஎமக்குப்பாத்தில் பயமொழி பண்பு பலகூறிநீத்தல் அறிந்திலேம் இன்று. 45
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

கயநீர்ப் பாய்ந்தோடும் காஞ்சிநல் ஊரன்நயமே பலசொல்லி நாணினன் போன்றான்பயமில் யாழ்ப்பாண பழுதாய கூறாதுஎழுநீபோ நீடாது மற்று. 46
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

அரக்காம்பல் தாமரை அம்செங் கழுநீர்ஒருக்கார்ந்த வல்லி ஒலித்தாரக் குத்துஞ்செருக்கார் வளவயல்ஊரன் பொய்ப் பாணஇருக்கஎம் இல்லுள் வாரல். 47
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

கொக்கார் வளவயல்ஊரன் குளிர் சாந்தம்மிக்க வனமுலை புல்லான் பொலிவுடைத்தாதக்கயாழ்ப் பாணதளர் முலையாய் மூத்தமைந்தார்உத்தரம் வேண்டா வரல். 48
- வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

5.பாலை
நாவாய் வழங்கு நனிதிரைத் தண்கடலுள்ஓவா கலந்தார்க்கு ஒல்லென் இறாக்குப்பைப்பாவாரம் சேர்ப்பதற்கு உரையாய் பரியாதுநோயான் நுணுகிய வாறு. 49
நெடுங்கடல் சேர்ப்ப நின்னோடு உரையேன்ஒடுங்கு மடற்பெண்ணை அன்றிற்கும் சொல்லேன்கடுஞ்சூளில் தான்கண்டு கானலுள் மேயும்தடந்தாள் மடநாராய் கேள். 50
மணிநிற நெய்தல் மலர்புரையும் கண்ணாய்அணிநல முண்டிறந்து ...ம்மருளோ விட்டதுணிமுந் நீர்ச் சேர்ப்பற்குத் தூதொடு வந்தபணிமொழிப் புள்ளே பற. 51
அன்னையும் இல்கடிந்தாள் யாங்குஇனியாம் என்செய்கம்புன்னையங் கானலுள் புக்கருந்தும் - நின்னைநினையான் துறந்த நெடுங்கழிச் சேர்ப்பற்குஉரையேனோ பட்ட பழி. 52
அலவன் வழங்கும் அடும்பிமிர் எக்கர்நிலவு நெடுங்கானல் நீடார் துறந்தார்புலவுமீன் குப்பை கவரும் துறைவன்கலவான்கொல் தோழி நமக்கு. 53
- வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.

என்னையர் தந்த இறவுணங்கல் யாம்கடிந்துபுன்னையங் கானல் இருந்தேமாப் பொய்த்தெம்மைச்சொன்னலம் கூறி நலனுண்ட சேர்ப்பனைஎன்னைகொல் யாம்காணு மாறு. 54
- வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.

கொக்கார் கொடுங்கழிக் கூடுநீர்த் தண்சேர்ப்பன்நக்காங்கு அசதி தனியாடித் - தக்கபொருகயல் கண்ணினாய் புல்லான் விடினேஇருகையும் நில்லா வளை. 55
- பாங்கி தலைவன் இயற்பழித்துழித் தலைவி இயற்பட மொழிந்தது.

நுரைதரும் ஓதம் கடந்துஎமர் தந்தகருங்கரை வன்மீன் கவரும்புள் ஓப்பின்புகரில்லேம் யாமிருப்பப் பூங்கழிச் சேர்ப்பன்நுகர்வனன் உண்டான் நலம். 56
- வரைபொருள் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.

கொடுவாய்ப் புணரன்றில் கொய்மடல் பெண்ணைத்தடவுக் கிளைபயிரும் தண்கடல் சேர்ப்பன்நிலவுக் கொடுங்கழி நீந்திடும் முன்றில்புலவுத் திரைபொருத போழ்து. 57
- தோழி இரவுக் குறியிடம் தலைவிக்கு உணர்த்தியது.

சுறாஎறி குப்பை சுழலும் கழியுள்இறாஎறி ஓதம் அலற இரைக்கும்உறாஅநீர்ச் சேர்ப்பனை உள்ளி இருப்பின்பொறாஅஎன் முன்கை வளை. 58
- தலைவி தோழியிடம் பிரிவாற்றாமை கூறி வருந்துதல்.

தாழை குருகுஈனும் தண்ணந் துறைவனைமாழை மானோக்கின் மடமொழி - நூழைநுழையும் மடமகன் யார்கொல் என்றுஅன்னைபுழையும் அடைத்தாள் கதவு. 59
- இரவு குறிக்கண் சிறைப்புறத்தானாக நிற்கத் தோழி தலைவிக்குக் கூறுவாளாகப் படைத்து மொழிந்தது.

பொன்னம் பசலையும் தீர்ந்தது பூங்கொடிதென்னவன் கொற்கைக் குருகுஇரிய - மன்னரைஓடுபுறம் கண்ட ஒண்தாரான் தேர்இதோகூடல் அணைய வரவு. 60
- வினை முடித்து மீண்ட தலைமகன் வரவு கண்ட தோழி தலைவிக்குக் கூறியது.

கைந்நிலை முற்றிற்று.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.