LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

அதிசயமான அரசு பள்ளி ! ஆச்சர்யமான தலைமையாசிரியர் ! காக்கம்பாடி

ஏற்காடு தாலுக்காவில் உள்ள காக்கம்பாடி எனும் மிகச் சிறிய மலைக் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் 27 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி உயர் தரம் வாய்ந்த முன்மாதிரி அரசு பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுவர் முழுவதும் மாணவர்களுக்கு ஆசிரியர்குரல்நம்பிக்கை தரும் வாசகங்களும், திருக்குறள் மற்றும் சமூக சிந்தனைகளும், தேசிய கவிஞன் மகாகவி பாரதியார் மற்றும் தேசத்தலைவர்களின் படங்களும், பல வண்ணங்களில் வரையப்பட்டுள்ளது. கழிப்பறையில் கூட மனித உடல் கூறுகள் பற்றிய படம் வரையப்பட்டுள்ளது.


இந்த பள்ளியானது மிகவும் தூய்மையாகவும், மரங்கள் நிறைந்தும், அதிக காற்றோட்டத்துடன் ஒரு தவக்கூடம் போல் காட்சியளிக்கிறது.


இந்த பள்ளியின் தலைமையாசிரியர் பால்ராஜ் மாணவர்களுக்கு பாடங்களை வித்தியாசமான முறையில் கற்பிக்கிறார். பாடத்திலுள்ள செய்யுள் மற்றும் ஆங்கில கவிதைகளையும் பாடல் வடிவில் கற்றுக் கொடுக்கிறார். இதற்கென தனது சொந்த செலவில் ஹார்மோணியமும், கீபோர்டும் வாங்கி பயன் படுத்துகிறார். மாணவர்களுக்கு இசையும் கற்று கொடுக்கிறார்.


இந்த முறையில் பாடம் எளிதாக மனதில் பதிவதாக அந்த பள்ளி குழந்தைகள் கூறுகிறார்கள். இந்த பள்ளியில் யூ.பி.எஸ். வசதியும் ஏற்படுத்தியுள்ளார். இதனால் மின்தடை பிரச்சனையும் இல்லை.இதில் மற்றொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ் மகனும் இந்த பள்ளியில்தான் படிக்கிறார்.இந்த கிராமம் மற்றும் இதை சுற்றியுள்ள கிராமங்களிலும் உள்ள மாணவர்களுக்கு இந்த பள்ளியானது ஒரு வரப்பிரசாதமாகவே திகழ்வதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.


காக்கம்பாடி கிராமத்திற்கு மனு நீதி முகாமிற்கு வந்த சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், இந்தப் பள்ளியின் சுற்று சுவரையும், அதிலுள்ள வாசகங்களையும் கண்டு பள்ளியை பார்வையிட்டார். குழந்தைகளின் திறனையும் ஆய்வு செய்து, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்ராஜ்க்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார்.


‘எழுத்து அறிவித்தவன் இறைவனாகும்’ என்ற வார்த்தை இந்த ஆசிரியருக்கு அப்படியே பொருந்துகிறது.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு அரசு பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும், அப்படிப்பட்டவர்களுக்கு தான் அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவை அரசு நடைமுறைப்படுத்தினால் அரசுப் பள்ளிகள் ஆசிரியர்குரல்அனைத்தும் சொர்க்கலோகமாக மாறிவிடும்.

 

நன்றி:ஆசிரியர் குரல்

school1
by Swathi   on 09 Jul 2014  1 Comments
Tags: Kakkambody Govt School   Tamilnadu Best Govt School   Tamilnadu Govt School   அரசு பள்ளி   சிறந்த அரசு பள்ளி   காக்கம்பாடி அரசு பள்ளி     
 தொடர்புடையவை-Related Articles
அதிசயமான அரசு பள்ளி ! ஆச்சர்யமான தலைமையாசிரியர் ! காக்கம்பாடி அதிசயமான அரசு பள்ளி ! ஆச்சர்யமான தலைமையாசிரியர் ! காக்கம்பாடி
கருத்துகள்
06-Jan-2015 21:55:04 சிவராசன் said : Report Abuse
சம்பளத்திற்கு வேலை செய்யாமல் சமூகத்திற்கு வேலை செய்பவர்கள் தான் ஆசிரியர் . ஆனால் ஆசிரியர்களோ தன் மகள் / மகன் சம்பளம் அதிகம் வாங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு ஊதியம் வாங்கி தனியார் பள்ளியில் படிக்க வைக்கின்றனர் . தமிழ் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்து கொண்டு வருவதற்கு ஆசிரியர்களே காரணம். அத்தகைய ஆசிரியர்களிடமும் சமூகப் பற்று இல்லை . அவர்கள் குழந்தைகளிடமும் சமூகப் பற்றும இல்லை. இப்படிபட்ட சூழலில் ஆசிரியர் பால்ராஜ் அவர்கள் மாணவர்கள் விரும்பி அரசு பள்ளிகளுக்கு வரவும் , எளிதாக கற்கவும் எடுத்துள்ள முயற்சிகளை ஒவ்வொரு ஆசிரியரும் பின்பற்ற வேண்டும் என்பதே என் அவா . கவிஞர் செ. பா . சிவராசன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.