LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா தொடர்கள் Print Friendly and PDF
- கலைஞர் என்னும் கலைஞன்

கலைஞர் என்னும் கலைஞன் - 16 : பூம்புகார்

டி.வி.ராதாகிருஷ்ணன்,

 எழுத்தாளர், நாடகக் கலைஞர்

 

1964ல் வந்த படம் பூம்புகார்.

 

மேகலா பிக்சர்ஸ் சார்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில், கலைஞர் திரைக்கதை, வசனத்தில் வந்த படம் பூம்புகார்.

 

ஏற்கனவே பி யூ சின்னப்பா, கண்ணாம்பா நடித்து கண்ணகி படம் வெளிவந்திருந்தாலும், கலைஞர்..தன் எண்ணத்திற்கேற்ப கதையில் சில புதுமைகளைப் புகுத்தி...தன் வசனங்களாலும், நடிகர்களின் நடிப்பினாலும் வெற்றியை அடைந்த படமாகும் பூம்புகார். இப்படத்தில் சமணத்துறவி கவுந்தியடிகளாக கே பி சுந்தராம்பாள் நடித்திருந்தார்.ஆனால் அவரை அப்பாத்திரத்தில் நடிக்க வைக்க பெரு முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டத்து.

 

அவர் ஒரு முருக பக்தர்.எப்போதும், நெற்றியில் வீபூதிப்பட்டையுடன் இருப்பார்.ஆனால், சமணத்துறவி எப்படி விபூதி இடமுடியும்.ஆகவே அவர் இப்பாத்திரத்தில் நடிக்க மறுத்தார்.கடைசியில், கலைஞரே சென்று, அவரை சமாதானப்படுத்தி, நெற்றியில் ஒரு கோடாக நாமத்தைப் போட்டு நடிக்க வைத்தார்.

 

மீண்டும், அவர் பாடும் போது ஒரு பிரச்னை ஏற்பட்டது..பாடலாசிரியர் எழுதிய பாடல் வரிகள்..

 

"அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது

 

நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது"

 

இறைவனை கேலி செய்வது போல வரும் இவ்வரிகளை தான் பாட மாட்டேன் என்று விட்டார் கேபிஎஸ்.,கடைசியில் அவ்வரிகள்..

 

"அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது

 

நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது"

 

என்று மாற்றிய பின்னரே..அவர் அப்பாடலைப் பாடினார்

 

மதுரையை கண்ணகி தீயிட்டுக் கொளுத்தியதாக கதை.ஆனால் கலைஞரோ..மதுரை பூகம்பம் ஏற்பட்டு அழிவது போல மாற்றினார்.

 

பொற்கொல்லர்கள் மனம் நோகாதவாறு வசனங்கள் எழுதப்பட்டன.

 

காலத்திற்கேற்ப மாற்றங்களில் செயல்பட்டு வந்ததாலேயே கலைஞரால் கலை, இலக்கியம், மேடைப் பேச்சு,எழுத்து நடை,ஆகியவற்றில் வெற்றி நடை போட முடிந்தது.

 

இப்படத்தின் ஆரம்பம்..கலைஞரே வந்து..கதைச்சுருக்கத்தை சொல்வது போல அமைந்தது சிறப்பாகும்.சிலப்பதிகாரம், உருவான வரலாற்றையும், பூம்புகாரின் பழங்கால சிறப்பையும் கூறி படத்தை துவக்கி வைப்பார்.

 

ஆர்.சுதர்சனம் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்புடன் அமைந்தன.

 

கலைஞர் எழுத கே பி சுந்தராம்பாள் பாடிய வாழ்க்கை என்னும் ஓடம் இன்றும் பலர் முணுமுணுக்கும் பாடலாகும்( வருமுன் காப்பவன் அறிவாளி, துயர் வந்தபின் தவிப்பவனோ ஏமாளி).

 

எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி இருவரின் வசன உச்சரிப்பும், கலைஞரின் வசனங்களும் படத்தை வெற்றி படமாக்கின.நெடுஞ்செழியன் அரசபையில் கண்ணகி நீதி கேட்டு சிலம்பை வீசும் காட்சி வசனங்களும் பராசக்தி வசனம் போல பாராட்டுப் பெற்றவையாகும்.

 

இப்படத்தில் கலைஞரின் வசனத்தில் ஒரு துளி.

 

மனசாட்சி உறங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது.

 

தொடரும்.....  

ரங்கோன் ராதா
by Swathi   on 25 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம் கலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம்
கலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன் கலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன்
கலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு கலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு
கலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை கலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை
கலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து கலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து
கலைஞர் என்னும் கலைஞன் - 20 : தங்கத் தம்பி கலைஞர் என்னும் கலைஞன் - 20 : தங்கத் தம்பி
கலைஞர் என்னும் கலைஞன் - 19 : மறக்கமுடியுமா கலைஞர் என்னும் கலைஞன் - 19 : மறக்கமுடியுமா
கலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா கலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.