|
|||||
கலகலா |
|||||
தேவையானவை : மைதா - 1/2 கிலோ வெண்ணெய் - 200 கிராம் சர்க்கரை - 350 கிராம் உப்பு - 1/4 டீஸ்பூன் செய்முறை: 1.சர்க்கரையை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ள வேண்டும்.மைதா மாவில் உப்பு, பொடித்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து பின்னர் வெண்ணெய் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து அத்துடன் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போன்று பிசைந்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும். 2.பிறகு சப்பாத்தி போல மிகவும் தடிமனாக திரட்டி கொண்டு அதனை கத்தியால் விருப்பமான வடிவத்தில் சிறு சிறு துண்டுகள் செய்து வைத்து கொள்ளவேண்டும் 3.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட் செய்து வைத்திருப்பதை எண்ணெயில் போட்டு திருப்பி விட்டு வேக வைத்து பொன் நிறம் வந்ததும் எடுத்தல் சுவையான கலகலா ரெடி. |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|