LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பாம்பன் பாலம் இந்திய பொறியியல் துறையின் பெருமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - அப்துல்கலாம் !!

கடலில் கப்பல்கள் செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் நம் நாட்டின் பொறியியல் துறையின் பெருமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

 

பாம்பன் ரயில் பாலம் செயல்பட ஆரம்பித்து, வரும் பிப்ரவரி 24ம் தேதியுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, ரயில்வே நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து வரும் இப்பாலத்தின் நூற்றாண்டு துவக்க விழா பாம்பன் ரயில்நிலையம் அருகில் நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து, கல்வெட்டினை திறந்து வைத்து முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசியதாவது, 

 

பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு 100 முறை சூரியனை பூமி சுற்றி விட்டதால் தான் அந்தப் பாலத்துக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

 

புயல், சூறாவளி, கடல் காற்றின் அரிப்புத்தன்மையிலிருந்து பாலத்தை இன்றுவரை ரயில்வேத் துறை சிறப்பாக பராமரித்து வருவது பாராட்டுக்குரியது. இந்தியாவின் முதல் கடல்வழிப்பாலம் பாம்பன் ரயில் பாலம். பாம்பனில் மேம்பாலம் அமைப்பதற்கு முன்பாக இலங்கைக்கும்,ராமேசுவரத்துக்கும் செல்வதற்கு மிகவும் பயனுள்ள பாலமாக இருந்துள்ளது. இப்பாலத்தின் மூலமாகத் தான் பயணப் போக்குவரத்தும் சுற்றுலாவும் மேம்பட்டிருக்கிறது.

 

பாம்பன் ரயில் பாலத்தின் வழியாக இன்று பல லட்சம் மக்கள் ராமேசுவரத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இப்பாலத்தை அகலரயில் பாதையாக ரயில்வேத் துறை செய்தமைக்கும், கடந்த ஆண்டு கப்பல் மோதி இப்பாலத்தின் தூண் ஒன்று சேதமாகியபோது, அதை ஏழே நாள்களில் செப்பனிட்டு உடனடியாக ரயில் சேவையை துவக்கியமைக்காகவும் ரயில்வேத் துறையின் பொறியாளர்களை பாராட்டுகிறேன்.

 

1964ல் புயலால் பாலம் சேதமடைந்த போது, அந்தப்பாலத்தை 63 நாள்களிலேயே மீண்டும் புதுப்பித்து சேவையை துவக்கிய ரயில்வே பொறியாளர்களையும் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். கப்பல்கள் வரும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் ரயில்வே நிர்வாகத்துக்கு ஒரு பொக்கிஷமாக இருந்து வருகிறது. கடல் காற்றால் துருப்பிடிக்க வேண்டிய நிலையிலும்கூட இதனை ரயில்வே நிர்வாகம் சிறப்பாக பாதுகாத்து வருகிறது. பொறியியல் தொழில் நுட்ப பெருமைகள் கொண்டதாகவும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பாலமாகவும் பாம்பன் ரயில் பாலம் அமைந்துள்ளது.

 

இந்தப் பாலம் ராமேசுவரம் தீவையும், நிலப்பரப்பையும் இணைக்கும் பாலம். இப்பாலத்தைப் போலவே மக்களையும், மனித மனங்களையும்,மதங்களையும் இணைக்கும் பாலமாக நாம் இருப்போம். மனிதத்துவத்தை வளர்க்கும் பாலமாக இருப்போம். புயல், சூறாவளி, கடலின் அரிப்புத்தன்மை உடைய காற்று ஆகியவற்றிலிருந்தும் நீடித்து இருப்பதைப் போல மனித வாழ்வில் எத்தகைய பிரச்னைகள் வந்தாலும் அவற்றை தாங்கிக்கொள்ளும் தைரியம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

 

அடுத்தவரின் துன்பத்தை துடைப்பவராக, பிறருக்கு உதவும் படகாகவும் இருப்போம். உறக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை உறங்காமல் செய்வது தான் கனவு என்பதை நினைவில் கொண்டு செயலாற்றுவோம் என்றார் அப்துல் கலாம்.

 

பாம்பன் ரயில் பாலத்தின் வழியாகத்தான் சிறுவனாக இருந்த போது பல லட்சம் முறை பயணம் செய்து நாளிதழை வீடு வீடாகச் சென்று போட்டிருக்கிறேன். பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் காலத்திலும்,வேலைக்குச் சென்ற நாள்களிலும் இந்தப் பாலத்தில் பல லட்சம் முறை பயணம் செய்திருக்கிறேன். ஆர்ப்பரிக்கும் கடல், மேலே வானம் இவை இரண்டுக்கும் இடையே ரயில் பாலத்தில் ரயில் செல்லும் போது, தென்றல் காற்று வரும். ஒரு வித தெய்வீக சங்கீத ஓசை கேட்கும். அந்த சங்கீதம் என்னை பலமுறை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ராமேசுவரம் எனது சொந்த ஊராக இருந்தாலும் பாம்பன் எனக்கு மிகவும் பிடித்த ஊர். இந்த விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியுடையவனாக இருக்கிறேன்.

 

பாம்பன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் ரயில்வே நிர்வாகம் பாம்பனை நினைவு கூறும் வகையில் சென்னைக்கும் ராமேசுவரத்துக்கும் ஒரு புதிய விரைவு ரயிலை இயக்க வேண்டும். அந்த ரயிலில் மீனவ மக்கள் பயனடையும் வகையில் மீன்களை பதப்படுத்தும் வசதியுடைய ஒரு ரயில் பெட்டியும் இணைக்கப்பட வேண்டும். இதையே ரயில்வே நிர்வாகத்துக்கு எனது அன்பு வேண்டுகோளாக வைக்கிறேன் என்றார்.இந்த விழாவில், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளமன்ற உறுப்பினர்கள், என பல அரசியல் பிரமுகர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

by Swathi   on 28 Jan 2014  0 Comments
Tags: APJ Abdul Kalam   Pamban bridge   centenary celebrations of Pamban bridge   Abdul Kalam   பாம்பன் பாலம்   அப்துல் கலாம்   பாம்பன் பாலம் பெருமை  
 தொடர்புடையவை-Related Articles
அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன் அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன்
ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் காலமானார் !! ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் காலமானார் !!
தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் அவசியம் - அப்துல் கலாம் !! தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் அவசியம் - அப்துல் கலாம் !!
உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள் இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அறிவுறுத்தல் உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள் இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அறிவுறுத்தல்
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (விண்வெளி பொறியியல்) ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (விண்வெளி பொறியியல்)
அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !! அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !!
புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை வாழ்த்திய அப்துல் கலாம் !! புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை வாழ்த்திய அப்துல் கலாம் !!
வைரமுத்துவுக்கு பாராட்டு மழை !! வைரமுத்துவுக்கு பாராட்டு மழை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.