LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இன்று எனக்கு விடுதலை! என்னால் இதை நம்ப முடியவில்லை!! - தங்கர் பச்சான்

இன்று எனக்கு விடுதலை! என்னால் இதை நம்ப முடியவில்லை!! விடுதலை இதோ கிடைத்துவிடும், இதோ கிடைத்துவிடும் என பலமுறை எதிர்பார்த்து ஏமார்ந்து போனதால் இந்த உண்மையை ஏற்க மனம் தயங்குகிறது.

என்ன குற்றம் செய்தேன்? எதற்காக சிறை படுத்தப்பட்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை! எப்படியாவது சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறி விடலாம் என எல்லா திசைகளிலும் முட்டி மோதிப் பார்த்ததால் முழு உடலும் கண்ணிப்போயிருக்கிறது. இரத்தக்கட்டுகளால் உறைந்து கிடக்கிறது.

இதுவரை நான் பணியாற்றிய எல்லாப் படங்களிலும் உழைத்த உழைப்பை எல்லாம் சேர்த்து இந்த ஒரு படத்தில் மட்டும் செலுத்தியிருக்கிறேன். அதற்காக இன்று வரை எனக்கு ஏற்பட்ட அவமானங்களும், சோதனைகளும், வேதனைகளும் சொல்லில் அடங்காதவை.

கருவை உருவாக்கி அதை கதையாக்கி பின் அதற்கு திரைக்கதை அமைத்து ஒவ்வொரு தயரிப்பாளராகத் தேடித் பிடித்து, ஒவ்வொரு நடிகரையும் சந்திக்க அலைந்து ஒரு வழியாக அவர்களைப் பிடித்து படப்பிடிப்பு தொடங்குவதே, மக்களின் வாழ்விலிருந்தே படைப்புக்களை உருவாக்கும் என் போன்றவர்களுக்கு பெரும் போராட்டம் தான்.

“களவாடிய பொழுதுகள்” திரைப்படத்தை திரைக்குக் கொண்டு வர நான் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சிகளும், சந்தித்த சம்பவங்களும், மீண்டும் நினைக்க விரும்பாத மனிதர்களும், வெளியில் காண்பித்துக்கொள்ளாத அவமானங்களும் பட்டியலிட முடியாதவைகள்.
 
திரைப்படக்கலையின் மூலம் எதையாவது இந்த மக்களுக்கு சொல்லலாம் என நினைத்துத்தான் இந்தத் துறைக்கு வந்தேன். பணம் மட்டுமே போதும் என நினைத்திருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆண்டுக்கு இரண்டு படங்களை எடுத்து பெரும் பணக்காரனாக மாறியிருப்பேன்! எப்படியாவது வாழ்ந்தால் போதும் என நினைக்காமல் இப்படித்தான் வாழ வேண்டும் என நினைப்பதால்தான் ஒவ்வொரு படைப்புக்காகவும் தொடர்ந்து முதல் படம் போலவே உழைத்து போராடிக் கொண்டிருக்கிறேன்.
 
ஒவ்வொரு மனதோடும் சென்று அவர்களோடு உரையாட வேண்டிய இப்படத்தின் கதைப் பாத்திரங்கள் உயிரற்றவர்களாக கிடந்தார்கள்! இனி உங்கள்  மனதோடு அவர்கள் பேசுவார்கள். அவர்களின் நினைவுகள் சில நாட்களுக்கு உங்களை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்! படம் பார்த்தப்பின் எத்தனைப்பேர் ஒருவருக்கும் தெரியாமல் யார் யாரைத்தேடி அலைவார்கள், சந்திக்க முயல்வார்கள், கைப்பேசியில் பேச முயல்வார்கள், தனிமையில் அழுவார்கள் என்பதெல்லாம் நடக்கத்தான் போகிறது.

நான் சிறைப்படுத்தப்பட்ட இத்தனைக் காலங்கள் எல்லாவற்றையும் எனக்குள்ளேயே புதைத்து அழித்துக்கொள்ள முயல்கிறேன்! அதற்காக முயன்று கொண்டிருக்கிறேன்!

எது எப்படியோ எனக்கு விடுதலை கிடைத்து விட்டது.  நான் கூறியபடி என் பொற்செழியனும், ஜெயந்தியும் உங்கள் மனதோடு இனி  பேசுவார்கள்; தொந்தரவு செய்வார்கள்! அப்போது என்னைத்திட்டுங்கள். அதுதான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெற்றதற்காக எனக்கு நீங்களெல்லாம் அளிக்கும் ஆறுதல்!

அன்போடு
தங்கர் பச்சான்
29.12.2017
அதிகாலை.

by Swathi   on 02 Jan 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது
நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ்  திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்
டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது..
பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார் பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்
தேசிய திரைப்பட விருதுகள் 2023 தேசிய திரைப்பட விருதுகள் 2023
ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன் ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன்
லைசென்ஸ்  திரைப்படத்தின்  இசை & ட்ரெய்லர்  வெளியீட்டு விழா!... லைசென்ஸ் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!...
முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம் முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.