LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அனிமேஷன் திரைப்படமாகிறது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' !

வரலாற்று நாவல்களில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதைக்கு நட்சத்திர தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.

இவ்வளவு செல்வாக்கு பெற்ற அந்தப்படைப்பை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக 'பொன்னியின் செல்வன்' அனிமேஷன் திரைப்படமாகிறது..

இரண்டரை மணிநேரம் ஓடக் கூடிய படமாக இது உருவாக இருக்கிறது. இதை தயாரிக்க இருப்பவர் பொ. சரவணராஜா.

அவரைச் சந்தித்த போது ...

இத்தனை நாவல்கள் இருக்கும் போது குறிப்பாக பொன்னியின் செல்வனை படமாக்கக் காரணம் என்ன?

அதற்கு அவ்வளவு வாசகர்கள் ,ரசிகர்கள் இருக்கிறார்கள். . தனிப்பட்ட முறையில் எனக்கு அந்நாவல் பிடிக்கும். 2500 பக்கங்கள் கொண்டது என்றாலும் நானே ஐந்து முறை படித்துள்ளேன் அவ்வளவு அற்புதப் படைப்பு அது. எனவே அதை எடுத்துக் கொண்டேன்.இவ்வளவு செல்வாக்கு பெற்ற அந்தப்படைப்பை அடுத்த கட்டத்துக்குக் எடுத்துச் செல்லும் முயற்சிதான் 'பொன்னியின் செல்வன்' அனிமேஷன் திரைப்படம்.

இன்றைய வணிகமய, உலகமயச் சூழலில் வரலாற்றுப் படைப்புகள் ரசிக்கப் படுமா?

சொல்கிற விதத்தில் சொன்னால் ரசிக்கவே செய்வார்கள். இதை இக்காலச் சூழலில் எடுக்க உகந்த காரணங்கள் உண்டு. தற்போதைய தமிழ் இளைஞர்கள் தமிழின்பெருமையை, தமிழரின் பெருமையை வரலாற்றை மரபை ,பாரம்பரியத்தை அறியாமல் இருக்கிறார்கள்.இதை அப்படியே விட்டால் எல்லாம் மறக்கப்பட்டு விடும்.

தமிழக வரலாற்றை எடுத்துக் கொண்டால் சோழர்கள் ஆண்ட காலம், தமிழகத்தின் பொற்காலம். சோழமன்னர்களில் வீரத்திலும் மக்கள் நலனிலும் இறை பக்தியிலும் சான்றோரைப் போன்றுவதிலும் தன்னிகரற்று விளங்கிய மன்னன் இராஜாராஜசோழன். அவன் அரியணை ஏறிய வரலாற்றை அழகுடன் வரலாற்று உண்மைகளுடன் கல்கியால் புனையப்பட்ட காவியம்தான் பொன்னியின் செல்வன். இதைப் படைப்பதன் மூலம் அன்றைய தமிழரின் வரலாறு பாரம்பரியம் விளங்கும் என்று நம்புகிறேன்.

இன்றைய இளைய சமுதாயம் பழம் பெருமையை புறக்கணிக்கிறதே..?

இன்று இளைய சமுதாயத்தினரில் பலர் வரலாறு அறியாமல் இருக்கிறார்கள்.  இந்த முயற்சியின் மூலம் நாங்கள் கூறுவது தமிழர் பெருமைதான். இது வெறும் தற்பெருமையல்ல; தக்க பெருமைதான் என்று உணர வைப்போம். இன்றைய தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் தான் இதை 2டி அனிமேஷன் திரைப்படமாக எடுக்கிறோம்.

அனிமேஷன் படமாக்கும் போது எதை முக்கியமாக கவனிக்க வேண்டியிருக்கிறது?

'பொன்னியின் செல்வன்'காவியம் 2500 பக்கங்கள் கொண்டது.  

'பொன்னியின் செல்வன் கதையின் கருத்தும் கரையாமல் ,நோக்கும் போக்கும் நோகாமல் ,தகவல்கள் தடுமாறாமல் அதே சமயம்  சுவாரஸ்யம் குன்றாமல் சுருக்கியும் உருவாக்க இருக்கிறோம்.

தொழில்நுட்பத்தில் இதை எப்படி செழுமை செய்வீர்கள்?

சாதாரண திரைப்படமாக எடுக்கும் போது செலவு , பலவிதமான கேரக்டர்கள் உள்பட பல தடைகள் குறுக்கே நிற்கும். அனிமேஷனாக உருவாக்கும் போது அதன் எல்லையும் சுதந்திரமும் பரந்தது. தொழில்நுட்ப சாத்தியங்களில் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு சிறப்பாக காட்டி செழுமை சேர்க்க முடியும். படத்தின் அனிமேஷன் இயக்குநர் மு.கார்த்திகேயன் இத்துறையில் இருபது ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவர். உருவங்கள். பாத்திரங்கள்,குணச்சித்திரங்கள் உருவாக்குவதில் தனக்கென தனிப்பெயர் பெற்றிருப்பவர்.  அவர்தான் இதை அனிமேஷன் வடிவத்தில் இயக்குகிறார். இம்முயற்சியில் திரைப்பட ஊடக நண்பர்களும் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்களின் பக்கபலம் திரைவடிவ முயற்சிக்கு பெரிதும் துணை நிற்கும்.

என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும்?

நாவல் வடிவத்தை திரைப்பட வடிவம், அதுவும் 2 டி அனிமேஷன் திரைப்பட வடிவமாக மாற்றுவதே பெரிய சவால். கதை படிக்காதவர்களையும் படம் பார்க்கும்படி சுவாரஸ்யப் படுத்துவது அடுத்த பெரிய சவால்தான். எம் முடன் அத்துறை வல்லுநர் குழு இருப்பதால் இதை எங்களால் எதிர்கொள்ள முடியும். கல்கியே ஓர் இயக்குநர். அவரே ஒரு கலை இயக்குநர். அவரே ஒரு வசன கர்த்தா. அவரே ஒரு திரைக்கதையாசிரியர்,காட்சிப் படுத்துபவர் என்பதை அந்தக் கதை படித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். எனவே எங்களது பல வேலைகளை அவரே செய்து விட்டார். வடிவ மாற்றம் ஒன்றே பெரிய வேலை. படத்திற்கான இசை, வசனம் போன்றவற்றிற்கு மட்டுமல்ல பின்னணிக் குரலுக்கும் கூட பிரபலமானவர்களை- தமிழ் திரை நட்சத்திரங்களை அணுக இருக்கிறோம். வளமான தமிழகம் ஆதரவுடன் 'பைவ் எலிமெண்ட்ஸ்'  நிறுவனம்தான் படத்தைத் தயாரிக்கிறது.

அது என்ன வளமான தமிழகம் அமைப்பு? அதைப்பற்றி சொல்லுங்களேன்?


இது ஒரு தொண்டு நிறுவனமாகும். பல்வேறு நடவடிக்கைகளை , கடந்த 5 வருடங்களாக செய்து வருகிறது.

இதன் ஒரு அம்சம்,

தமிழ் இளைஞர்களிடம் தன்னம்பிக்கை வளர்ப்பது எப்படி?தகவல் தொடர்பு திறனை வளர்ப்பது ?தனக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றலை இனம் காண்பது எப்படி.?. என்றெல்லாம் பல ஆண்டுகளாக தொலைக்காட்சிகள் மூலம் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம்.ஊரகப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்றும் பயிற்சிகள், உரைகள், பயிற்சிப் பட்டறைகள் என்றும் நடத்தி வருகிறோம்.

மற்றொரு அம்சமாக,

ஈழத்தமிழர் முன்னேற்ற ஆதரவு முன்னெடுப்புகளிலும் பின்னணியில் இருந்து பங்கெடுத்திருக்கிறது.  இந்த தொண்டு நிறுவனமான வளமான தமிழகம் ஆதரவுடன் 'பைவ் எலிமெண்ட்ஸ்'  நிறுவனம்தான் படத்தைத் தயாரிக்கிறது.

அனிமேஷன் படங்களில் 'பொன்னியின் செல்வன்' எந்த அளவுக்கு மாறுபட்டு வேறுபட்டு இருக்கும்?

இந்த அனிமேஷன் படம் நிச்சயமாக தரத்தில் மேம்பட்டு இருக்கும். சமீபத்தில் வந்த நம் நாட்டில் உருவான பல படங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பின்னடைவைக் காண்கிறேன்.   கடந்த 10 வருடங்களில் , அனுமான், 2D அனிமேஷன் படம் நல்ல வெற்றியடைந்தது.  தெனாலிராமன் , மற்றும் சோட்டா பீம் போன்ற நீண்ட தொலைக்காட்சி தொடர்களும் , நல்ல வெற்றி பெற்றன. உலகத்தரம் வாய்ந்த Disney யின் 'லயன் கிங்' அனிமேஷன் படத்திற்கு எவ்விதத்திலும் 'பொன்னியின் செல்வன்' குறையாமல் இருக்கும்.,

Ponniyin Selvan Animation Movie Launch Stills
by Swathi   on 09 Dec 2014  1 Comments
Tags: Ponniyin Selvan   Kalki   கல்கி   பொன்னியின் செல்வன்   அனிமேஷன் படம்        
 தொடர்புடையவை-Related Articles
ஆங்கில காமிக்ஸ் புத்தக வடிவில் பொன்னியின் செல்வன் நாவல்... ஆங்கில காமிக்ஸ் புத்தக வடிவில் பொன்னியின் செல்வன் நாவல்...
அனிமேஷன் திரைப்படமாகிறது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' ! அனிமேஷன் திரைப்படமாகிறது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' !
கருத்துகள்
03-Dec-2017 07:15:59 செல்லப்பா said : Report Abuse
பிரமிக்க வைக்கிறது உங்களின் செயல்கள்.உங்களின் முயற்சிகள் யாவும் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்தி இறைவனின் அருள் உங்களுக்கு துணை புரிய பிராத்தனை செய்கிறேன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.