LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 845 - நட்பியல்

Next Kural >

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் - புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்; கசடு அற வல்லதூஉம் ஐயம் தரும் - கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன்கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும். (வல்லது என ஏழாவது இறுதிக்கண்தொக்கது, 'உண்டாயின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயம், 'அது வல்லர் என்பதூஉம் இவ்வாறு கொல்லோ' என்பது.)
மணக்குடவர் உரை:
தாம் உய்யக் கல்லாதவற்றைக் கற்றாராக மேற்கொண்டொழுகல், குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும். இது கல்லாததனை மேற்கொள்ளுதல் புல்லறிவென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கல்லாத மேற்கொண்டு ஒழுகல்-புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையுங் கற்றதாகக் காட்டிக்கொண்டு ஒழுகுதல்;கசடு அற வல்லதும் ஐயம் தரும்-அவர் பிழையின்றிக் கற்றுத் தேர்ந்த நூலறிவு பற்றியும் பிறர்க்கு ஐயுறவை யுண்டு பண்ணும். 'கசடு' ஐயந்திரிபு குறைவுகள். குறைவாவது , பாம்பைப் பாம்பென்றறிந்தும் உயிருள்ளதா செத்ததா என்றும் , நச்சுப்பாம்பா நற்பாம்பா என்றும், பிறவாறு நிறைவுற அறியாமை. 'ஐயம்' இவர் தேர்ச்சி பெற்றதாகச் சொல்லப்பெறும் துறையறிவும் இத்தகையதுதானோ எனக் கருதுதல். 'வல்லதூஉம்' இன்னிசையளபெடை. உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
கலைஞர் உரை:
அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.
Translation
If men what they have never learned assume to know, Upon their real learning's power a doubt 'twill throw.
Explanation
Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.
Transliteration
Kallaadha Merkon Tozhukal Kasatara Valladhooum Aiyam Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >