LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை பாடல்கள்

கல்லும் மலையும் குதித்து வந்தேன் -கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை

கல்லும் மலையும் குதித்து வந்தேன் - பெருங்

காடும் செடியும் கடந்து வந்தேன்;

எல்லை விரிந்த சமவெளி - எங்கும் நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்.

 

ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல

ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;

ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.

 

ஆயிரம் காலால் நடந்து வந்தேன் - நன்செய்

அத்தனையும் சுற்றிப் பார்த்து வந்தேன்;

நேயமுறப் புன்செய்க் காட்டிலும் - அங்கங்கு

நீரை இறைத்து நெடுக வந்தேன்

 

கட்டும் அணையேறிச் சாடி வந்தேன்;-அதன்

கண்ணறை தோறும் நுழைந்துவந்தேன்;

திட்டத் திடர்களும் சுற்றிவந்தேன்-மடைச்

சீப்புகள் மோதித் திறந்துவந்தேன்.

 

காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன்-அதில்

கண்குளிரப் பயிர் கண்டுவந்தேன்!

ஆயும் மலர்ப்பொழில் செய்துவந்தேன்-அங்கென்

ஆசை தீரவிளை யாடிவந்தேன்.

 

பஞ்சை அரைத்துநூல் நூற்றுவந்தேன்-சீனி

பாகமாய்ச் செய்து கொடு்த்துவந்தேன்;

நெஞ்சம் உலர்ந்த நெடுநகரில்-குழாய்

நீராகவும் சென்று பாய்ந்து வந்தேன்.

 

மாங்கனி தேங்கனி வாரிவந்தேன் - நல்ல

வாச மலர்களும் அள்ளி வந்தேன்;

தீங்கரும் பாயிரம் தள்ளி வந்தேன் - மிகத்

தேனும் தினையுமே சேர்த்து வந்தேன்

 

அல்லும் பகலும் அலைந்து வந்தேன் - எங்கள்

ஆழி இறைவனைக் காண வந்தேன்;

நில்லும், எனக்கினி நேரமில்லை - இன்னும்

நீண்டவழி போக வேண்டும் அம்மா!

நில்லும், எனக்கினி நேரமில்லை - இன்னும்

நீண்டவழி போக வேண்டும் அம்மா!  (3)

by Swathi   on 22 Jul 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா
தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம் தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம்
பண்ணிசை விழா  -தொடக்க நிகழ்வை வட  அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது. பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு  பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
கருத்துகள்
13-Nov-2019 02:51:32 ராஜி said : Report Abuse
சோங் டவுன்லோட்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.