LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கால்நடை - மீன் வளர்ப்பு Print Friendly and PDF
- நாட்டு மாடு வளர்ப்பு

கால்நடைகளுக்கு தீடிரென ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான முதலுதவிகளும்...

கால்நடைகளை வைத்துள்ள விவசாயிகள் கால்நடைகளுக்கு தீடிரென ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு செய்யப்பட வேண்டிய முதலுதவிகள் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். கால்நடை மருத்துவர் வரும் வரை பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வேதனையைக் குறைத்து, பாதிப்பு மேலும் தீவிரம் அடையாமல் பார்த்துக் கொள்வது மற்றும் உயிர் காப்பதே முதலுதவி அளிப்பதன் முக்கிய குறிக்கோள்களாகும்.

கண்ணில் நீர் வடிதல் 

தூசி, முள் மற்றும் விதைகள் கண்ணில் விழுந்தால், எரிச்சல் உண்டாகி கண்ணில் நீர் வடியும், கண்ணில் நீர் வடிதலை நிறுத்துவதற்கு சுத்தமான விளக்கெண்ணெய் இரண்டு துளி கண்ணில் விட வேண்டும்.

இதனால் எரிச்சல் குறைந்து நீர் வடிவது குறையும். கண் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால், கால்நடை மருத்துவர் வரும் வரை கண்ணை சுத்தமான துணியினால் மூடி வைத்திருக்க வேண்டும்.

மடி காம்புகளில் காயம்

மடி மற்றும் காம்புகளில் ஏற்படும் புண்கள் மூலமாக கிருமிகள் மடிக்குள் நுழைந்து மடி நோயை ஏற்படுத்தி அதிக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனைத் தடுப்பதற்கு காயங்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.

பின்னர் போரிக் பவுடருடன் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் குழப்பி அந்தக் களிம்பைக் காயங்கள் மீது தடவி வர வேண்டும்.

குளம்புக் காயங்கள்

பாதிக்கப்பட்ட குளம்புப் பகுதியை நீர்; கொண்டு நன்கு கழுவி, குளம்பின் அடிப்பாகத்தினை நன்கு சோதிக்க வேண்டும். ஆணி, முள், கண்ணாடி துண்டு மற்றும் இது போன்றவை குளம்பில் குத்தியிருந்தால் அவற்றைக் கவனமாக அகற்ற வேண்டும்.

அப்பகுதியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். பின்பு அதன் மீது போரிக் பவுடர் அல்லது வேப்பெண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்த களிம்பை புண் ஆறும் வரை தடவி வர வேண்டும்.

காயங்கள்

காயம் உள்ள பகுதிகளை பொட்டாசியம் பெர்மங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். பின்னர் போரிக் பவுடர் அல்லது வேப்பெண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்த களிம்பை காயம் ஆறும் வரை தடவி வர வேண்டும்.

சில சமயங்களில், நம்முடைய கவனக்குறைவால், புண்கள் மீது ஈக்கள் அமர்ந்து முட்டையிடும். இதனால் புண்களில் புழுக்கள் உண்டாகிவிடும். இதற்கு, புழுக்களை முடிந்த அளவு கையால் எடுத்துவிட்டு, பொட்டாசியம் பெர்மாங்;கனேட் கலந்த நீரைக் கொண்டு நன்கு கழுவிய பின்னர் டர்பண்டைன் எண்ணேயில் நனைத்த துணியை புண்ணில் வைத்துவிட வேண்டும்.

அடுத்த நாள், துணியை எடுத்துவிட்டு காயத்தைக் கழுவிய பின்னர் வேப்பெண்ணெய், மங்சள் கலந்த களிம்பை, புண் ஆறும் வரை தடவி வரவேண்டும்.

நன்றி : நாட்டு மாடுகளை வளர்ப்போம் குழு.

by Swathi   on 25 Feb 2017  20 Comments
Tags: கால்நடை மருத்துவம்   கால்நடை   கால்நடை மூலிகை மருத்துவம்   Kalnadai Maruthuvam   Kalnadai Marunthu   Kalnadai Diseases     
 தொடர்புடையவை-Related Articles
கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு... கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...
கால்நடைகளுக்கு தீடிரென  ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான முதலுதவிகளும்... கால்நடைகளுக்கு தீடிரென ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான முதலுதவிகளும்...
நாட்டு மாடுகளை ஏன் வளர்க்க வேண்டும் - நாம் அறிய வேண்டிய ரகசியங்கள்... நாட்டு மாடுகளை ஏன் வளர்க்க வேண்டும் - நாம் அறிய வேண்டிய ரகசியங்கள்...
கருத்துகள்
28-Mar-2021 11:12:58 Prasanth said : Report Abuse
Ennudaya kandrukutty piranthu oru mathathil athavathu yesterday(27.03.2021) death aagi vittathu athan thai pasu paal surakamal kaththi konde irukirathu paal surakka enna seivathu
 
28-Mar-2021 11:12:56 Prasanth said : Report Abuse
Ennudaya kandrukutty piranthu oru mathathil athavathu yesterday(27.03.2021) death aagi vittathu athan thai pasu paal surakamal kaththi konde irukirathu paal surakka enna seivathu
 
23-Dec-2020 15:06:07 பழனிச்சாமி said : Report Abuse
,9மாத சினை மாடு நொண்டடுகிறது படுக்க முடியவில்லை இரண்டு நாள் முதல் வைத்தியம் கூறவும்
 
23-Nov-2020 13:19:28 Rajavrl said : Report Abuse
Enadhu kandru kutti pirandhu irandu Natkal dhan agiradhu...moochi adhigamaga vangu giradhu adharku enna seiyalam
 
20-Apr-2020 22:40:24 சுந்தர் said : Report Abuse
எனது பிறந்த 15நாள் ஆன காளை கன்று வாய் வழியாக சாணம் வருகின்றன. ..(வாய் அசைவு போட்டு கொண்டே இருக்கும் போது).இதற்கு தீர்வு இருந்தால் கூறுங்கள்
 
07-Apr-2020 09:26:37 Kani said : Report Abuse
Kannukuttiku nakkil pun neee vadikrathu marunthu sollavum
 
11-Mar-2020 03:50:31 அபிராமி said : Report Abuse
எனது மாட்டின் காலில் அடி பட்டு வீங்கி உள்ளது அதனால் நடக்கவே முடியவில்லை தயவுசெய்து மருந்து கூறுங்கள்
 
26-Jan-2020 12:24:59 Raj said : Report Abuse
உடம்பு புல்லா கட்டி போல வந்து பண் ஆகிறது என்ன செய்வது
 
19-Nov-2019 06:59:57 Balaaubramani said : Report Abuse
எனது மட்டிற்கு மூட்டு நழவிட்டது என்ன செய்வது
 
08-Aug-2019 02:47:52 சிலம்பரசன் said : Report Abuse
மாட்டு கன்றுக்குட்டிக்கு அதிகமாக மூச்சு வாங்குகிறது,
 
27-Jul-2019 17:50:16 Jaya gopal said : Report Abuse
மாட்டிற்கு மரு போன்று நிறைய இடத்தில் வருகிறது.. அந்த மறுவை முற்றிலும் நீக்க என்ன செய்வது...
 
10-Jul-2019 12:35:59 பனையழகன் said : Report Abuse
மாடு கீழே படுத்துவிட்டது.அதனால் எழுந்திருக்க முடியவில்லை என்ன காரணம் மற்றும் வைத்தியம் கூறவும் ஐயா
 
23-Jun-2019 00:36:08 Madhu said : Report Abuse
மாட்டுக்கு பொறை ஏறிடுச்சி னு சொல்லுறாங்க என்ன செய்வது.. இருமிட்டே இருக்கு..
 
12-May-2019 01:56:25 மோகன் said : Report Abuse
ஒரு கம்பிள் பால் குறைய காரணம் என்ன . சரி செய்யும் முரை என்ன
 
22-Apr-2019 11:31:57 elango said : Report Abuse
தேங்க்ஸ்
 
23-Mar-2019 06:32:05 R. Rajasingh said : Report Abuse
I want to know more about cattle disease management and food management. How to treat the animal when affected and it's precautions.
 
16-Jan-2019 03:59:50 குமாரசாமி said : Report Abuse
நாட்டு மாட்டு காளை கன்றுக்குட்டிக்கு ஒரு வயது சாணம் போடும்போது ரத்தம் கலந்து வருகிறது. இரண்டு நாட்களாக இது வருகிறது. இதற்கு இயற்கை வைத்திய முறையில் தீர்வு தாருங்கள் .
 
08-Dec-2017 09:52:43 RAJESH said : Report Abuse
எனக்கு நாட்டு மாடு வளர்க்க விருப்பம் அதன் அடிப்படை பராமரிப்பு பற்றி தெரிய இது உதவுகிறது நன்றி அழிவின் உள்ள நாட்டு கிடாரி கன்று வளர்க்க முடிவு செய்த்துள்ளேன் இடம் செங்கல்பட்டு
 
08-Dec-2017 09:51:03 RAJESH said : Report Abuse
எனக்கு நாட்டு மாடு வளர்க்க விருப்பம் அதன் அடிப்படை பராமரிப்பு பற்றி தெரிய இது உதவுகிறது நன்றி அழிவின் உள்ள நாட்டு கிடாரி கன்று வளர்க்க முடிவு செய்த்துள்ளேன் இடம் செங்கல்பட்டு
 
08-Dec-2017 09:50:51 RAJESH said : Report Abuse
எனக்கு நாட்டு மாடு வளர்க்க விருப்பம் அதன் அடிப்படை பராமரிப்பு பற்றி தெரிய இது உதவுகிறது நன்றி அழிவின் உள்ள நாட்டு கிடாரி கன்று வளர்க்க முடிவு செய்த்துள்ளேன் இடம் செங்கல்பட்டு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.