LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

டிஜிடல் தொழில்நுட்பத்தில், புதிய காட்சிகளுடனும் மீண்டும் வெளியாகிறது காமராஜ் திரைப்படம் !!

பழைய படங்களை ரீமேக் செய்வதும், அல்லது அதை புதுபித்து வெளியிடுவதும் தான் இன்றைய தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட். இந்த வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி, தமிழக மக்களின் நன்மதிப்பையும், அரசின் பாராட்டுகளையும் பெற்ற, காமராஜரின் வரலாற்றைக்கூறும், "காமராஜ்" திரைப்படம், டிஜிடல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, சில மாற்றங்களுடன் விரைவில் வெளியாக இருக்கிறது. 

 

காமராஜர் :

 

காமராஜர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 முதல் 1963 வரை தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவரும் இவரே. காமராஜர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். மேலும், நம் நாட்டில், ஊழலே செய்யாதவர்  என்று விரல் நீட்டி சொல்லக் கூடியவர்களை விரல் விட்டே எண்ணி விடலாம் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் காமராஜர் ..அதுவும் அவர் தமிழக மண்ணின் மைந்தர் என்பதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். 

 

101 ருபாய் சொத்துடைய முதலமைச்சர் :

 

கடந்த 1975 -ல் காமராஜர் இறந்த போது எஸ்டேட் டாக்ஸ் என்ற அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் அவரது சொத்து மதிப்பை கணக்கிட வந்தனர் அப்போதைய நடைமுறை அது.

அப்படி வந்தவர்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து இவர் ஏழை இல்லை… பரம ஏழை! மூன்று முறை முதல்வராக இருந்த இவர் இப்படியொரு ஏழையாக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை என்று ஆச்சர்யப்பட்டனர். காரணம் வாடகை வீடு,சட்டைப் பையில் 101 ரூபாய் மட்டுமே அவரது சொத்தாக இருந்தது, அப்படிப்பட்டவரின் வாழ்கையை ரமணா கம்யூனிகேசன்ஸ் என்ற நிறுவனம் 

“காமராஜ்”  என்ற பெயரில், 2004 ம் ஆண்டில் திரைப்படமாக உருவாக்கியது. இந்த படத்திற்கான வரவேற்பு பெருகவே, படத்தை, ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்ப்பு செய்தது ரமணா கம்யூனிகேசன்ஸ் நிறுவனம். 

 

தற்போது, “காமராஜ்” படத்தை தமிழில் மெருகேற்ற நினைத்த, இயக்குனர். அ. பாலகிருஷ்ணன், அதற்கான வேலைகளை மேற்கொண்டுவருகிறார். இந்த படத்தில் 15 புதிய காட்சிகளை இணைக்க நினைத்த படக்குழு, காமராஜராக இப்படத்தில் நடித்த ரிச்சர்ட் மதுரம் இறந்து விட்டதால் அவரது மகன் பிரதீப் மதுரம் காமராஜராகவும், பெரியார் வேடத்தில் விஜயகுமாரம் நடிக்க வைத்திருக்கிறார்கள். 

 

இளையராஜா இசையில், டிஜிடல் தொழில்நுட்பத்தில், மீண்டும் நம் அபிமான திரையரங்குகளில் வலம் வரப்போகிறார் "காமராஜர்".. 

by Swathi   on 28 Oct 2013  0 Comments
Tags: காமராஜ்   காமராஜர்   டிஜிடல் தரம்   படிக்காத மேதை   முதலமைச்சர்   Kamaraj   Kamarajar  
 தொடர்புடையவை-Related Articles
போர்க்களம் களம் கண்ட காமராசர்!! போர்க்களம் களம் கண்ட காமராசர்!!
காமராஜரின் கண்ணியம் !! காமராஜரின் கண்ணியம் !!
கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !! கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !!
டிஜிடல் தொழில்நுட்பத்தில், புதிய காட்சிகளுடனும் மீண்டும் வெளியாகிறது காமராஜ் திரைப்படம் !! டிஜிடல் தொழில்நுட்பத்தில், புதிய காட்சிகளுடனும் மீண்டும் வெளியாகிறது காமராஜ் திரைப்படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.