LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

கண் இல்லாதவர்கள் அதிகமா?

     ஒருநாள் பீர்பாலிடம், ‘உலகத்தில் கண் உள்ளோர் அதிகமா? கண் இல்லாதவர்கள் அதிகமா’ என்னும் கேள்வியைக் கேட்டார் அக்பர்.உலகத்தில் கண் உள்ளோரே அதிகமாக வசிக்கிறார்கள்; ஆனால் பீர்பாலோ ‘கண் இல்லாதவரே அதிகமாக வசிக்கிறார்கள்” என்று கூறினார். அவருடைய கூற்றுக்கு ஆதாரம் காட்டும்படி கேட்டுக் கொண்டார் அக்பர்.மறுதினம், ஒரு துணியைக் கொண்டு வந்து, அரண்மனையில், தன் தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டார் பீர்பால். ஜனங்களைப் பார்த்து, ‘இது என்ன?’ என்று கேட்டார்.‘தலைப்பாகை’ என்று கூறினர்.


     தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து, தம் கழுததைச் சுற்றிப் போட்டுக் கொண்டு, ‘இது என்ன?’ என்று கேட்டார் மறுபடியும். ‘மப்ளர்’ (கழுத்துக்குட்டை – சவுக்கம்) என்று கூறினார்கள். கழுத்தைச் சுற்றியிருந்த துணியை எடுத்து, தம் உடலில் உடுத்திக்கொண்டு, ‘இது என்ன?’ என்று கேட்டார். ‘வேஷ்டி’ என்று கூறினார்கள்.


     அரசரைப் பார்த்து ‘பாருங்கள் மன்னர் பெருமானே! இந்த ஜனங்களுக்கு கண்கள் இருந்தும் உண்மைப் பொருளை காணவில்லை. இது ஒரு துணிதான்! ஆனால், பல வழிகளிலும் இது உபயோகமாகின்றது. ஏனென்றால், ஜனங்கள் வெவ்வேறு பொருளாகக் கருதி, வெவ்வேற பெயர் வைத்திருக்கிறார்கள். உலகிலுள்ள ஜனங்கள் யாவரும் உண்மையான பொருளைத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அவர்களை கண் இல்லாதவர்கள் என்று நான் கூறுவதோடு, நாட்டிலே அவர்களே அதிகமாக இருப்பதாகக் கூறுகிறேன்.” என்றார் பீர்பால்.

by kalaiselvi   on 07 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.