LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1171 - கற்பியல்

Next Kural >

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலானன்றோ; கண் தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? ('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது'? என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி? இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(நின் கண்கள் கலங்கித் தம் அழ நீ அழுதல் கூடாதென்ற தோழிக்குச் சொல்லியது) தாம்காட்ட தண்டாநோய் யாம் கண்டது-தாம் அன்று எம் காதலரை எமக்கு வலியக் காட்டினதினாலன்றோ இத் தணியா நோயை யாம் அடைந்து; கண் தாம் கலுழ்வது எவன்கொல்-அங்ஙனமிருக்கவும், இன்று தமக்கு அவரைக் காட்டச் சொல்லி என் கண்கள் என்னை வேண்டி யழுவது என்ன கருத்தொடு? எமக்குத் தெரியவில்லையே! இன்று அன்றுபோல் தாமே காட்டுவதல்லது யாம் காட்டுவது எங்ஙனம் என்பதாம். 'காட்ட' என்பதற்குரிய செயப்படுபொருள்வருவிக்கப்பட்டது. 'கொல்' ஐயம். 'ஓ' அசைநிலை.
கலைஞர் உரை:
கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?.
சாலமன் பாப்பையா உரை:
தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?.
Translation
They showed me him, and then my endless pain I saw: why then should weeping eyes complain?.
Explanation
As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).
Transliteration
Kandhaam Kaluzhva Thevankolo Thantaanoi Thaamkaatta Yaamkan Tadhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >