|
|||||
தமிழக மாநிலங்களவை தேர்தல் - அதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,தி.மு.க ஆகிய கட்சிகள் வெற்றி ! |
|||||
தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குபதிவில் மொத்தமுள்ள 234 எம்எல்ஏக்களில் பாமகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தவிர மீதமுள்ள அனைத்து வாக்குகளும் பதிவாகின. 231 வாக்குகளும் சுமார் இரண்டேகால் மணி நேரத்தில் பதிவாகின. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், வா.மைத்ரேயன், டி.ரத்னவேல் ஆகியோரும், அதிமுக ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றுள்ளார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தேமுதிக இந்த தேர்தலில் தோல்வியே அடைந்தது. அர்ஜுனன் - 36 வாக்குகள் லட்சுமணன் 36
மைத்ரேயன் 36
ரத்னவேல் 36
ராஜா 34
கனிமொழி 31
இளங்கோவன் 22
லட்சுமணன் - 36 வாக்குகள் மைத்ரேயன் - 36 வாக்குகள் ரத்னவேல் - 36 வாக்குகள் ராஜா - 34 வாக்குகள் கனிமொழி - 31 வாக்குகள் இளங்கோவன் - 22 வாக்குகள் |
|||||
by Swathi on 27 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|