LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை பாடல்கள்

கனியிடை ஏறிய சுளையும் - புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! -உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !

-புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்

பாடலைப்பாடிய சமர்ப்பா குமரன் அவர்களைப்பற்றி அறிய:-
https://muelangovan.blogspot.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88&fbclid=IwAR0CjgQ3jyZykW5hXpMBsDS_oA-6N6lTC-7_YA0DsLHzkg2FAenS1_tYImg

 

Video:

https://www.facebook.com/soundar.jeyabal/videos/10210913733599291/

by Swathi   on 11 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
முத்தமிழில் இசையை கற்க ஆர்வமாகிவரும் வடஅமெரிக்கத் தமிழர்கள்.. முத்தமிழில் இசையை கற்க ஆர்வமாகிவரும் வடஅமெரிக்கத் தமிழர்கள்..
தமிழிசையை இணையம் வழியே கற்கும் அமெரிக்கத் தமிழ் குழந்தைகள் .. தமிழிசையை இணையம் வழியே கற்கும் அமெரிக்கத் தமிழ் குழந்தைகள் ..
அ.இர.ரகுமான் அறக்கட்டளை” சார்பாக “கருணாமிர்தசாகரம்” இணையதளம் அ.இர.ரகுமான் அறக்கட்டளை” சார்பாக “கருணாமிர்தசாகரம்” இணையதளம்
அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் தமிழிசைக்கான பாடநூல் வெளியிடப்பட்டது.. அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் தமிழிசைக்கான பாடநூல் வெளியிடப்பட்டது..
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் -வள்ளலார் (திருவருட்பா) எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் -வள்ளலார் (திருவருட்பா)
அற்புதம் அற்புதமே... பாடல், திருபுவனம் G.ஆத்மநாதன் அற்புதம் அற்புதமே... பாடல், திருபுவனம் G.ஆத்மநாதன்
மாசறு பொன்னே வலம்புரி முத்தே -சிலப்பதிகாரம் மாசறு பொன்னே வலம்புரி முத்தே -சிலப்பதிகாரம்
இனிமைத் தமிழ்மொழி எமது –பாரதிதாசன் இனிமைத் தமிழ்மொழி எமது –பாரதிதாசன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.