LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்!

சிறுநீரகக் கோளாறால் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல கன்னட நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்ப்ரீஷ் காலமானார். 

கன்னட சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் அம்ப்ரீஷ் (வயது 66), இவர்  1972ல் வெளியான ‘நாகரஹாவு’ என்ற கன்னடப் படத்தில் சிறு வேடத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். பின்னர் கதாநாயகனாக பல வெற்றிப்படங்களை கொடுத்தார்

மொத்தம் 208 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தவர். கன்னட சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர் விஷ்ணுவர்த்தனுக்குப் (230) பிறகு 2வது இடத்தில் அம்ப்ரீஷ் உள்ளார். இவர், நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பிரியா’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். மேலும், 1994ல் காங்கிரசில் இணைந்து அரசியலில் அடியெடுத்து வைத்த அவர், மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்பியாகவும், 2006 முதல் 2008 வரை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். 

2008ல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயம்அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், 2013 முதல் 2016 வரை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மாநில வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
இந்த நிலையில், சிறுநீரகக் கோளாறு, சுவாசக் கோளாறு காரணமாக பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.  

அவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேவகவுடா, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கன்னட நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அம்ப்ரீஷ், நடிகர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பராவார்.அம்ப்ரீசின் மனைவி சுமலதா, தமிழ் திரைப்பட நடிகை. இவர்களுக்கு அபிஷேக் என்ற ஒரு மகன் உள்ளார். 

by Mani Bharathi   on 25 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு! சர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு!
"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
எழுமின் படம் பார்க்க  மாணவர்களுக்கு சலுகை! எழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை!
வண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார்! வண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார்!
இளையராஜாவின் பாடல்களை இனி மேடையில் பாடுவேன்:  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி இளையராஜாவின் பாடல்களை இனி மேடையில் பாடுவேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி
மேற்குத் தொடர்ச்சி மலை – திரைப்படம் மேற்குத் தொடர்ச்சி மலை – திரைப்படம்
மக்களிசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!! மக்களிசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!!
உன்னை காணாத... பாடல் புகழ் கேரளா தோட்ட தொழிலாளிக்கு கிடைத்தது பாடகர் வாய்ப்பு... உன்னை காணாத... பாடல் புகழ் கேரளா தோட்ட தொழிலாளிக்கு கிடைத்தது பாடகர் வாய்ப்பு...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.